Sunday, July 15, 2018

உக்குவளை அக்ரம்


Ukuwelai Akram

வெள்ளிவிரல் சுட்டி நிற்கும் கதைகள் யாவும் கனதிமிக்கவை.அதிலும் தன் பிரதேச மொழிவழக்கை கதைகளில் நகர்த்தும் அந்த சூட்சுமே கருவுக்கான உயர் பெறுமானமாக தொய்வின்றி நகர்த்தி,வாசகனை தன்னெழுத்துக்குள் முகிழ்க்கும் மந்திரமாகிறது.கதைகள் ஒவ்வொன்றும் நம்முள் நிகழ்ந்ததாகவும்,நம் அல்லசலில் நடந்தேறிய நிகழ்வுகளாக நம்மில் பதியமிடுவதால் கதையைவிட்டு நம் சிந்தனை வெளியேறாமல் திமிர்கிறது.

இத்திறமை தேர்ந்த கதை சொல்லிகளால் மாத்திரமே நிகழக்கூடிய சாத்தியமுண்டு.அது தீரனுக்கு கைவந்த கலையாகி நெஞ்சை நிமிர்த்தி வீறுநடைபோடுகிறது.கதைகளில் இழையோடும் நகைச்சுவைப்போக்கு கதைக்கு வெளிதாண்டிடாமல் கதைகளோடு இயைந்து போவதும் தொகுதிக்கு கனதி சேர்க்கிறது.தீரனின் சொற்களைப்போன்றே கதையும் கருவும் அது நடந்தேறும் சூழலும் வைரமிக்கவை.காலத்தால் கரைத்திட முடியாத வீர்யமிக்க கதைகளின் தொகுதி.

கே.எஸ்.முகம்மது சுஅய்ப்

K S Mohammed Shuaib
வெள்ளிவிரல்...
#ஆர்எம்நௌசாத்
#காலச்சுவடுபதிப்பகம்
நாகர் கோவில் -1

R.M. Nowsaath எழுதிய இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள மொத்தம் 12 கதைகளுள் 11 கதைகள் ஏதாவதொரு சிறுகதைப் போட்டியில் முதலாம்...இரண்டாம்...மூன்றாம்...
அல்லது ஆறுதல் பரிசுகளைப் பெற்றவை...!!

ஒரே ஒரு கதை மட்டும்( தலைவர் வந்திருந்தார் ) போட்டிக்கு அனுப்பி நிராகரிக்கப்பட்டது...

யார் நிராகரித்தால் என்ன...?காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு...எனவே நவ்சாத் அதையும் இதில் இணைத்திருக்கிறார்...!!
மொத்த சிறுககதைகளும கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம் முன்னே விவரிப்பவை....அருமையான இலங்கை முஸ்லிம் தமிழ்...பிராவகமெடுத்து ஓடுகிறது கதைவெளி எங்கும்...!!

ஜெயகாந்தனுக்கு பிராமண பாஷை வாலாயமாக கைவருவதைப் போல நௌசாத்துக்கு இலங்கை முஸ்லிம் தமிழ் நேர்த்தியாக கை வருகிறது...அந்த தமிழை ரசிக்க சில சமயம் ஒரு கதையை இரண்டு தடவை.படித்தேன்...

ஒரு சாம்பிள் இது....

"செல்லேண்டி பண்டீ...! வேள என்னயோ பெசாசி புடிச்சி ஆட்டுது பாபா. பகலயள்ள புரிசனோட கதைக்காள். சிரிக்காள். சோறு சாமான் கொடுக்காள். வேலவாட செய்யறாள். அவனுக்கு ஒரு கொறையும் இல்லாம எல்லாம் செய்யறாள் ஆனா அவன் தொட்டா மட்டும் கத்துறாள். ..துடிக்காள்...அவன்ட கை பட்டா போதும் ஒரே மகுறம்தான் .சண்டைதான் ...அவன்ட ஒடம்பு பட்டாலே சுடுதுஹா....தீய்க்குதுஹா...கிட்டப்படுத்தா அனல் அடிக்குதுஹா..எண்டு செல்றாள் அவரு கிட்ட வந்தாலேஇவள்ள உடம்பு நெருப்புத் தீய்க்கிற மாதிரி இருக்குஹா எண்டு கத்துறாள். குளர்ராள் பாபா...செல்லேண்டி பண்டீ...."(பக் -37)

பேத்தி கட்டிய புருசனோடு ஒத்திசைந்து வாழாமற் போவதை எண்ணி பெருமூச்செறிந்து அவளுக்கு வைத்தியம் பார்க்க அங்கே உள்ள ஒரு போலிச் சாமியாரிடம் பேத்தியை கூட்டிச் சென்று போலி பாபாவிடம் புலம்பும் சலுகாக் கிழவியின் புலம்பல் இது...(#வெள்ளிவிரல் )

செல்வாக்கான வாப்பா இறந்துபட்ட பிறகு பெற்ற அம்மாவுக்கே இன்னொரு புருசன் தேடியலையும் பிள்ளைகளின் அல்லாட்டத்தை அழகுற விவரிக்கிறது #வேக்காடு.

