Friday, October 27, 2023

சாகுந்தலம்-(வெள்ளிவிரல் சிறுகதை-12)

  சாகுந்தலம்.

 வைகுந்தன் அதிகாலையிலேயே எழுந்து விட்டான். இலத்திரனியல் கடிகாரமும்ää கலண்டரும் 10. 12. 3998. புதன் அதிகாலை 05:28:19 என்றன. வைகுந்தனுக்கு இன்று முக்கியமான நாள். காரணம் சகுந்தலைக்கு இன்று பிறந்த நாள். அவள் பிறந்து இன்றுடன் பதினெட்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. வைகுந்தன் சகுந்தலையை மிகவும் நேசிக்கின்றான். இது பற்றிக் கவலைப்பட ஒருவருக்கும் அக்கறையில்லாவிட்டாலும்ää பேராசிரியர் மஹமட் நவ்ஸாத் இதனை உள்ளுர விரும்;பத்தானில்லை. பரவாயில்லை. எத்தனை ஆயிரசகத்திர வருடங்கள் கழிந்தாலும்ää மானுடமனம் பொறாமை உணர்வை இழந்துவிடாது. வைகுந்தன்ää சகுந்தலைக்கு இன்று ஒரு பரிசு கொடுக்கவுள்ளான். விநோதமான பரிசு. அவளால் மறக்க முடியாத பரிசு. காதல் பரிசு.

 குக்கூ..வ்க்..

 தொலைக்காட்டி கூப்பிட்டது. வைகுந்தன் ஆளியை அழுத்தினான். திரையில் பேராசிரியர் தோன்றி    அழகான காலை! என்றார். பதில் சொன்னான்.

 

ஆராய்ச்சிக் கூடம் 231ல் இன்று உனக்கு  முக்கிய வேலை. திரும்பி வரத் தாமதமாகும். தேவையான உணவு மாத்திரைகளுடன் தயாராக வா.. என்று கூறி உடன் மறைந்தார். வைகுந்தன் மறுப்பேதும் சொல்லாது  தயாரானான். மறுப்புகள் அங்கீகரிக்கப்படுவதில்லை. தானானகவே தேவையான உணவுக்கதிர்களை உட்செலுத்தினான். தெம்பு வந்தது.  போகத் திரும்பினான். மறுபடி தொலைக்காட்டி கூப்பிட்டது.

 

கூ..க்கூவ்க்..

 

இம்முறை திரையில் சகுந்தலை.!  உடன் பரவசமானான்.

 

தயாராகி விட்டாயா என் சக பயனியே..? என்று  சிரித்தாள்.

 

இனிதாய் வாழ்த்துக்கள்..! இன்று நீ உற்பத்தியாகி பதினெட்டு வருடங்கள்.! அதற்காக..

 

நன்றி..! இன்று ஓய்வா உனக்கு..நாம் கொண்டாடலாம்..

 

இல்லை. ஆராய்ச்சிக்கூடம் 31ல் பணி. உனக்கு..?

 

ஆச்சரியம்..! எனக்கும் அங்கேயே..! வருகிறேன்.

 

வா..! உனக்கு ஒரு விசித்திரமான பரிசு தர இருக்கிறேன். உன்னைப் பிறப்பித்த  இனிய இந்த நாளுக்காக..!

 

ஐயொ.. வைகுந்தன்..!நீ கற்காலத்தில்ää இரண்டாயிரமாண்டு முற்காலத்தில் இருக்கவேண்டியவன்..கூட அல்ல..அதற்கும் மேலே ஆயிரவாண்டுச் சங்ககாலத்து ஆசாமி என்போமே அந்தவகையினன்..நீ..!

 

பரவாயில்லை.. இந்த முட்டாள்தனமான பேராசியரை விட அது எவ்வளவோ மேல்..   சரி கண்ணேää நேரில் சந்திப்போம்..

()

 

 

பேராசிரியர் மஹமட் நவ்ஸாத்ää  மிகுந்த யோசனையிலிருந்தார்.  மேசை மீதுää நீலநிற அட்டையுடன் இறுதட்டு.! அரச உயர்குழுவின் இரசியக் கோவை. மறுபடியும்  அதனை இயக்கிப் படித்தார். மொழிகாட்டிகளின் வழிகாட்டலில்ää அவரது சொந்த மொழியில் கட்டளை தெளிவாகப் பதிவாகியிருந்தது.

 

அரச சுற்றறிக்கை. 127 சீ.ஆ.பெ. 34. 

இன்று அமுல்படுத்த வேண்டிய அவசரப்பணி.

பூமியின் 317வது பிரிவில் குடியேற்றப்பட்டிருக்கும்

 ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதுகுடி மக்கள்

 இரண்டுகோடியே பத்து இலட்சத்து நாற்பதாயிரத்து இருபத்து நான்கு பேரையும்

உடன் அழித்துவிட்டு இடத்தைக் காலி செய்விக்கவும்.

 

கீழே அரச உயர் குழு முத்திரையும் ஒப்பமும் இடப்பட்டிருந்தன. பேராசிரியர் கொஞ்சம் வியந்தார். தன்னையறியாமல்ää இது மிகவும் பெரிய தொகை.. என்றார். ஓசை எழுப்பி விட்டு வைகுந்தன் உள்ளே வந்தான்.

