Monday, December 12, 2016

மேமன்கவி

வெள்ளி விரல் - விமர்சனம் 
மேமன்கவி
மல்லிகை இதழில் 

ஆர்.எம்.நௌசாத்தின் ‘வெள்ளி விரல்’ –

சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் விளக்கு

1. நானும் ஆர்.எம்.நௌசாத்தும்

ஆர்.எம்.நௌசாத்.   

புதுக்கவிதை இலங்கையில் குறிப்பாக கிழக்குப் பிரதேசத்தில் புது வெள்ளமாய் பாய்ந்து கொண்டிருந்த, 70களின் நடுப்பகுதி காலந் தொடக்கம் அவரது படைப்புகளின் மூலமும், நேரிலும் நான் அறிந்து வைத்திருக்கும் படைப்பாளி.

இடைப்பட்ட காலத்தில் அவரது இலக்கிய குரல் உரத்து ஒலிக்காத நிலையில், நட்டுமை என்ற நாவலுடன் அவரது இலக்கியக் குரல் அவதானத்துடன் ஒலிக்கத் தொடங்கிய பொழுதும், இடைக்கிடையே இலக்கிய ஊடகங்களில் “இன்ன இன்ன போட்டிகளில் இன்ன இன்ன இடத்தைப் பெற்ற” என்ற அடையாளத்துடன் அவரது படைப்புகள் படிக்கக் கிடைத்தன.

அவ்வாறான படைப்புகள் ஒரு தொகுப்பாக “வெள்ளி விரல்” என்ற பேரில் என் கையில் கிடைத்தமை, அவரது படைப்புகளைப் பற்றி எனது வாசக அனுபவத்தை முன் வைக்கும் தருணமாக அமைந்தது.

மற்றப்படி, அவருக்கு இந்த நூலுக்காக கிடைத்த சாகித்திய மண்டல பரிசு அவரிடமிருந்து இந்த நூலைப் பெறுவதற்கும், அவருடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள உதவியதே தவிர, அவரது படைப்புகளைப் பற்றிய எனக்கான கருத்துக்களை உருவாக்குவதற்க்கு காரணமாக அமையவில்லை என்பதை இங்கு அழுத்தமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.

(மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 54)

2. வெள்ளி விரல் தொகுப்புக்குள் உள் நுழைந்த பொழுது...

இந்தத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பிரதிகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடித்த பொழுது, அப்பிரதி ஒவ்வொன்றின் இறுதியிலும் அப்பிரதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த தர நிர்ணய சான்றிதழ்களான, அதாவது “இன்ன இன்ன போட்டிகளில், இன்ன இன்ன பரிசு” என்ற அறிவிப்புக்கள். அவ்அறிவிப்புக்கள் அவரது பிரதிகளிட்ட பிறரின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதன் காரணமாக, அவரது பிரதிகளிடம் எனது வாசிப்பு அனுபவத்தின் மீது செல்வாக்கு செலுத்த முயற்சித்தது, முதலில் இத்தொகுப்பை படிக்க ஆரம்பித்த பொழுது நான் எதிர்கொண்ட நெருக்கடி ஆகும்.

படிக்கத் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நூலுக்கும் வழங்கப்படும் முன்னுரை, பதிப்புரை, என்னுரை என்ற வகையான உரைகளை, அந்த நூலை ஒட்டிய தீர்ப்பாகத் வருவதற்கு முன், அவ்வகையான உரைகளை வாசிப்பதைத் தவிர்ப்பவன் என்ற வகையில் அவ்அறிவிப்புக்கள் எனக்கு நெருக்கடியை ஏற்படுத்திய.

அதேவேளை அப்பிரதிகளைப் பற்றிய என்னுடைய அனுபவத்தை மேலும் கூர்மைப்படுத்திய, உதவிய குறிப்புகளாக, அப்பிரதிகள் வெளிவந்த ஆண்டுகள், வெளியிட்டுத் தளங்கள் பற்றிய விவரங்கள் உதவின என்பதும் மறுப்பதற்கில்லை.