இலங்கை அரசு நிர்வாகம் இந்திய அரசு நிர்வாகத்தை விட மேம்பட்டது என்றுதான் இதுவரை எண்ணி வந்திருந்தேன். ஆனால் அங்கும் ஒரு பாமரன் அரசிடமிருந்து உதவித் தொகை பெற எனனலாம் அவஸ்தை பட.வேண்டி இருக்கு என்பதை சற்றே நகைச்சுவை மிளிர சொல்கிறது
#மீள்தகவு

#தலைவர்வந்திருந்தார் என்ற கதை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருந்து மறைந்த #அஷ்ரபை மனங்கொண்டு எழுதியது போலத் தெரிகிறது.
இறந்து போன எந்தத் தலைவரும் மறுபடி திரும்பி வந்தால் ...நிச்சயம் மறுபடி இறந்து போகவே விரும்புவார் .ஒவ்வொரு தலைவருக்குப் பின்னும் அவர் நீரூற்றி வளர்த்த இயக்கம் அவரது அபிலாஷைகளுக்கு மாறாக செல்வதுதானே நவீன அரசியலின் செல்திசை....?
முஸ்லிம்களிலும் இளைஞர்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கி நகர்வதை #ஸீனத்தும்மா திறம்பட எடுத்தாள்கிறது...!

சமீபகாலத்தில் நான் எடுத்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம்.

நூலாசிரியருக்கு பாராட்டுக்களும்...வாழ்த்துக்களும்.

Wednesday, June 27, 2018

எம்.ரிஷான் ஷரீப்

M.rishan Shareef is with R.M. Nowsaath in Saintamaruthu, Sri Lanka.
Admin · June 26 at 12:38 PM


அருமையான சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்த மனத் திருப்தியை கடந்த ஒரு மாத காலமாகத் தந்து கொண்டிருக்கிருக்கிறது 'வெள்ளி விரல்'. தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதையும் யதார்த்தமான சம்பவங்களை விவரிப்பதால் சுவாரஸ்யமாக இருப்பதோடு, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் அரசியல் மற்றும் நம்பிக்கைகளை வாசகர்கள் முன் எடுத்துரைப்பதால் இத் தொகுப்பு தவிர்க்க முடியாத ஒரு தொகுப்பாகவும் இருக்கிறது.
அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரராகிய எழுத்தாளர் ஆர்.எம். நெளசாத் வெகுவாகக் கொண்டாடப்பட வேண்டியவர். அபாரமான எழுத்து நடை, வாசகர்களைத் தன்பால் எளிதாக ஈர்த்தெடுக்கிறது.

நண்பருக்கும் வாசிக்கக் கொடுத்து, அவரும் வாசித்து முடித்த பின்னர் தொகுப்பு குறித்து வெகுநேரம் உரையாடினோம். ஒவ்வொரு சிறுகதையும் பிராந்தியத் தமிழில், பேச்சு நடையில் இருப்பதால் இலங்கையின் கிழக்கு மாகாண வாசகர்களைத் தாண்டி பிறரால் இக் கதைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம் என்பது நண்பரின் கருத்து. உண்மைதான். இந்திய மற்றும் பிற தேச வாசகர்களுக்கு இத் தொகுப்பு சற்று வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் கதைக் களனுக்கு ஏற்ப அந்தப் பிராந்தியத் தமிழ் அத்தியாவசியமானதாக எனக்குத் தோன்றுகிறது. அம்மொழி நடை, கதைகளை மனதுக்கு இன்னும் நெருக்கமாக்குவதாக உணர்கிறேன்.

ஆர்.எம். நெளசாத், இலங்கையின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். 'வெள்ளி விரலை'த் தொடர்ந்து அவரது 'நட்டுமை', 'கொல்வதெழுதுதல்' தொகுப்புக்களை வாசிக்கவென எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் நிறைய எழுத அவருக்கு அனைத்தும் சாதகமாக அமையட்டும்.
- எம்.ரிஷான் ஷெரீப்

Mumthas Hafeel தீரனின் கதைகளில் நடப்பியலும் புதுமையும் இரண்டுமே இருக்கின்றன.

மருதூர் ஜமால்தீன் வெள்ளிவிரல்சிந்தையில் நிறைந்த குரல்

Saturday, June 2, 2018

(ජී.ජී.සරත් ආනන්ද)


வெள்ளி விரல் சிறுகதைத் தொகுதியிலுள்ள ''மீள்தகவு'' என்ற சிறுகதையை BANDHI MUDAL என்ற தலைப்பில் Nadigamvila Ggs Ananda (ජී.ජී.සරත් ආනන්ද) அவர்கள் மொழிமாற்றம் செய்துள்ளார்...(மிக்க நன்றிகள்-------
Nadigamvila Ggs Ananda (ජී.ජී.සරත් ආනන්ද)
Kathyana Amarasinghe
Dickwellekamal Kamal

athyana Amarasinghe is with Nadigamvila Ggs Ananda.

May 26 at 2:51pm

පාඨකයන් අතර ප්‍රකට ආර්.එම් නෞෂාද් ගේ කෙටිකතාවක පරිවර්තනයක් මෙවර ලක්බිම මංජුසාව අතිරේකයේ පළවේ. ප්‍රවීණ පරිවර්තකයෙකු වූ ජී. ජී සරත් ආනන්ද මෙම කෙටිකතාව පරිවර්තනය කර ඇත..