 

மானுடவள அமைச்சகத்தில் பேச்சுவார்த்தை என்றுதானே எனக்குக் கட்டளை. மாற்ற வேண்டி வந்தது ஏன்..?  என்றான். பேராசிரியர் கோபத்துடன்ää

 

அநாவசியமான கேள்விகளை நான் விரும்புவதில்லை. இதைப்பார்..   நீல இறுவட்டுவை அவன்பால் திருப்பினார். வைகுந்தன் அந்தக் கட்டளைகளை உள்வாங்கினான்.  கொப்பளித்த வியப்புணர்வுடன் பேராசிரியரைப் பார்த்தான்.

 

இல்லை.. இது மிகவும் அதிகம்.. என்றான்.

 

உன் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை.  இருந்தாலும் வேறுவழி ஒன்றுமில்லை.  என்றார் பேராசிரியர்

 

மானுடவள அமைச்சு மிகவும் மோசம். ஒரு பக்கம்  மானுட உயிர்வாழ் வயதெல்லையைக் குறைக்கிறார்கள். மறுபக்கம் அழிவுத் தொகையை அதிகரிக்கிறார்கள்..காரணம்..?

 

மானுடப் பெருக்கம்.. என் அடிமையே.. எல்லாம் மானுடப் பெருக்கத்தால் வந்த வினை.. ஆயினும் உனது அநாவசியமான அபிப்பிராயத்தை நான் வெறுக்கிறேன்..

 

என் உணர்வைக் கூட நான் வெளிக்காட்ட முடியாதளவுக்கு தடுக்க நீங்கள் யார்..?

 

நானா..நான்  நிறைவேற்று அதிகாரி..!   சாகும்தலம் 30.05.ஐ எடுத்துச் செல்.

 

............................

 

இப்போது மணி காலை. 8.31. பத்து நாற்பத்தொன்றுக்கு முடித்து விடு. பின் மாலை பதினைந்து முப்பது மட்டும் உனக்கு ஓய்வு.  மறுபடி நாளைமுதல்ää நீ கிரகசஞ்சாரத்துக்கு அனுப்பப்படுவாய். ஒரு ஆறு மாதம் போய் வா..

 

..............................

 

என்ன பேசாமலிருக்கிறாய்..ஊமைகளை நான் விரும்புவதில்லை..

 

உங்கள்  முட்டாள்தனமான அமைச்சில் நான் இணைந்ததன் பின்பு என் வாழ்வு சப்பென்றாகி விட்டது. என் உணர்வுகளுக்கு இங்கே மதிப்பில்லை. கிரகசஞ்சாரமே மேல்.. சரி சரி..  இதற்கொரு முடிவே கிடையாதா..?

 

எதற்கு..மானுடப்பெருக்கத்துக்கா..அல்லது அழிவுக்கா..உனக்கு உணர்ச்சியை ஊட்டிய அந்த சகுந்தலையை என்ன செய்கிறேன் பார்.. அவளால்தான் நீ இப்படியெல்லாம் கேட்கிறாய்..

 

நன்றி ஞாபகப்படுத்தியதற்கு. இன்று நான் அவளுடன் பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.. அவளுக்குப் பதினெட்டு வயது. பிறந்தநாள். மாலை எனக்கு ஓய்வு நேரம் போதாது.

 

இதுவே அதிகம்.! என்னுடைய தனிப்பட்ட தற்றுணிவில் வழங்கியிருக்கிறேன். தவிரவும்ää..

 

அவன் இரண்யனை அனுப்பலாமே இப்பணிக்கு..என்னை விட அவன்தானே முதுநிலையினன்.?

 

அநாவசியமான அபிப்பிராயம்..  என் கோபத்தைக் கிளராதே..! இதற்கு உனக்கு தண்டனை நிச்சயம்.  சரிசரி..ää புறப்படு.! சாகும்தலம் 30.05. ல் ஏறிப்  பற..! பூமியிலிருந்து அறுபதினாயிரம் அடி உயரத்தில் பற..  கதிர்வேல்.7ஐப் பிரயோகித்து விடு. இரண்டரைக் கோடிப் பேருக்கு அதுதான் வேண்டும்.

 

கடந்த இருநூறு வருடங்களிலும் இப்படி அதிக தொகை இருந்ததில்லை....தவிரவும் இன்றையப் போலொரு நாளில் அந்த அப்பாவி வயோதிபர்களை அழிக்க...  அதனால்தான்;ää சற்றுத் தயங்கினேன். கொஞ்சமாக கவலையாகவுமிருக்கிறது.....

 

முணுமுணுக்காதே.. நீ நினைப்பது எனக்கு விளங்குகிறது. எனக்கு நாற்பத்தொன்பது வயதாகிறதப்பா.. நான்தான் இதனையிட்டுக் கவலைப்பட வேண்டும். நீ அல்ல. அநாவசியமாக என் எரிச்சலைக் கிளப்பாமல் சென்று விடு. எல்லாம் தயார். சற்றுப் பொறு. உன் சக பயணி வரட்டும்..

