வெள்ளிவிரல்...
#ஆர்எம்நௌசாத்
#காலச்சுவடுபதிப்பகம்
நாகர் கோவில் -1
R.M. Nowsaath எழுதிய இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள மொத்தம் 12 கதைகளுள் 11 கதைகள் ஏதாவதொரு சிறுகதைப் போட்டியில் முதலாம்...இரண்டாம்...மூன்றாம்...
அல்லது ஆறுதல் பரிசுகளைப் பெற்றவை...!!
ஒரே ஒரு கதை மட்டும்( தலைவர் வந்திருந்தார் ) போட்டிக்கு அனுப்பி நிராகரிக்கப்பட்டது...
யார் நிராகரித்தால் என்ன...?காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு...எனவே நவ்சாத் அதையும் இதில் இணைத்திருக்கிறார்...!!
மொத்த சிறுககதைகளும கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை நம் முன்னே விவரிப்பவை....அருமையான இலங்கை முஸ்லிம் தமிழ்...பிராவகமெடுத்து ஓடுகிறது கதைவெளி எங்கும்...!!
ஜெயகாந்தனுக்கு பிராமண பாஷை வாலாயமாக கைவருவதைப் போல நௌசாத்துக்கு இலங்கை முஸ்லிம் தமிழ் நேர்த்தியாக கை வருகிறது...அந்த தமிழை ரசிக்க சில சமயம் ஒரு கதையை இரண்டு தடவை.படித்தேன்...
ஒரு சாம்பிள் இது....
"செல்லேண்டி பண்டீ...! வேள என்னயோ பெசாசி புடிச்சி ஆட்டுது பாபா. பகலயள்ள புரிசனோட கதைக்காள். சிரிக்காள். சோறு சாமான் கொடுக்காள். வேலவாட செய்யறாள். அவனுக்கு ஒரு கொறையும் இல்லாம எல்லாம் செய்யறாள் ஆனா அவன் தொட்டா மட்டும் கத்துறாள். ..துடிக்காள்...அவன்ட கை பட்டா போதும் ஒரே மகுறம்தான் .சண்டைதான் ...அவன்ட ஒடம்பு பட்டாலே சுடுதுஹா....தீய்க்குதுஹா...கிட்டப்படுத்தா அனல் அடிக்குதுஹா..எண்டு செல்றாள் அவரு கிட்ட வந்தாலேஇவள்ள உடம்பு நெருப்புத் தீய்க்கிற மாதிரி இருக்குஹா எண்டு கத்துறாள். குளர்ராள் பாபா...செல்லேண்டி பண்டீ...."(பக் -37)
பேத்தி கட்டிய புருசனோடு ஒத்திசைந்து வாழாமற் போவதை எண்ணி பெருமூச்செறிந்து அவளுக்கு வைத்தியம் பார்க்க அங்கே உள்ள ஒரு போலிச் சாமியாரிடம் பேத்தியை கூட்டிச் சென்று போலி பாபாவிடம் புலம்பும் சலுகாக் கிழவியின் புலம்பல் இது...(#வெள்ளிவிரல் )
செல்வாக்கான வாப்பா இறந்துபட்ட பிறகு பெற்ற அம்மாவுக்கே இன்னொரு புருசன் தேடியலையும் பிள்ளைகளின் அல்லாட்டத்தை அழகுற விவரிக்கிறது #வேக்காடு.
இலங்கை அரசு நிர்வாகம் இந்திய அரசு நிர்வாகத்தை விட மேம்பட்டது என்றுதான் இதுவரை எண்ணி வந்திருந்தேன். ஆனால் அங்கும் ஒரு பாமரன் அரசிடமிருந்து உதவித் தொகை பெற எனனலாம் அவஸ்தை பட.வேண்டி இருக்கு என்பதை சற்றே நகைச்சுவை மிளிர சொல்கிறது #மீள்தகவு
#தலைவர்வந்திருந்தார் என்ற கதை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருந்து மறைந்த #அஷ்ரபை மனங்கொண்டு எழுதியது போலத் தெரிகிறது.
இறந்து போன எந்தத் தலைவரும் மறுபடி திரும்பி வந்தால் ...நிச்சயம் மறுபடி இறந்து போகவே விரும்புவார் .ஒவ்வொரு தலைவருக்குப் பின்னும் அவர் நீரூற்றி வளர்த்த இயக்கம் அவரது அபிலாஷைகளுக்கு மாறாக செல்வதுதானே நவீன அரசியலின் செல்திசை....?
முஸ்லிம்களிலும் இளைஞர்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கி நகர்வதை #ஸீனத்தும்மா திறம்பட எடுத்தாள்கிறது...!
சமீபகாலத்தில் நான் எடுத்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம்.
நூலாசிரியருக்கு பாராட்டுக்களும்...வாழ்த்துக்களும்.
No comments:
Post a Comment