Haajara Nowzath
September 16 at 10:29pm · Edited ·
ஒரு எழுத்தாளன் தன் கற்பனைக்கு வடிவம் கொடுத்து அந்தவடிவத்தின் மூலம் பிறரை மகிழ்விக்க எவ்வாறு தன் வாழ்க்கையை மெழுகுவர்த்திபோல் உருக்குகிறான் என்பதை ஒரு எழுத்தாளரின் அவரின் புத்தகத்தின் என்னுரை பகுதியின் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது....... ##(நான் எழுதிய நாவல்கள் என் நாள்களை விழுங்கிவிட்டன)## இது தீரன் நெளஸாத் என்ற நாவலாசிரியரின் வெள்ளிவிரல் சிறு கதை தொகுப்பு முக அட்டை...
Friday, September 25, 2015
Saturday, August 1, 2015
மேமன் கவி
ஆர்.எம்.நெளசாத்தின் 'வெள்ளி விரல்'
சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் விளக்கு-
மேமன் கவி
சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் விளக்கு-
மேமன் கவி
Thursday, July 30, 2015
இரண்டாம் விஸ்வாமித்திரன்
-செங்கதிர்--ஏப்ரல் 2012-- திறன் நோக்கு - வெள்ளி விரல்
ஒரு கதை முடிவடையும்போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடுவதில்லை. கதை முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது இந்த ‘வெள்ளி விரல்’.
இரண்டாம் விஸ்வாமித்திரன்
இருபது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த சிறுகதைத் தொகுதியொன்றை அண்மையில் வாசித்தபோது அதில் பிரசுரிக்கப்பட்டிருந்த குறிப்பில் “தமிழில் வெளிவந்துள்ள பல நூறு சிறுகதைத் தொகுதிகளுள் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது ஒரு கதையாவது ஏதாவது ஒரு வகையில் சிறப்புடையதாகவே இருக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நமது எதிர்பார்ப்பிலும் அதிகமாக சிறுகதைகளும் அவற்றைத் தாங்கி தொகுதிகளும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றையநிலையில் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவுமொன்று எனும்பாங்கில்தான் பல சிறுகதைத் தொகுதிகள் வந்து விழுகின்றன.
இந்தச் சு10ழ்நிலையில்தான் ஆர்.எம்.நௌஸாத் அவர்களின் ‘வெள்ளி விரல்’ சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ‘வெள்ளிவிரல்’ முற்றிலும் வேறுபட்டதான ஒரு சிறுகதைக் கோவையாகக் கனிந்துள்ளது. . நமக்குப் பழக்கப்பட்டுப்போன சு10ழலோடு மட்டும் நின்று விடாமல் தாய்நாடு என்றும் தாய்லாந்து என்றும் ஏகாந்த வெற்றிடமென்றும் விசாலமான விண்வெளி என்றும் கதைக்குக் கதை வௌ;வேறு களம் நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்துகின்றது. காலச்சுவடு பதிப்பகம் பன்னிரெண்டு கதைகளை ஒருசேரத் தொகுத்து இதனை வெளியிட்டுள்ளது.
சிறிது நேரத்துக்கேனும் கவனம் முழுவதையும் ஈர்த்துப் பிடித்து வாசகனின் மனம் விரும்பும் கலைநயம்கொண்ட கதைகளின் ஊடாக செய்தியொன்றை வழங்குவதுதானே சிறுகதைக்குச் சிறப்பு. அந்தவகையில்; தமிழ்ப் புனைகதையுலகில் சிறுகதையின் வெற்றியின்மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை ‘வெள்ளி விரல்’ வென்றுள்ளதா என்பது பற்றிய தரிசனமாக இந்த விமர்சனம் அமைகின்றது.
(02)
கவிதைஇ சிறுகதை (நகைச்சுவைக்) கட்டுரை\ நாடகம் நாவல் எனப் பல்துறையிலும் நாட்டம் கொண்டவர் என்பதுடன் அவற்றில் பரிசில்களும் வென்றவர். இதுவரை எழுதிய சுமார் இருபத்தைந்து சிறுகதைகளில் பத்தொன்பது கதைகள் பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பரிசில்கள் பெற்றுள்ளன. பரிசுபெற்ற எட்டுக் கதைகளுடன்‘வல்லமை தாராயோ’ என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. 2008 இல் தமிழ்நாட்டில் ‘சுந்தர ராமசாமி 75’ நாவல் போட்டியில் இவரது ‘நட்டுமை’ என்ற நாவல் முதற் பரிசினை வென்றது.