 

உலகில்ää மூவாயிரமாவது ஆண்டில்  ஏற்பட்ட பூச்சியவெளிப் புரட்சியின் பின் நிலைமை இப்படித்தான் மாற்றமடைந்து விட்டிருக்கிறது.  பூச்சியவெளிப் புரட்சியானது  இரண்டாயிரமாம் ஆண்டில்ää நாடுகளாகப் பிரிந்து கிடந்த பூமியை ஒன்றிணைத்து ஒரே நிர்வாக அலகினுள் கொண்டு வந்தது. பூமி ஒன்றே.! மானுடர் ஒன்றே..! என்பது இப்புரட்சியின் அடிநாதம். அரச நிர்வாக உயர்குழு ஒன்று பூமியின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்தவென ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒருவர் வீதம்ää சர்வஜன எண்ணக்கணிப்பீட்டுத் தேர்தல் மூலம் தெரிவாகியிருந்தது.  பூமி  நானூறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுää 317வது பிரிவில் ஐம்பது வயதைக் கடந்த வயோதிபர்கள் குடியேற்றப்படுகிறார்கள். இவர்கள் ஐந்து வருடத்திற்கொரு தடவை தடயமின்றி அழிக்கப்படுவார்கள். இந்நடைமுறை நூற்றுப் பத்து ஆண்டுகளாக நடைமுறையிலிருந்து வருகிறது.  

 

உன்னுடன் சக விமானமோட்டியாக வரப்போவது யார் தெரியுமா..வைகுந்தா..?

 

தெரிய வேண்டியதில்லை. யாராவது ஒரு இரக்கமற்ற அரக்கன்..

 

அரக்கன் அல்லன். அரக்கி..! சகுந்தலை..!

 

என்ன..?   அதிர்ந்தான் வைகுந்தன். மகிழ்சியாகவிருந்தது. சகுந்தலையுடனா என் பணி..?

 

இப்போது உனக்கு ஓய்வு தேவைப்படாதே..உன்னைப் போன்றோருக்கு உணர்ச்சி நரம்பை பிடுங்கி விட்டால் நன்றாகவிருக்கும். என் யோசனையை யார் கேட்டார்..உங்களையெல்லாம் வைத்துக் கொண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது.

 

பொறாமை மானுடரை விட்டுப் போவதில்லை.. பேராசிரியரே..!  மிருகங்கள் அது பாட்டுக்குப் புணர்ந்தாலும் இவர்களுக்குப் பொறாமைதான்..அதைக்  கூட மினக்கெட்டு வேடிக்கை பார்ப்.....

 

மிகவும் மோசமாகப் பேசுகிறாய்..  பேச்சை நிறுத்து..!  எப்படியோ கதிர்வேல்.7ஐப் பிரயோகித்துவிட்டுää கப்பலுக்குள் காதலி என் அடிமையே..! இல்லாவிட்டால்ää உன்னை விட்டு சகுந்தலையுடன் அவன் இரண்யனை அனுப்பி விடுவேன்..பார்..!

 

இல்லையில்லை.. நானே போகிறேன்..!

 

என்று வைகுந்தன் அவசரமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதேää   ஓசையெழுப்பி விட்டுää உள்ளே வந்தாள் சகுந்தலை.

 

வைகுந்தா நீ இங்கேயா இருக்கிறாய்..?

 

ஆம்.!  கட்டளை இறுவட்டுப் பெற வந்தேன். இன்று நீயும் நானும்தான் சாகும்தலத்தில் பயணிக்கப் போகிறோம்.  எனக்கு இதில் துளி கூட விருப்பமில்லாதிருந்த போதிலும்ää சகுந்தலைää என் கண்ணே..! உன்னுடன்  கடமைப்பொழுதைக் கழிக்கலாமே என்றுதான் இதற்கும்ää  இந்த முட்டாள்தனமான பேராசிரியரின் கட்டளைகளுக்கும் பணிந்து பணியாற்றவிருக்கிறேன்..   உற்சாகம் குரலில் பீறிட்டது வைகுந்தனுக்கு.

 

இது மிகவும் அதிகம். வாயை மூடு வைகுந்தா.. இங்கு நான்தான் அதிகாரி.! சகுந்தலைக்கான கட்டளை இறுவட்டு என்னிடம் உள்ளது. உன் வியாக்கியானம் தேவையில்லை. சரி.. சகுந்தலைää இதோ உனக்கான கட்டளை இறுவட்டு. படித்துக் கிரகித்துக் கொள். உன் வேலை சுலபமானதுதான். கதிர்வேல்.7ஐ வைகுந்தன்பொருத்தியதும்  மீதேன்வாயுத்துப்பாக்கியால்ää சுட்டுவிடு. அவ்வளவுதான்.!

 

கதிர்வேல்.7 பிரயோகித்து நான் பார்த்ததேயில்லை. இம்முறை அழிவுத்தொகை மிக அதிகம் போல..   என்றாள் சகுந்தலை.

 

இனி இருவரும் புறப்படுங்கள். பேராசிரியரின் திட்டமான கட்டளை கிடைத்ததும் வைகுந்தனும்ää சகுந்தலையும் வெளியேறினர்.