3. வெள்ளி விரல் தொகுப்புப் பிரதிகளில், உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களைத் தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியல்

1.     வதனமார்

2.     வேக்காடு

3.     கல்லடிப் பாலம்

4.     தலைவர் வந்திருந்தார்

5.     சாகும் தலம்

மேற்குறித்த பிரதிகளில் வெளிப்பட்ட உத்திகள், நடை, சித்தரிப்பு போன்றவைகளில் அவை சிறப்பாக இருப்பினும், அப்பிரதிகள் பேச முன்வரும் விடயங்கள் பற்றிய அனுபவங்களைத் தாக்கபூர்வமான முறையில் உள்வாங்க வைக்கவில்லை என்ற காரணத்தால் மேற்குறித்த பட்டியலில் அப்பிரதிகள் இடம்பெறுகின்றன.

4. 12 பிரதிகளைப் பற்றிய 12 குறிப்புக்கள்

1. தாய் மொழி

தாய்லாந்து நாட்டில் ஓர் உல்லாச விடுதியில் காவலளியாகப் பணிபுரியும் இலங்கை தமிழர் ஒருவர், அவ்விடுதியில் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை பொலிஸிடம் ஒப்படைக்க, அதற்குப் பிறகு அவன் ஒரு தமிழன் என்று தெரிந்த பின், அவனை பொலிஸிடமிருந்து தப்பிக்க வைத்து, அதனால் அந்தக் காவலாளர்

எதிர்கொள்ளும் ஆபத்துடன் இப்பிரதி முடிகிறது. தாய்லாந்து நாட்டு மொழியை தாய் (Thai) என்று சொல்வதும், அச்சொல்லை தாய் மொழி என்ற தமிழ் சொல்லுடன் இணைப்பது என்பது சொல் விளையாட்டாக இருந்த பொழுதும், அச்சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. இப்பிரதியின் தொடக்கமானது வெளிநாட்டு வேலை வாய்ப்பில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை பற்றிப் பேசப் போகிறது என்ற வாசக எதிர்பார்ப்புக்கு மாறாக தாய் மொழி பிரியனின் தியாகத்துடன் முடிகிறது.

2. வதனமார்

காணாமல் போன தன் பசு மாட்டை கண்டுபிடிக்கப் பேயாட்டியின் உதவி நாடிப் போகும் சோணியன், பேயாட்டியின் மந்திரத்திற்க்கு கட்டுப்பட்டு தன் பசுவை தேடி காட்டுக்குள் ஓட, அவனுக்கு பின்னால் அவளது மருமகனும் ஓட, இறுதியில் காணாமல் போன பசு மாடு நக்கிக்கொண்டிருக்கும் நிலையில் மருமகன் சோணியனின் பிணத்தைக் கானுவதுடன் முடிகிறது.

இப்பிரதி கணிசமான அளவில் பேயாட்டி, மந்திரம் என்பதை பற்றி பேசினாலும், ஒட்டு மொத்தமான பிரதிய வழியாக கிடைக்கப் பெறும் அனுபவம் தாக்கபூர்வமான ஒன்றாக அமையாமல் போவதால் இப்பிரதி, உள்ளடக்கங்களை தரும் அனுபவங்களை தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்கிறது.

3. வெள்ளி விரல்

புதுமணப் பெண் நசீரா அவள் கணவன் தொடும் பொழுது ஆனால் அடிப்படையாக கூறுவதை கேட்டு அவளது பாட்டி அவளுக்கு யாரோ சூனியம் செய்து விட்டார்கள் எனக் கருதி, ஊரில் பிரபலமான ஒரு மலையாள மாந்திரீகம் செய்யும் ஒருவரிடம் அழைத்து செல்ல, அங்கு “ஒரு ஆணின் விரல் நுனி பட்டாலும் கொதித்துப் போகும்” தன் பேத்தி நசீரா, எந்தவித எதிர்ப்புமின்றி அந்தப்ரிகாரியுடன் அவரது படுக்கையறையில் அவருடன் கட்டுண்டு இருப்பதை கண்டு அதிர்ந்து போகிறாள்.

பிரதியின் ஆரம்பம் மலையாள மாந்திரீகக்காரனின் கபட நாடகத்தைப் பற்றி, அவரது போலிமை பற்றிப் பேசப் போகும் பிரதியாக இருக்கும் என்று பார்த்தால் இறுதியில் நசீரா என்ற பெண்ணின் பாலியல் உணர்ச்சி சம்பந்தமாக பேசுவதாக முடிகிறது.