(03)
தமிழ் இலக்கிய உலகத்தினரால் நன்கு அறியப்பட்டு வருகின்ற புலம்பெயர் எழுத்தாளரான ஷோபாசக்தி அவர்கள் ‘வல்லினம்’ என்ற இணைய இதழில் கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கும்போது தனக்குப் பிடித்த ஈழத்தின் முதல் பத்து நாவல்களில் நட்டுமையும் ஒன்றெனக் குறிப்பிட்டிருந்தார். இது மற்றொரு காரணம்.
நூலாசிரியர் என்ற வகையில் முகவுரையில் சிறுகதைகள் பற்றிய ஒரு சிறுஇ கதை என்ற தலைப்பில் தன் உணர்வுகளைப் பதிவு செய்திருந்தார். அதில் எழுதுவதிலுள்ள சிரமங்கள்இ தேடல்கள்இ வலிகள்இ கதைகளின் ஒவ்வொரு நிலையும் தரும் வேதனைகள் சொல்லி மாளா என்றும் ஒரு கதையை எழுத ஓராண்டு காலம் பிடிக்கும்போலிருக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டதிலிருந்து நல்ல கதைகளையே இத் தொகுதியில் தந்திருப்பார் என்பது பிறிதொரு காரணம். இப்படியான நம்பிக்கைகளுடன் தொகுதியை வாசித்து முடித்தேன். ‘தாய்.மொழி’ ‘மீள்தகவு’ ‘வேக்காடு’ என்பன மிக நல்ல கதைகள்.
தாய்.மொழி என்பது தொகுதியின் முதற் கதையாகும். இலங்கையைச் சேர்ந்த அரசரத்தினம் தாமோதரநாதன் என்ற இக்கதையின் நாயகன் (தாமோங் என்பது சுருக்கப் பெயர்) தாய்லாந்தில் ஒரு இரவுக் களியாட்ட விடுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அப்போது ஹோட்டல் அறையொன்றிலிருந்து குற்றச்சாட்டொன்றின்பேரில் தாக்குதலுக்குள்ளாகி அடி தாங்க முடியாமல் ஒருவன் “என்ர அம்மோவ் என்ர கடவுளே” என்று அலறுவதைக் கேட்டு அதிர்ந்து போகிறான் தாமோங். எத்தனையோ வருடங்களின் பின் இந்த மொழியை –தாய் மொழியை - தமிழ்மொழியைக் கேட்கிறான். தனது தாய்மொழிமீது கொண்ட பற்றுதலுக்காக கதவைத் திறந்து அவனை இரகசியமாக ஓட விடுகிறான் என்று கதை முடிகின்றது. பகலில் பயில் மொழியாகவும் இரவில் இல்லத்து மொழியாகவும் பயன்படுத்திவிட்டு ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று கோசம் போடுபவர்களை எட்டி உதைக்கிறது இந்தக் கதை.
‘மீள்தகவு’ என்பதும் சிறப்பான மற்றுமொரு கதை. இனக்கலவரமொன்றில் தனது ஒரு கையை இழந்ததால் அரசாங்கத்திடமிருந்து உதவுதொகை ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் ஒருவன் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கதை. காரியாலயங்கள் ஒவ்வொன்றாக ஏறி இறங்கும் அவல நிலையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கின்றது. அரசு இயந்திரத்தின் அசமந்தம் இங்கே படம் பிடிக்கப்படுகின்றது. உருவம் இஉள்ளடக்கமஇ; உத்தி இபடைப்புமொழி என எல்லாவகையிலும் நல்ல கதை.
‘வேக்காடு’ பிறிதொரு நல்ல கதை. தமிழிலக்கிய உலகின் இமயம் எஸ்.பொன்னுத்துரை 1990களின் முற்கூறில் ‘வீ’ என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார். அத்தொகுதியில் உள்ள ‘அணி’ என்ற கதையை இங்கு நினைவு படுத்தவேண்டியுள்ளது. இக்கதையில் கதைசொல்லும் புதிய உத்தியொன்றை அறிமுகம் செய்திருந்தார். அதாவது முன்னே ஒருவனை நிறுத்தித் தானே பேசுவதாக அக்கதையை வடிவமைத்திருந்தார்.ஒரேயொரு பாத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு சொற்கள் எதுவும் வராமல் எழுதும் இம்முறை சிரமமானது மட்டுமல்ல அப்போது தமிழிற்குப் புதிதாகவும் அமைந்திருந்தது.