 

()

 

      சாகும்தலம் 30.05.ஐ நெருங்கிய வைகுந்தனும்ää சகுந்தலையும்  மின்னுயர்த்தி வாயிலாக உயர்ந்து உட்புகுந்தனர். தனிமை மகிழ்வாக இருந்தது. உள்ளிருந்த உணர்ச்சியற்ற ஏழு ரோபோக்களையும் பார்த்தனர். அனைத்தும் உயிர்பெற்று இயங்கக் காத்திருந்தன. உணர்ச்சி மட்டும்தான் இல்லை. அதையும் ஊட்டிவிட்டால்..மானுடர் வாழ்வு..?   தம்மிருப்பிடத்தை அடைந்தனர். நகர் இருக்கையில் அமர்ந்தனர். சகுந்தலையின் அருகாமை மிகவும் இனித்தது. பொங்கிய காதலுடன் சகுந்தலையைப் பார்த்தான் வைகுந்தன்.

 

கற்கால ஆசாமியே..அப்படிப் பார்க்காதே..! காதல் உணர்வு உன் கண்களில் தெரிகிறது. இதிகாசங்களில் படித்த காதல் ஞாபகத்தில் வருகிறது.  உன் காமம்மிகு கண்களைப் பாத்ததும்.. என்று சிரித்தாள் சகுந்தலை. அவளுக்கும் மிக ஆனந்தமாகவிருந்தது. தன்னைக் காதலித்துää தனக்காக ஏங்கவும் ஒரு துணை இருக்கிறதே..

 

நீ படித்த இதிகாசங்களை நான் படித்ததில்லை சகுந்தலை.. எனக்குத் தெரிந்ததெல்லாம் திடீரென நான் உன் மீது வசப்பட்ட்டு விட்டேன் என்பதுதான். இன்று உனக்காக எதையும் செய்வேன்..உனக்கு என்ன விருப்பமோ அதை நீ கேள்.

 

சரி.. சரி.. என்று முணுமுணுத்த சகுந்தலை  நன்றாக வைகுந்தனுடன் அருகில் நெருங்கி உரசி அமர்ந்தாள். இதுதான் காதலா..? என்று கேட்டுச் சிரித்தாள்.. அவளது நீல விழிகளில் ஊடுருவிய உணர்வொளியில் தன்னிலை மறந்தான் வைகுந்தன் திடீரென சாகும்தலத்தின்  தானியங்கி எந்திரம் உறுமியது. பற்பல ஒளிகள் ஜுவாலிட்டுப் பிரகாசிக்க ஏழு ரோபோ எந்திரிகளும்தத்தம் கட்;;டளைகளைச் சீராக இயக்க.ää  சாகும் தலம்ää  மெல்லிய  உறுமலுடன்ää விரைவில் மேலெழுந்தது.

 

கூ..க்கூவ்க்..

 

தொலைக்காட்டியில் திடீரெனத் தோன்றினார் பேராசிரியர்.

 

வாழ்த்துக்கள் நண்பர்களே..!   என்றார். கவலையுடன் முறுவலித்தார்.

 

நாசமாய்ப்போக..! வேடிக்கை பார்க்கவா வந்தீர் பேராசிரியரே.. ச்சேய்ää.

 

மகிழ்சிசியாக இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்..

 

மகிழ்ச்சியான இந்த நாளில் மானுடர்களை அழிப்பதில் என்ன மகிழ்ச்சியிருக்க முடியும்..முட்டாள்தனமான அரச உயர்குழுவுக்கு இதெல்லாம் புரியமா..?

 

உன்னுடைய பிற்போக்கான கருத்துக்களுக்காக நீ நிச்சம் தண்டனை பெறுவாய்.  கடமையைச் செய். பலனை எதிர்பாராதே.!   10மி தொடங்கியது தொடக்கம் இன்றுவரை இதுதான் நிலையான வாய்ப்பாடு. ஞாபகத்தில் கொள். எல்லாம் சரியாக உள்ளனவா நண்பர்களே..?

 

ஆம்.. பேராசிரியரே.!  வைகுந்தன்  மானுடர் மீதுள்ள காதலால் இப்படிப் பிதற்றுகிறார்..

 

அதுமட்டுமில்லை சகுந்தலை.. உன் மீதுள்ள காதலும் கூட.   சரி..  தங்களின் பயனம் வெற்றியடைவதாக..!

 

நன்றி..!

 

இனி ஒரு பேச்சுமில்லை. வைகுந்தன் பறக்கும் உயர்விசையை அழுத்த சாகும்தலம் 30.05.  விரிந்த வான்மைல்களை ஒளிவேகத்தில் கடந்தது. யாருமற்ற அந்தர வெளியில் பயனம்.. கண்ணுக்கெட்டிய தூரம் முழுவதும் எண்ணற்ற கோளங்கள். எல்லையற்ற வான் பாலைவனம். செயற்கைக் கோள்களில் பாதைச் சமிக்ஞைகள். விதவித உருவங்களில் விமானங்கள்.. பறக்கும் தட்டுக்கள்.. மிதக்கும் விண்ணோடங்கள்.. தவழ்ந்து ஆடும் விண்வள்ளங்கள் எனப்படும் ஆராய்ச்சிக் கூடங்கள்.. தூரத்து நட்சத்திரங்கள்.. ஒரு வழிப் பாதைக்கான கதிர்ச் சமிக்ஞைகள்.. விண்பயனத்தின் அற்புதத்தில் தன்னிலை மறந்து இரஸித்தாள் சகுந்தலை. அவள் இதுவரையும் செல்லாத வான்பாதைகளில் சுற்றி வளைத்துச் சென்றான் வைகுந்தன்.