நசீிராவின் இம்மாற்றம் ஏன் ஏற்பட்டது, எதற்கு ஏற்பட்டது என்ற விபரிப்பு அப்பிறதியில் திறந்த நிலையில் காணப்படாததால், வாசகர்கள் தமக்கு விருப்பமான முறையில் தமக்கான ஒரு பிரதியை, நசீரா பாலியல் உணர்ச்சியை முதன்மைப்படுத்தி உருவாக்கிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை அப்பிறதியின் கட்டமைப்பு வழங்குகிறது. அத்தோடு பெண்ணியச் சிந்தனையுடன் யோசிக்க வைக்கின்ற ஒரு பிரதியாக அது முடிஞ்சும் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரை, உந்தியிலும் சரி, கட்டமைப்புளிலும் சரி, பேசும் பொருளிலும் சரி இத்தொகுதியில் அமைந்துுள்ள பிரதிகளில் தாக்கபூர்வமான பிரதியாக இப்பிறதி எனக்குப் படுகிறது.

4.விட்டு விடுதலையாகி..

விட்டு விடுதலையாகி எனும் பிரதியில் நிகழ்காலத்தில் தற்கொலைதாரி தன் மரணத்திற்கு பின் அங்கும் இங்கும் அலைந்து, (அதாவது மேல் உலகுக்கும் கீழ் உலகுக்கும்) இறுதியில் பிரதி எதிர்காலத்தை நிகழ்காலமாக்கி முடிக்கிறது.

இப்பிறதி ஆயுத அரசியல் அல்லது போராட்ட அரசியலின் ஓர் ஆயுதமாக பயன்படும் தற்கொலைதாரி ஒருவரின் இறப்பையும் பிறப்பையும் கூறிச் செல்கிறது. நிகழ்காலத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தும் தற்கொலைதாரி ஆணா? பெண்ணா? என்ற குறிப்பு இல்லை. ஆனால் எதிர்காலத்தில் பிறக்கின்ற தற்கொலைதாரி பெண் என்ற குறிப்பு வருகிறது. அதன் மூலம் தற்கொலைதாரிகள் காலம் காலமாக பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆணும் பெண்ணுமாய் என்பதனை சொல்லி இருக்கிறது அப்பிறதி. ஆனால் பேசி இருக்கும் பொருள் சம்பந்தமான தாக்கூர்வமான அனுபவத்தை அப்பிறதி தரத் தவறி விடுகிறது. அதன் காரணமாக உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் இப்பிறதியும் சேர்ந்து விடுகிறது.

5. வேக்காடு

பிரதியில் பேசத் தொடங்கும் விடயத்திலிருந்து, அவ்விடயத்துடன் தொடர்பு கொண்ட, இன்னொரு விடயத்துடன் முடிந்து விடுகின்ற பிரதியாக வேக்காடு அமைகிறது.

உம்மாவின் மறுமணத்தை பற்றிய பிரஸ்தாபத்துடன் தொடங்கும் இப்பிறதி, உம்மா என்ற பெண் இன்றைய ஆணிய சிந்தனையால் கட்டமைக்கப்பட்டுள்ள சமூகத்தில் எவ்வாறு போட்டிப் பொருளாக்கப்படுகிறாள் என்பதையும், எவ்வாறு விலை பேசப்படுகிறாள் என்பதையும் சித்திரித்தாலும், இறுதியில் உம்மாவை மனம் முடிக்கும் சாச்சா உம்மாவின் பிள்ளைகளை கைவிடுவதாக முடிக்கிறது. உம்மாவின் பிள்ளைகளே கதை சொல்லியாக (ஆண்கள்) இருக்க, அவர்களின் தேவை (சொத்து உரிமை) பற்றிய கவனம் குவிப்பாக பிரதியின் இறுதி பகுதி வெளிப்படுகிறது.

இதன் காரணமாக இப்பிறதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் இப்பிறதியும் சேர்ந்து விடுகிறது. அதோடு உம்மாவின் நிலைப்பாடு, குரல் இப்பிறதியில் பதிவாகத் தவறியமை, இப்பிர தி ஒரு பெண்ணியப் பிரதியாகும் சந்தர்ப்பத்தையும் இழந்து விடுகிறது.

6.கல்லடிப் பாலம்

​மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கும் ஒரு தமிழ் இளைஞன் தன் காதல் ஏற்படுத்திய பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க, கல்லடிப் பாலம் அவனுடன் பேசுவதாக இப்பிரதி அமைக்கப்பட்டுள்ளது.