ஆர்.எம்.நௌஸாத்தின் ‘வேக்காடு’ என்ற கதையிலும் இதே உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி தனது மச்சி ( மச்சாள் ) முறையானவளை தனக்கு முன்னால் வைத்துக் கொண்டு மரணித்துப்போன தனது தந்தையின் சமூக ஆளுமையைச் சொல்லுகின்றாள். கதை முழுவதும் மருதநில மண்வாசனை மணக்கிறது. இவ்வாறானவற்றோடு இன்னும் பல கதைகளும் பாராட்டத் தக்கவையாக உள்ளன.
தொகுதியின் முன்னுரையில் முதலாவது வசனமாக “யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று” என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கும் கதையாசிரியர் யுத்தத்தின் காரணமாக நிமிடத்திற்கு நிமிடம் மரணத்தைக் எதிர்பார்த்துக் காத்துக்கிடந்த துன்பியல் வாழ்வையும் மற்றும் யுத்தத்தின் கோரமுகத்தையும் இந்தக் கதைகளில் பட்டும் படாமல் தொட்டுச் சென்ற அதேவேளை அதனை ஈடு செய்தது ‘விட்டு விடுதலையாகி’ என்ற கதை. .
‘விட்டு விடுதலையாகி’ என்பது தற்கொலைக் குண்டுதாரி ஒருவனின் கதை. வெடிப்பதற்கு ஒரு மணித்தியாலம் முன்னதாக சிறுகதையொன்றை எழுத ஆரம்பிக்கின்றான். எழுதி முடிய முன்னரே உரிய நேரம் வந்து விட்டதால் குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொள்கிறான். இந்தக் கதையில் குண்டுவெடிப்பின் காரணமாக தலைநகரின் அசைவியக்கம் படம்பிடிக்கப்பட்டு அதன் நேர்முக வர்ணனை இறந்தகால எழுத்தாகிக் கதையாகி வந்து விழுந்துள்ளது.
பன்னிரெண்டு கதைகளில் ‘சாகும் தலம்’ என்பது கடைசிக் கதை.. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் அதாவது 10.12.3998 இல் நடைபெறும் என்பதான கற்பனையில் சொல்லப்பட்ட அறிவியல் புனைகதை. அய்ம்பதிலும் கூடிய வயதினரை உயிரழிப்புச் செய்யும் அரசாங்கத்தின் செயற்திட்டம் பற்றிய இரண்டு ரோபோக்களின் கதை. இந்தக் கதை இருபதாம் நூற்றாண்டில் பிரபல்யம் அடைந்த இருப்பியல்வாதத்தினையும் ;(நுஒளைவநவெயைடளைஅ) இதன் முன்னோடியான தஸ்தயேவ்ஸ்கி என்ற ஒரு படைப்பாளியையும் ஞாபகமூட்டியது.
“முட்டாள்களும் போக்கிரிகளும்தான் அவ்வாறு வாழ்கிறார்கள். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் மனிதன் இவ்வுலகில் வாழ்வதென்பது அபத்தம்”; என தஸ்தயேவ்ஸ்கி கூறுகின்றார். சனத்தொகை அடிப்படையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இன்றைய சு10ழ்நிலையில் இருப்பியல்வாதத்திற்கு ஒரு எதிர்காலம் உண்டென்பதற்கு மாற்றமாக ரோபோக்களை தற்கொலை செய்யச் செய்து அரசாங்கத்தின் செயற்திட்டத்தை தோல்வியாக்கி கதையை புதிய உத்தியுடன் முடித்திருக்கிறார்.