 

இந்தப் பாதையால் நான் வந்ததேயில்லை வைகுந்தன்.  நாம்ஆகாயக் காதலர்கள்...! எனக்கு ஒரு சங்க காலக் கவிதை  ஞாபகத்தில் வருகிறது சொல்லவா என் ஆகாயக் காதலனே..?

 

எனக்குக் கவிதை கேட்டும்ää படித்தும் பழக்கமில்லை கண்ணே.. ஆனால்ää நீ என்ன சொன்னாலும் அது எனக்குக் கவிதைதான். எனவேää நீ என்ன சொன்னாலும் கேட்கச் சித்தமாயிருக்கிறேன்.

 

இது  இரண்டாயிரமாம் ஆண்டு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த  தீரன் என்ற புலவன்  அன்றேää பாடிவைத்தது  சொல்கிறேன் கேள்.

 

கிழட்டுத் திரிலேனியம்

கிரகப்போர்க்  கண்ணாடியில் முகம் பார்த்து

போலி  கதிர்அரிதாரம் பூச

கணிணிகளின் அரசவை அவசரமாய்க் கூடும்.

 

நட்சத்திரங்களில்ää

இராணுவத்தளம் அமைத்த மஹா வல்லரசுகளின்

தலைமையில்ää

சமர் வெடித்து  பூச்சியவெளியிலும் பரவ

பால்வீதியில் கூடää குருதிச் சிதறல்கள்..

 

கிரகப்போர் உக்கிரமாகி 

சிறுநிலப்பூமிக்கும்  பரவ

ஒரு வறிய நாட்டின் சிறிய  கதிர்க் குண்டு வெடித்துää

அண்டவெளியில்ää

புவி வெற்றிடத்தை  உண்டாக்கும்.

 

வேடிக்கை பார்த்திருந்த கடவுளுக்கோ

கண்கொள்ளாத ஆச்சரியம்கிடைக்கும்..

 

கடவுளுக்கு மட்டுமல்ல.. எனக்கும் ஆச்சரியம்தான். என்னே கவிதை..! என்னே தீரன் அக்கவிஞன்.! சகுந்தலை.!  என்னைத் திருமணம் செய்து கொள்வாயா நீ..?

 

திருமணமா..சகுந்தலை சிரித்து விட்டுச் சொன்னாள். அதெல்லாம் அக்காலத்து மனிதரின்  சடங்கு. நமக்கல்ல.

 

அப்படியானால்..என் கதி..?

 

நம் கதி தெரிந்ததுதானே.. வைகுந்தரே.. என்னருமை வான் காதலரே..!  உனது உணர்வு நரம்பு -வெற்றிகரமாக இயங்குகிறது.  முதலில்  பலனை எதிர்பாராமல்ää கடமையைச் செய்வோமா....?

 

சரி.. சகுந்தலை.. இப்போது நாம் எந்த இடத்திலிருக்கின்றோம்.. பார்..!

 

பூமியின் 267வது பிரிவின் மேலிருக்கிறோம். காதலரே.. கதிர்வேல்.7 பாவித்து நான் பார்த்ததேயில்லை.

 

நான் கூட..! இது அதி நவீனம்.!  கட்டிடங்கள்ää மரங்கள் ஊர்வன பறப்பனவற்றுக்கு எவ்வித இடைஞ்சலும் தராது. மனிதரின் மானுடபடைப்பு மூலஅலகை உள்வாங்கித் தயாரிக்கப்பட்டது. மனிதரை மட்டும் தாக்கியழிக்கும். இரண்டரைக் கோடிப்பேர் 23 நிமிடங்களில் பஸ்பமாகி விடுவர். தாம் அழியப் போவது அவர்களுக்கே தெரியாது. ஒரு துளி வலியிருக்காது. சாகும் அச்சவுணர்வும் இருக்காது.. பத்து வருட காலத்து உற்பத்தி இது..

 

அட..! புதிய குடியேற்றம் எப்போது..?

 

நாளைக்கே..! மூவாயிரம் விமானங்களும்ää எண்பத்தைந்து இலட்சம் வயோதிபர்களும்ää  தயாராகவுள்ளனர் குடியேற.. சகுந்தலை..! இதை நான் விரும்பவில்லை. மனிதரை அவர்கள்பாட்டில் சாக விடாமல் இப்படி..

 

மறுபடி மனிதாபிமானமா..நமக்கிட்ட கட்டளை என்னவோ..?

 

அதை மீறவில்லை. சகுந்தலை..! பணக்கார வயோதிபர்கள் தத்தம் தனி விமானங்களில் வேற்றுக் கிரகத்திற்குத் தப்பியோடி விடுகிறார்கள்.. வசதியற்றவர்களை மட்டும் அழிப்பது எப்படி தர்மமாகும்;..? அரச உயர்குழுவுக்கும்ää இந்த முட்டாள் பேராசிரியருக்கும்..

