Friday, December 2, 2016

பர்ஸான் முகம்மது





















Farzan Mohamed


வெள்ளி விரல் - தீரன் ஆர்.எம்.நௌஸாத்


ஒரு சிறந்த எழுத்தாளன் ஒரு சிறந்த வாசகனாக இருக்க வேண்டும் என்பது எனது நிலையான வாதம். வாசிப்பு அவனுக்கு உலக நடைமுறையை புரிந்து கொள்ள செய்கிறது; தேடிக் கற்றுக்கொள்ள செய்கிறது. தீரன் ஒரு சிறந்த வாசகன்;குசும்பன்.
எழுத்துக்கள் வாசகனை இலகுவாக புரிதலுக்குள்ளாக்க வேண்டும்.
தீரன் தமது பிரதேச பேச்சு வழக்கை அற்புதமாக கையாளக்கூடியவர். மற்றும் உட்குத்து, வெளிக்குத்து, கும்மாங்குத்து என சாடுவதில் தனக்கான தனிப் பாணியை கொண்டவர்.

நானிங்கு நான் கொண்ட திருப்தியை சொல்ல விழைகிறேன். தீரனின் வெள்ளி விரல் சிறுகதைத் தொகுதியை சிறிது சிறிதாக நுகர்ந்து அதன் முடிவில் சிறுகதைக்கான புது பரிமாணத்தை கண்டு வியந்தேன். இங்கு அவர் வெள்ளி விரலில் சரியாக 12 கதைகளை சமர்ப்பித்திருக்கிறார். அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட கதைக் களங்களை கொண்டவையாக காணப்படுவதோடு மாறுபட்ட சிந்தனைகளையும் ஒப்புவிக்கின்றன.

கதைகளின் துவக்கம்_கதைகள் சொல்லும் விதம்_கதைகளின் முடிவு_கதைகளின் துவக்கத்துக்கும் முடிவுக்குமிடையேயுள்ள தொடர்பு என வித்தியாசமான பாணியை தன்னகத்தே கொண்டுள்ளன ஒவ்வொரு கதைகளும். கிராமியம்_நகர நாகரீகம்_அரசியல் என எல்லா கதைக்களங்களும் ஒரு மனங்கவர் திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வை கொடுத்தன, சில வாழ்ந்து பார்ப்பது போன்ற மகிழ்வை கொடுத்தன.

எதிர்காலத்தை சித்தரிக்கும் இவருடைய "சாகும் தலம்" கதை எனக்குள் மிகப்பெரிய வியப்பை உண்டு பண்ணி அதுவாகவே விடையும் கொடுத்தது. ஆங்கில திரைப்படவியலாளர்களின் சிந்தனை அது. எனது ஆசை அது ஆங்கில திரைப்படமாக வெளிவர வேண்டும். வெளிவந்தால் இறைவனின் உதவியால் நிச்சயம் வெற்றிதான். யாரேனும் ஆங்கில இயக்குனர்களை நான் சந்திக்க நேர்ந்தால் நிச்சயம் இக்கதைக்களம் பற்றி ஒப்புவிக்க தீரன் எனக்கு அனுமதி தர வேண்டும்.

மேலும் பல மொழிகளை அழகாக கையாண்டு கதைகளை தன் பாதை விலகாது நன்றாக பிரசவித்திருக்கிறார்.

தீரன் காதலை நன்றாக காதலிக்கிறார். அனுபவங்களாகவும் இருக்கலாம்.
நான்,
முஹம்மது பர்ஸான்.


தீரன். ஆர்.எம் நௌஷாத் பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றிகள் நண்பர்களே

No comments:

Post a Comment