‘காலவட்டம்’ என்ற கதையில் தமிழ் அரசியல் கொஞ்சம் எட்டிப்பார்க்கின்றது. அவ்வாறே ‘தலைவர் வந்திருந்தார்’ என்ற கதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உள்வீட்டுப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகின்றது.. எல்லாக் கதைகளுமே பரிசு பெற்ற கதைகளாயிருக்க ;தலைவர் வந்தார்’ மட்டும் பரிசு பெறாத கதை. பரிசு கிடைக்குமென்று நம்பியிருந்தநிலையில் அது கிடைக்காமல்போனதால் ஏற்பட்ட ‘வெப்பிசாரத்தை’ மறைக்கும் எத்தனமாக ‘தலைவர் வந்திருந்தார்’ என்ற கதைக்கு நிராகரிக்கப்பட்ட கதை என்று பிற்குறிப்புப் போட்டு கலகலப்பூட்டுகிறார். பரிசு கிடைப்பதென்பது பல்வேறு கூத்துகளின் அரங்கேற்றம்தானே தவிர தர நிர்ணயிப்புத் தராசுத் தட்டல்ல என்பதுதான் உண்மை.
(04)
‘கல்லடிப் பாலம்’ என்ற கதை வித்தியாசமானது “இறைவன் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்று ‘ஸீனத்தும்மா’ என்ற கதையில் சொல்லி விட்டு ‘நல்லதொரு துரோகம்’என்ற கதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உயிரைப்பறிப்பது மட்டும் எப்படி நியாயமாகும்.?தொலைந்துபோன பொருளைக் கண்டுபிடிக்க ‘வதனமார்’ என்ற கதையில் ஆனைச்சித்தனையும் பாலுறவுச் சிக்கலைத் தீர்க்க ‘வெள்ளிவிரல்’ கதையில் வெள்ளிப் பரிகாரியையும் கதாநாயகர்களாக ஆக்கியதன்மூலம் மூடக் கொள்கைகளுக்கு விளம்பரமாகியுள்ளன இந்தக் கதைகள்.
‘ஸீனத்தும்மா” வின் கிராமியச் சூழலானது கதையின் பலமாக இருக்க அளவுக்கு மீறிய பேச்சுமொழிச் சொற்களால் கதை பலவீனமாகியது சிங்களம் இ அரபு இ ஆங்கிலம் என்று வேற்று மொழிச் சொற்கள் கொஞ்சம் கூடுதலாகவே இடம் பிடித்தமை போன்ற சரிவுகளுக்கும் அப்பால் படைப்பு மொழியும் ‘ஆனைச்சித்தன்’ (வதனமார்) மற்றும் ‘சலுகாக் கிழவி’ ( வெள்ளி விரல்) ஆகிய சில பாத்திரங்களின் வார்ப்புகளும் சிலாகிக்கத் தக்கது...
கதை முடிவடையும்போது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்து விடுவதில்லை. கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது இந்த ‘வெள்ளி விரல்’.
செங்கதிர் ஏப்ரல் 2012--
ஏ.பீர் முகம்மது.
நௌஸாத்தின் சிறுகதைத் தொகுதிமீதான சிறப்புக் கண்ணோட்டம்.
காதலையும் மனிதாபிமானத்தையும் துல்லியப்படுத்தும் வெள்ளி விரல்
-----ஏ.பீர் முகம்மது.-----
தமிழ்ச் சிறுகதையுலகின் பார்வையில் வித்தியாசமாகவும் வெற்றிகரமாகவும் தன்னை ஈடுபடுத்தி எழுத்தூழியம் செய்து வருபவர் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள். அவரின் பரிசு பெற்ற பன்னிரெண்டு சிறுகதைகளை ‘வெள்ளி விரல்;’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒருசேரத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது.
சிறுகதைப்புனைவின் கூறுகளை நன்கு விளங்கிக் கொண்டநிலையிலும் மனித மனங்களை எக்காலத்திலும் பிணைக்கின்றதாகவும் இக் கதைகள் எழுதப்பட்டுள்ளன.
ஆற்றுநீர் போலும் ஆழத்தை வெளிப்படுத்தும் அட்டைப் படமும் ஆரவாரமில்லாத பத்து வரியிலான பதிப்பக அறிமுகமும் சிறுகதைபற்றிய ஒரு சிறுஇகதை என்ற ஆசிரியரின் தன்னுரையும் தொகுதியை உடன் வாசிக்க வைத்துவிடுகின்றன
நமக்குப் பழக்கப்பட்டுப்போன சு10ழலோடு மட்டும் நின்று விடாமல் தாய்நாடு என்றும் தாய்லாந்து என்றும் ஏகாந்த வெற்றிடமென்றும் விசாலமான விண்வெளி என்றும் கதைக்குக் கதை வௌ;வேறு களம் நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்துகின்றது.