 

வேற்றுக்கிரகத் தடைச்சட்டம் விரைவில் அமுலுக்கு வருகிறது.  என் வான் காதலரே.. அதுசரி ஏதோ பரிசு கிரிசு என்றாயே.. என்ன அது.. ?  எப்போது தருவாய்..?

 

............................

 

      திடீரென வைகுந்தனின் உணர்வு நரம்புகள் புடைத்தன. அவனது மனதில் ஏதோ மின் தாக்கியது போலிருந்தது. சகுந்தலைக்கான பரிசு..ஒரு விநாடி நேரத்தில் அவன் கொடுக்க எண்ணியிருந்த பரிசு மனதில் மாறிவிட்டது. வைகுந்தனின் முகம் இறுகியது. அவன் தீர்மானித்து விட்டான்.  ஆம்.. இதுதான் சரியான பரிசு. இவளுக்கும் இந்தப் பூ10மிக்கும்  பிரயோசனமான பரிசு...உன்னதமானது.   உயிர்வாழச் செய்வது..   வைகுந்தன் தன் முட்டாள்தனமான பரிசைத் தீர்மானித்து விட்டான்.

 

சங்க கால வான்காதலரே..! என்ன பேசாமலிருக்கிறாய்..பிரிவு 310 ஐ நெருங்கி விட்டோம்..

 

சகுந்தலை..! என்றவனின் குரல் பிசிறடித்தது.  தாக மாத்திரை ஒன்றை உட்செலுத்திய பின்ää சகுந்தலையைக் கனிவாகப் பார்த்த வைகுந்தன் தொடர்ந்து கூறினான். சகுந்தலை.. என் அன்பேää கதிர்வேல்.7 ஐ இப்போதுதான் நானும் முதற்தடவையாகப் பிரயோகிக்கப் போகிறேன். அதன் பொருளாதாரப் பெறுமதி  900 பிளாட்டினம். இது  மாதிரி இன்னொன்று செய்ய இன்னும் பத்து வருடங்கள் பிடிக்கும்.

 

என்ன 900 பிளாட்டினமா.. 49க்கு மேல் அநுமதிப்பதில்லையே..

 

அழிவுத் தொகை அதிகம். அதனால் செலவும் அதிகம். சரி. எங்கே இருக்கிறோம்..?

 

பிரிவு 317ன் மீதே இருக்கிறோம்.

 

ம்..! சற்றுக் கீழே போ.. சராசரி  60 ஆயிரம் அடி உயரத்தை வைத்துக் கொள்.

 

ம்.. நிலையாக நிறுத்தவா..வைகுந்தன்..?

 

ம்.. சகுந்தலை..  உன்னை உளமாரக் காதலிக்கிறேன்.. என்னிடம் ஒரு தடவையாவது சொல்லேன் என்னையும் நீ காதலிப்பதாக..

 

மறுபடியும் காதலா..வைகுந்தரே.. என் கண்களை வாசித்துப் பார்..! அதில்ää உன் பெயர் எழுதியிருக்கிறேனே.. புரியவில்லையா.. சரி..  நேரம் இப்போது 9.40.

 

ஆகட்டும்.! இனி ஒன்றும் செய்வதற்கில்லை. கதிர்வேல்.7  என் முதுகில் பொருத்தி விடு.

 

முதுகிலா..? ஆச்சரியமானாள் சகுந்தலை. கதிர்வேல்.7 ஒரு சிறிய அம்பு உருவத்தில் இருந்தது. பயங்கர சம்காரத்தை தன்னுள் அடக்கிக் கொண்டு சாதுவாக இருந்தது. 900 பிளாட்டினம் பெறுமதியானது.  பூமியிலிருந்து  5500 அடி உயரத்தில் வைத்து மீதேன் வாயுத் துப்பாக்கியால் சுட்டதும்ää வெளியாகும்ää அலகியல் கதிர்வீச்சு   நான்கு நிமிடம் முப்பத்தியாறு செக்கனில் ப10மியை யார் கண்ணுக்கும் புலப்படாமல் காற்றலைகளில் பரவிப் படரும். 317ம் பிரிவில் வசிக்கும் மனிதர் இரண்டரைக்கோடிப்பேரும்ää  ஒரு முன்னெச்சரிக்கையுமின்றி இரண்டே நிமிடங்களில் பஸ்பமாகி விடுவர். துல்லியமாகக் கணக்கிடப்பட்ட அழிவு வாய்ப்பாட்டின் படி அது நடக்கும்.

 

பாவம்..   மனிதர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும்.  என் காதலரே..! உன்னை நான் நேசிப்பது போலவேää இந்த மனிதர்களையயும் மிகவும் நேசிக்கிறேன்.. நான்.. ஆனால்ääஎதுவும் நம் வசமில்லை. கடமையைச் செய்வோம்.. பலனை எதிர்பாராதிருப்போம்.. நேரம் சரி. சகுந்தலைää கதிர்வேல்.7ஐ வைகுந்தனின் முதுகில் பொருத்தி விட்டாள்.  தொலைக்காட்டி கூப்பிட்டது. தொடர்ந்து  அரசஉயர்குழுவின்ää  இயமப்பிரிவின்  அழிவு ஒன்றிணைப்பு அதிகாரி திரையில் தோன்றினார்.