​இதே பாலத்தில் அரை நூற்றாண்டுக்கு முன்னால் முஸ்லிம் இளைஞன் ஒருவனும், தமிழ் பெண் ஒருத்தியும் காதலித்தாகவும், அவர்களின் காதல் ஏற்றுக்கொள்ளப்படாதமையால், அவர்கள் இருவரும் இப்பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து தற்கொலை புரிந்து கொண்டதாகவும், அதேபோல் நீயும் உன் காதலியும் தற்கொலை புரிந்து கொள்ளுங்கள் என்று கல்லடிப் பாலம் சொல்லுகிறது. ஆனால், அந்தத் தமிழ் இளைஞனோ தான் காதலிக்கும் முஸ்லிம் பெண்ணை கைவிடுவது என்ற தீர்மானத்திற்கு வருவதுடன் கதை நிறைவு பெறுகிறது.

​முதல் வாசிப்பில் இதுவொரு காதல் கதை பற்றிய பிரதியாக வெளிப்பட்டாலும், அப்பிரதியில் பேசப்படும் அந்தக் காதல் பற்றிய வெளிப்பாடு தாக்கமாக வெளிப்பட வில்லை. அதன் காரணமாக இப்பிரதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களைத் தாக்கபூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.

​அதேவேளை இப்பிரதி கிழக்கு பிரதேச தேசியங்களின் அரசியல், தலைமுறை இடைவெளி என்பவை பற்றியும் குறியீடாகப் பேசியும் இருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.

​7.மீள்தகவு

​கலவரச் சூழலால் அங்கவீனமான ஒருவர், அரசு தருகின்ற கொடுப்பனவுக்காக அலைகின்ற அலைச்சலை இப்பிரதி பேசுகிறது. இதுவரை சொன்ன பிரிதிகளிலும் சரி, இனி சொல்லப் போகும் பிரதிகளிலும் சரி, 'காலம்' அலைகிறது என்றால். இப்பிரதியோ நிகழ் காலத்திலிருந்து எதிர்காலம் வரை அந்த அங்கவீனன் தொடர்ந்து அரச நிறுவனங்களுக்கு அலைவதைச் சொல்லுகிறது. அதன் மூலம் இப்பிரதி அரச நிர்வாகத்தின் சீரழிவை தாக்கபூர்வமாக முன் வைக்கின்ற பிரதியாகிய வெளிப்படுகிறது. அதேவேளை மெல்லியதாக அது ஆயுத அரசியலைப் பற்றி பேசிச் சென்றாலும் அவ்வரசியல் முதன்மையான பேச்சாக இல்லை. இப்பிரதியில் மேற் சொன்ன அங்கவீனரின் அலைச்சல் சித்திரிக்கப்பட்ட விதம் வாசிக்கப்படும் பொழுது வாசகர்களுக்கு ஏற்படுகின்ற களைப்பே இப்பிரதியின் வெற்றி ஆகின்றது.

​8.காலவட்டம்

​காலவட்டம் எனும் இப்பிரதி யுகா யுகாந்திரமாக ஒரே நிகழ்வு பல்வேறு கால வெளிகளில் திரும்பத் திரும்ப நடந்து கொண்டு இருப்பதென்பதை, ஒல்லாந்தர் காலனிய யுகம் தொடக்கம் பிற்காலனியச் சூழலில் இந்த தேசத்தில் நடந்தேறிய போர் சூழல்,

​ எதிர்காலத்தில் நவகாலனியத்தின் உச்ச காலத்தில் நடக்கப்போகும் அனுக்கதிர் யுத்தம், அதற்குப் பிறகு வரும் யுகத்தில் நடக்கப் போகும் அணு ஆயுத யுத்தம் ஆகியவற்றின் போது நடக்கப் போகும் ஒரே மாதிரியான ஒரு சம்பவ புனைவைப் பற்றி பேசுகிறது. அதனை ஒரு சிறு கதை வடிவத்தில், அதுவும் ஒரு காலவெளியை பயன்படுத்தி சொல்லி இருப்பது பாராட்டும் படியாக இருக்கிறது.

காலவட்டம் என்ற இப்பிறதியின் ஆரம்பம் எது? முடிவு எது? சொல்ல முடியாத வகையில் காலவட்டத்தின் கோட்டின் ஒரு பகுதியிலிருந்து இப்பிறதி தொடங்குகிறது. ஆனால், அதுவே ஆரம்பம் அல்ல. வட்டத்திற்கு ஆரம்பம் எது? முடிவு ஏது? என்று சொல்ல முடியாத மாதிரி, அவ்வகையான கால வடிவத்தை எடுத்து காட்டுவதற்கு இப்பிறதிக்குள் பயன்பட்டிருக்கும் ஒற்றைச் சொல் ஒன்று கை கொடுக்கிறது.