தாய்லாந்து நாட்டின் தலைநகரமாகிய பாங்கொங்கிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘கூவன்கோன்’ மாநிலத்திலுள்ள இரவுக் களியாட்ட விடுதியொன்றுக்குப் பறந்து வாருங்கள் என்று நம்மை அழைத்துச் சென்று ‘தாய்.மொழி’ என்ற முதலாவது கதையை தட்டில் வைத்துத் தருகிறார் நூலாசிரியர்.
தமிழ்மொழிக்காக தாய்லாந்து நாட்டில் தனது தொழிலைப் பணயம் வைக்கும் இலங்தைத் தமிழனின் கதை. “என்ர அம்மோவ்இ என்ர கடவுளேஇ என்னக் காப்பாத்து” என்ற அழுகுரல் சத்தம் ஹோட்டல் அறையொன்றிலிருந்து வருவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கதையின் நாயகன் குற்றஞ்சாட்டின்பேரில் தாக்குதலுக்குள்ளாகும் ஒருவனைக் கதவைத் திறந்து தப்பியோட விடுகிறான். தமிழ்மொழிக்காக இதனைச் செய்யாவிட்டால் நான் என்ன? என் தொழில் என்ன? என்று முகத்துக்கு நேரே நின்று காட்டமாகக் கேள்வி கேட்கும் கதை தாய்.மொழி.
‘சாகும் தலம்’ என்பது இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் அதாவது 3998 இல் நடைபெறுவதான அறிவியல் புனைகதை. ஐம்பதிலும் கூடிய வயதினரை உயிரழிப்புச் செய்யும் அரசாங்கமொன்றின் செயற்திட்டத்தில் பணிக்கமர்த்தப்பட்ட இரண்டு ரோபோக்களின் கதை.உயிர் வழங்கப்பட்ட துஸ்யந்தன் எனும் ஆண் ரோபோவும் சகுந்தலை என்னும் பெண் ரோபோவும் காதலர்கள்.வயோதிபர்களைக் கொன்றொழிக்கும் அன்றைய தினம் சகுந்தலையின் பிறந்த நாள். பிறந்த நாள் பரிசாக வயோதிபர்களுக்கு உயிர்த்தானம் கொடுக்க விரும்புவதாகச் சொல்லி சகுந்தலையை முத்தமிட்ட பின்னர் ராக்கட்டை கடலுக்கு மேலால் செலுத்தி கீNழு விழுந்து துஸ்யந்தனும் சகுந்தலையும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.. வயோதிபர்களுக்கு உயிர்த்தானம் காதல் பரிசாகக் கிடைக்கின்றது.; நமக்கு துஸ்யந்தன் சகுந்தலை ரோபோ காதல் காவியம் பரிசாகக் கிடைக்கின்றது.
‘கல்லடிப்பாலம்’ என்ற கதையில் தவராஜா – றுவைதா காதல் காவியம் கைநழுவிப்போயிற்று. இந்தக் கதையிலாவது கிடைத்தது ரோபோ காதல் காவியம். மனித உயிரின் அடிப்படையே மனிதாபிமானமும் காதலும்தான் என்பதை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. அறிவியற் புனைகதை என்ற வகையில் கலைச் சொற்களின் பயன்பாடும் கதைசொல்லியின் வினைத்திறனும் கதையைக் கனதியாக்குகின்றது.
‘விட்டு விடுதலையாகி’ என்பது தற்கொலைக் குண்டுதாரி ஒருவன் பற்றிய கதை. வெடிப்பதற்கு ஒரு மணித்தியாலம் உள்ள நிலையில் சிறுகதையொன்றை எழுத ஆரம்பித்து எழுதி முடியமுன்னர் உரிய நேரம் வந்து விட்டதால் வெடித்துச் சிதறி நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது கதை.. குண்டு வெடிப்பின் பின்னரான தலைநகரின் யதார்த்தம் நறுக்குத் தெறித்தாற்போலும் வசனங்களால் படம் பிடிக்கப்படுகின்றது.