 

ஒவ்வொன்றும்   சரியாக உள்ளனவா நண்பர்களே..?

 

ஆம். அதிகாரியே..

 

சரி பிரயோகித்து விடு.

 

      கட்டளை பிறந்து விட்டது.  சகுந்தலை  வைகுந்தனின் இறுகிப் போன முகத்தை நோக்கினாள். அவனது தயார் நிலை புரிந்தது. ஆனால்ää ஏதோ இடறியது. வைகுந்தன் அமைதியான முகத்துடன் கூறினான்.

 

சகுந்தலை.. இரண்டாயிரம் அடி முன்னே செல்..

 

சாகும்தலம் முன்னேறியது. வான்பரப்பில் நிலையாக நின்றது.

 

கீழே பார்..

 

கீழே  பூமியின் சமுத்திரப் பரப்பு தெரிந்தது. சிறிதளவு நிலப்பரப்பும் புலப்பட்டது. சகுந்தலை ஆச்சரியமானாள்.

 

என்னது கடலுக்கு மேலே இருக்கிறோமே..  கடலிலிருந்தா ஆரம்பிக்கப் போகிறாய்..?

 

இல்லை. ஆனால் ஆம்.!

 

குழப்பமாக வைகுந்தனைப் பார்த்தாள்  சகுந்தலை. வைகுந்தன் மெதுவாக எழுந்தான். முதலில்ää தொலைக்காட்டியின் ஆளிகளைத் திருகி ஓய்வாக்கினான். சகுந்தலையின் மிக அருகில் வந்தான். குனிந்து அவளது சிறிய உதடுகளில் முத்தமிட்டான்.  சகுந்தலை புதிதான இனம் புரியாப் பரவசத்தில் வைகுந்தனோடு இழைந்தாள். காதலுணர்வில் உருகிப் போய் வைகுந்தனின் மார்பில் ஒடுங்கினாள். சிரிக்கும் கண்களால் சகுந்தலையை மறுபடி உற்றுப் பார்த்த வைகுந்தன் மிகுந்த காதல் வசப்பட்டுக் கூறினான்.

 

சகுந்தலை.. இன்று உனக்குப் பிறந்த நாள்.!  இது ஒரு பொன்னாள்.  இந்நந்நாளில் இம்மனிதர்களை அழிவு செய்ய நான் தனிப்பட விரும்பவில்லை. இன்னும் ஒரு பத்துவருட காலம் அவர்களை உயிர் வாழச் செய்யப் போகின்றேன்.. சகுந்தலை..! என்னருமைக் காதலியே.. நீ சொன்ன சங்கத் தமிழ் வளர்த்த கவிஞன் தீரனின் வழிவந்த இந்த மனிதரை நான் கொல்ல மாட்டேன். இதனை நீ விரும்புவாயா..?

 

ஆம் என் ஆகாயக்காதலரே.. மனிதர்களைக் கொல்வது எனக்கும் துளி கூட விருப்பமில்லை. நான் தீரனின்ää தமிழ்க்கவிதைகளை  நேஸிப்பவள்.  உயிர்க் கொலையை வெறுப்பவள். தவிரவும்ää.............

 

அது போதும். சகுந்தலை.. சரி.. இதோ  உனக்கான என் பிறந்த நாள் பரிசு இதுதான்..!

 

      வைகுந்தன் தனது முதுகில் பொருத்தப்பட்ட கதிர்வேல்.7 உடன்ää  சாகும்தலத்தின் கதவைத் திறந்து சட்டென்று  கீழே கடலை நோக்கித் தா......வினான்.  சகுந்தலையின் ஆச்சரியக் கூக்குரல் ஒரே விநாடியில் தேயää உடலின் அனைத்துப் பாகங்களும்  சிதற..  900 பிளாட்டினப் பெறுமதியான கதிர்வேலுடன்  வைகுந்தனின் உடல்ää 6000 அடி உயரத்திலிருந்து கீழே கடலை நோக்கி  வேகமான புவியீர்ப்பு விசைக்குட்பட்டு அதி வேகத்தில்ää விழுந்து கொண்டிருந்தது.

 

சகுந்தலை விதிர்விதிர்த்துப் போய்ச் செய்வதறியாது சற்றுநேரம் இயக்கமின்றி இருந்தாள். எல்லாவற்றையும் வைகுந்தன் பிழைக்கச் செய்து விட்டான் இனித் திரும்பிப் போக முடியாது.. ஆனால்ää யாருக்காகச் செய்தான்;..ää எனக்காக.. ஆம்.. என் பிறந்த நாளுக்காக.. இரண்டரைக்கோடி வயோதிபர்களுக்கு  என் பெயரால்ää மேலும் பத்துவருட வாழ்வு கொடுத்திருக்கிறான்.. ஆ.. எப்பேர்ப்பட்ட மனிதாபிமானம் இது..சகுந்தலைக்குள் ஏக்கமும் தனிமையுணர்வும் பொங்கியெழுந்தன.  மறுபடி கீழே குனிந்து பார்த்தாள்.. வைகுந்தனின் உடலே தென்படவில்லை.

