Admin · June 26 at 12:38 PM
அருமையான சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்த மனத் திருப்தியை கடந்த ஒரு மாத காலமாகத் தந்து கொண்டிருக்கிருக்கிறது 'வெள்ளி விரல்'. தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதையும் யதார்த்தமான சம்பவங்களை விவரிப்பதால் சுவாரஸ்யமாக இருப்பதோடு, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் அரசியல் மற்றும் நம்பிக்கைகளை வாசகர்கள் முன் எடுத்துரைப்பதால் இத் தொகுப்பு தவிர்க்க முடியாத ஒரு தொகுப்பாகவும் இருக்கிறது.
அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரராகிய எழுத்தாளர் ஆர்.எம். நெளசாத் வெகுவாகக் கொண்டாடப்பட வேண்டியவர். அபாரமான எழுத்து நடை, வாசகர்களைத் தன்பால் எளிதாக ஈர்த்தெடுக்கிறது.
நண்பருக்கும் வாசிக்கக் கொடுத்து, அவரும் வாசித்து முடித்த பின்னர் தொகுப்பு குறித்து வெகுநேரம் உரையாடினோம். ஒவ்வொரு சிறுகதையும் பிராந்தியத் தமிழில், பேச்சு நடையில் இருப்பதால் இலங்கையின் கிழக்கு மாகாண வாசகர்களைத் தாண்டி பிறரால் இக் கதைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்பது நண்பரின் கருத்து. உண்மைதான். இந்திய மற்றும் பிற தேச வாசகர்களுக்கு இத் தொகுப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் கதைக் களனுக்கு ஏற்ப அந்தப் பிராந்தியத் தமிழ் அத்தியாவசியமானதாக எனக்குத் தோன்றுகிறது. அம்மொழி நடை, கதைகளை மனதுக்கு இன்னும் நெருக்கமாக்குவதாக உணர்கிறேன்.
ஆர்.எம். நெளசாத், இலங்கையின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். 'வெள்ளி விரலை'த் தொடர்ந்து அவரது 'நட்டுமை', 'கொல்வதெழுதுதல்' தொகுப்புக்களை வாசிக்கவென எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் நிறைய எழுத அவருக்கு அனைத்தும் சாதகமாக அமையட்டும்.
- எம்.ரிஷான் ஷெரீப்
Mumthas Hafeel தீரனின் கதைகளில் நடப்பியலும் புதுமையும் இரண்டுமே இருக்கின்றன.
மருதூர் ஜமால்தீன் வெள்ளிவிரல்சிந்தையில் நிறைந்த குரல்