“...இந்தக் குரல்...? இந்தக் குரலை எப்போதோ கேட்டிருப்பது போலூணர்ந்தார்... எப்போதோ ஒரு யுகத்தின் முன்னரா...?”

இப்பிறதியின் ஆரம்ப பகுதியில் இடம்பெறும் ஒரு வாக்கியத்தின் இறுதியில் வரும் “முன்னரா?” என்பதுதான் அந்த ஒற்றைச் சொல். அவ்வாக்கியம் அக்கதையின் ஆரம்ப பகுதிதான். ஆனால், அந்த ஒற்றைச் சொல் காலத்தால் அக்கதை எப்போதோ தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துகிறது. தலைப்புக் காலவட்டம். இத்தொகுப்பில் இடம் பிடித்துள்ள அவ்வுத்தியினை பயன்படுத்தி படைக்கப்பட்ட பிரதிகளில் மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்ட பிரதி இது என்பதே என் அபிப்பிராயம்.

9. தலைவர் வந்திருந்தார்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடளான உரையாடல் வடிவில் அமைந்த இப்பிறதி, உத்தி அளவில் பாராட்டிய கூடிய பிரதி என்றாலும், இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் நிலையை பற்றி, போக்கை பற்றி, அப்பிறதி பேசினாலும், ஏதோ எனது வாசிப்பில் அப்பிறதி ஒரு அரசியல் ஆய்வகையாக மிஞ்சி விடுகிறதே தவிர, ஒரு நல்ல சிறு கதை பிரதியாக என் வாசிப்புக்கு வசமாகவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். அதனால் காரணமே இப்பிறதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களை தாக்கூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் சேர்ந்து விடுகிறது.

10. நல்லதொரு துரோகம்

ஒரு பொலிஸ் அதிகாரிக்கு ஊர்காவற்படை வீரன் செய்யும் நல்லதொரு துரோகத்துடன் முடிகின்ற இப்பிறதி, ஆரம்பிக்கும் பொழுது போர்ச் சூழலைப் பற்றி பேசி, ஊர்காவற்படை வீரனின் விசுவாசமான பணியைப் பற்றிய பிரதியாக முடியும் -என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, அந்த பொலிஸ் அதிகாரி ஒரு சிறுமியை பாலியல்

வன்முறைக்கு உட்படுத்தி, அவளை சுட்டுக் கொல்வதை கண்ட அந்த ஊர்காவல் படை வீரன், அந்த அதிகாரியைச் சுட்டுக் கொன்று, அவருக்குப் புரியும் நல்லதொரு துரோகத்துடன் நல்லதொரு பிரதியாக முடிகிறது.

11. சீனத்தும்மா

இந்தத் தொகுப்பில் அமைய பெற்ற சிறந்த பிரதிகளிலே இக்கதைப் பிரதியிம் ஒன்று என்று சொல்லலாம்.

கிராமம் ஒன்றில் பாலியலுடன் தொடர்புபடுத்தி பேசப்படும்  ஒரு பெண்ணின் கொலையுடன் தொடங்கி, பாராளுமன்ற அரசியலின் தீர்மான பேச்சுக்களுடன் முடிக்கின்ற பிரதியாக இப்பிறதி வெளிப்படுகிறது.

கட்டமைப்பிலும் சரி, பாத்திர வார்ப்பிலும் சரி மிகச் சிறப்பாக இப்பிறதி கட்டமைப்பட்டு இருக்கிறது.

இத்தொகுதியில் அமைந்த பிரதிகளுடன் பெண்ணியச் சிந்தனையுடன், அதேவேளை நேரடியாக அதைப் பற்றிய பிரஸ்தாபிப்பு இன்றி புனையப்பட்டிருக்கும் இப்பிறதி, பெண்ணியப் பிரதியாகப் பேசக் கூடிய சந்தர்ப்பங்களை அதிக அளவில் கொண்டிருக்கும் பிரதி என்பதில் மறுப்பதற்கில்லை.