 

வைகுந்தா.. வைகுந்தா..   சகுந்தலையின் நீள் விழிகள் ஒளி மங்கின.  ஒரு கணத்தில் அவளும் தீர்மானித்து விட்டாள்.  .. வைகுந்தா.. நான் உன்னைக் காதலிக்கிறே..ன்..   நீ போகுமிடத்திற்கு நானும் வருவேன். என்னருமைக் காதலனே..

 

      அடுத்தகணம்..! சகுந்தலை தன்னிடமிருந்த மீதேன் வாயுத் துப்பாக்கியை கழற்றி ஆகாயத்தில் எறிந்தாள். பின்ää சாகும்தலத்தின் அத்தனை ஆளிகளையும் தாறுமாறாக இயக்கினாள்.  ஒழுங்கற்றுப் பிறப்பித்த கட்டளைகளில்ää ரோபோ எந்திரிகளின்ää  விசைப்பலகைகள் குழப்பமுற்றுää சாகும்தலத்தின் செயற்பாடுகளும்  சீர் குலைந்துää ஏதேதோ இலத்திரனியல்கள்  ஙீ...ஙீ..ஈஈ என்று கத்தää  சகுந்தலைää ஒரே பாய்ச்சலில் சாகும் தலத்தை விட்டும் வெளியே அந்தரவெளியில் பாய்ந்தாள்..

 

()

 

பேராசிரியர் மஹமட் நவ்ஸாத் ஆழ்ந்த யோசனையிலிருந்தார்.  மேசை மீதுää நீலநிற அட்டையுடன் இறுதட்டு.!  அரச உயர்குழுவின் இரசியக் கோவை. மறுபடியும்  அதனை இயக்கிப் படித்தார். மொழிகாட்டிகளின் வழிகாட்டலில்ää அவரது சொந்த மொழியில் கட்டளை தெளிவாகப் பதிவாகியிருந்தது.

 

அரச சுற்றறிக்கை. 127 சீ.ஆ.பெ. 34 :(2) 

இன்று பதிலளிக்க வேண்டிய அவசரக் கேள்விp.

பூமியின் 317வது பிரிவில் குடியேற்றப்பட்டிருக்கும்

 ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதுகுடி மக்கள்

 இரண்டுகோடியே பத்து இலட்சத்து நாற்பதாயிரத்து இருபத்து நான்கு பேரையும்

உடன் அழித்துவிட்டு இடத்தைக் காலி செய்விக்கும்படிஅனுப்பி வைக்கபபட்ட

கட்டளை நிறைவேற்றப்பட்டதா..என்ன அசம்பாவிதம் நிகழ்ந்தது.?

விபத்தாநாசகாரச் செயலா.யார் காரணம்.பொறுப்பேற்கும் நபர் யார்..?

இழப்பீட்டின் அளவீடு என்ன.?

 

 

கீழே அரச உயர் குழு முத்திரையும் ஒப்பமும் இடப்பட்டிருந்தன.எக்கேள்விக்கும் பதிலளிக்காத பேராசிரியர் அரைக்கண்களை மூடி யோசனையிலிருந்தார். சுத்தமான முட்டாள்தனம்.. முட்டாள்தனம்.. என்று பலதடவைகள் புறுபுறுத்தார். திடீரென தொலைக்காட்டி கூப்பிட்டது.. பதில் தாதமாகின்றது. உடன் பதில்..?  என்று அரச உயர்குழுவின் ஞாபகமூட்டல் வந்தது. போசிரியர்  மஹமட் நவ்ஸாத்  எழுந்தார்.  தன் பதிலை மிக நிதானமாக எழுத ஆரம்பித்தார்.

 

வைகுந்தன்ää சகுந்தலை என்ற   

மானுட உணர்ச்சியூட்டப்பட்ட   இரு ரோபோ மனிதர்களும்

தயாரிக்கப்பட்ட காலத்தில்ää அவற்றுக்கு

மானுட உணர்வு இணைப்புக் கொடுக்கப்படுவதை

எதிர்த்துக் குரல் கொடுத்த முதல்நபர் நான்தான்.

என் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டது. அதன் பலன்..?

வைகுந்தன்ää சகுந்தலை  என்ற அவ்விரு ரோபோக்களும் காதல் வயப்பட்டு

மனிதாபமுற்றுää தற்கொலை செய்து கொண்டன.

இதன் முழுப் பொறுப்பையும் அரச உயர்குழுவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கு முன்னோடியாக

இன்றிலிருந்துää சட்டபூர்வமாக  என்னுடைய பதவியை இராஜினாமாச் செய்கிறேன்.

ஒப்பம்:  பேராசிரியர்ää  மஹமட்  நவ்ஸாத்.

நிறைவேற்று அதிகாரி. மானுடவள அமைச்சு.

திகதி:  10. 12. 3998. புதன்கிழமை.0.

இலங்கை சூழல் பத்திரிகையாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சிறப்புச் சான்றிதழ் பெற்ற கதை. (சிறிபாலபுர மாத்தையா. (சிறுகதைத் தொகுப்பு.)   மீள் பிரசுரம். சரிநிகர்.1994)