12. சாகும் தலம்

இப்பிறதி எதிர் வரும் நூற்றாண்டில் ‘மூத்தகுடி’களை விஞ்ஞான அறிவியல் தொழில் நுட்பங்களால் கொல்வதைக் கலியுக காலக் காதலர்களான துஷ்யந்தன் - சகுந்தலையைக் கொண்டு அப்பணி மேற்கொள்ளப்படுவதாக சித்தரிக்கப்படுகிறது.

இப்பிறதியில் நம்மை வாசிப்பு முத்த குடிகளின் கொலை என்றால், கதாசிரியரின் கவனம் எல்லாம் துஷ்யந்தன் - சகுந்தலை காதலர்களாகவே இருக்கிறது.

அதேவேளை இப்பிறதியின் வாசிப்பில் ஒரு கேள்வியும் எழுகிறது. முத்த குடிகளை விஞ்ஞான அறிவியல் தொழில் நுட்பங்கள் கொண்டு கொல்வதும், துஷ்யந்தன் - சகுந்தலை காதலுக்குமான இணைவு எந்த தர்க்கத்தின் அடிப்படையிலானது என்பது தெளிவு இல்லாமல் போய்விடுகிறது. இறுதியில் அவர்கள் இருவரது தற்கொலையும், முத்த குடிகளின் அழிவும் சரி, தாக்கூர்வமாக நம் மனதில் பதியாமலே பிரதி நிறைவு பெற்று விடுகிறது. அதன் காரணமாக, இப்பிறதியும் உள்ளடக்கங்கள் தரும் அனுபவங்களைத் தாக்கூர்வமாக வெளிப்படுத்தாத பிரதிகளின் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கிறது.

5.வெள்ளி விரல் தொகுப்பின் பிரதிகளைப் பற்றி சில பொதுக் குறிப்புக்கள்

1.     காலத்தைப் பற்றிய ‘பிரக்கை’ அவரது பெரும்பாலான பிரதிகளில் முதன்மை பெறுகிறது.

அதற்காக இவர் Flash-Back உத்தியினை கையாளுவதில்லை. முக்காலங்களை அல்லது வெவ்வேறான காலங்களை ஒரே பிரதியில் இணைத்தல் என்பது அவரது பாணியாக இருக்கிறது. அவரது பிரதிகளில் காலம் காலமாக நடப்பது போல், முடிவுகளும் ஒரு மாதிரியாகவே இருக்கின்றன.

(உம் - காலவட்டம், விட்டு விடுதலையாகி, மீள்தகவு )

ஆனால், விதி விலக்காக கல்லடிப் பாலத்தில் முடிவு வேறுபட்டு விடும்.

2.     உத்திகளில் அவரது எழுது முறை முற்றும் முழுதுமாக நேர் கோட்டு எழுத்து முறை முறையாக இருப்பதில்லை. நேர்கோட்டு எழுத்து முறையின் ஒழுங்கிலிருந்து சற்று விலகியதாக இருக்கும். அதேவேளை மெஜிக்கல் ரீலிஸத்தை (Magical Realism) நினைவூட்டும் வகையிலும் வெளிப்படும் (உம் கல்லடிப் பாலத்தில் பாலம் பேசுவது, தலைவர் வந்திருக்கிறார் கதையில் மறைந்த தலைவர் பேசுவது போன்றவற்றைச் சொல்லலாம்.)

3.     நௌசாத்தின் பிரதிகளில் எள்ளல் உள் ஒளிந்து கொண்டிருக்கும் நிலத்தின் அடியிலே ஓடும் நீற்றுப் போல். அதனால் அது பிதுங்கலாகத் தெரிவதில்லை.

6. முடிவாக...

மொத்தத்தில் ஆர்.எம்.நௌசாத்தின் ‘வெள்ளி விரல்’ தொகுப்பு -

அது கொண்டிருக்கிற பிரதிகளில் பெரும்பாலான பிரதிகள் சமூகப் பிரக்ையுடன் கூடிய, சமூகத்தின் பல விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற உள்ளடக்கங்களையும், உருவங்களையும் கொண்டிருப்பதன் மூலம், ஈழத்து நவீன தமிழ் சிறுகதைப் பரப்பில், 80களுக்கு பின்னாலான ஈழத்து நவீன தமிழ் சிறுகதை வளர்ச்சியில் பங்கு கொள்ளுகின்ற தகைமையைப் பெற்றுக்கொள்ளும் தொகுப்பாக இருக்கிறது எனலாம்.

மல்லிகை 2012 - நவம்பர் - டிசம்பர் 61