“இறைவன் தந்த உயிரைக் காவு கொள்ள எவருக்கும் உரிமையில்லை” என்று ‘ஸீனத்தும்மா’ கதையில் மனதாபிமானத் தத்துவத்தைச் சொன்ன கதாசிரியர் மற்றொரு கதையில் சிறுமியை வல்லுறவுக்கு முயற்சித்த பொலிஸ் அதிகாரியை அவன்கூடவே வந்த ஊர்க்காவல்படை வீரன் சுட்டுக் கொன்றபோது ‘நல்லதொரு துரோகம்’ என்று கதைக்குத் தலைப்பிட்டது ஏன்? கதையை வாசித்தபோது நியாயம் தெரிந்தது..
‘வெள்ளி விரல்’ ‘வதனமார்’ ஆகிய கதைகள் மானுடச்சிக்கல் உருவாக்கத்தின் பின்புலத்தை வெளிப்படையாகச் சொல்லும் கதைகள். சுகத்தைத் தொலைத்துவிட்டு பரிகாரியிடம் விடை தேடி நிற்கும் ‘வெள்ளி விரல்’ கதையைப்போலவே ‘வதனமார்’என்ற கதையும் பொருளைத் தொலைத்துவிட்டு ஆனைச்சித்தனைத்தேடி சுடலைக்குப் போகும் கதை.’ வெள்ளி விரல்’ சலுகாக் கிழவியையும் ‘வதனமார்’ ஆனைச் சித்தனையும் செப்பமாச் செதுக்கியுள்ளார் ஆசிரியர்.
கதை சொல்லும் உத்தியினால் ‘வேக்காடு’ கதை ஏனையவற்றிலிருந்து வேறுபடுகின்றது. நடுத்தர வயதுப் பெண் கதாபாத்திரம் தனது குடும்பத்தின் நிலையை தனக்கு முன்னாலுள்ள மற்றொருவரிடம் சொல்லுகின்றது. இக்கதாபாத்திரத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு பேச்சு எதுவுமில்லாத வகையில் கதை நகர்;த்தப்படுகின்றது. இவ்வாறாகக் கதை சொல்லும் உத்தி சற்றுக் கடினமானது.
கையாலாகாத்தனம் ‘மீள்தகவு’ என்ற பெயரில் சிறுகதையாகப் பிரசவமாகியுள்ளது. இனக்கலவரத்தில் கையிழந்துபோன அப்பாவி ஒருவர் தனக்குரிய உதவிப்பணத்தைப் பெறமுனையும்போது இலஞ்சம் மொழிப்பிரச்சினை ஏச்சுப் பேச்சு அசமந்தம் என்று அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அந்த அப்பாவிமீது நமது அனுதாபத்தைப் பீய்ச்சுகிறது. அரசு உத்தியோகத்தர்களின் கறுப்பு முகத்தை புதியதொரு சிறுகதைப் பாணியில் தோலுரிக்கிறது இந்த ‘மீள்தகவு’.
‘தலைவர் வந்திருந்தார்’ என்பது முழுக்க முழுக்க அரசியலைச் சொல்லுகின்றது.. ‘காலவட்டம்’ என்பது சரணடையும் எதிரியைக் காப்பாற்றுதல் தார்மீகப் பொறுப்பு என்பதைச் சொல்லி தமிழ் அரசியலை ஞாபகமூட்டுகின்றது.
“ கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி கதை உத்தி கருதி 2009 என செவ்விதாக்கம் செய்யப்பட்தான ஆசிரியரின் பிற்குறிப்பு கதைக்குச் சேலைன் பாய்ச்சியதால் ‘காலவட்டம்’ சத்துள்ள கதையாகச் சமைகிறது.
கதைகளினூடே உலா வரும் கதாபாத்திரங்கள்இ இயல்பாகவே வந்து விழும் சொற்கள்இ வசனச் செறிவுஇ படைப்பு மொழிப் பிரயோகம்இ வௌ;வேறு வகை உத்திகளால் நாம் அடையும் பிரமிப்புஇ கதையின் தளத்திலிருந்து சமுகத்தைப் பிணைக்கும் நுட்பம் எனவாகும் பல வழிகளினால் மேற்கிளம்பி ஐந்து நட்சத்திர அந்தஸ்து நோக்கிப் பயணம் செய்கிறதோ இந்த ‘வெள்ளி விரல்’.
நன்றி தினகரன் 18.05.2012
Saturday, July 25, 2015
முல்லை முஸ்ரிபா
வெள்ளிவிரலின் கதைப்பின்னல்
பனுவல் புதிது-
முல்லை முஸ்ரிபா- (மர்யம்)
விடிவெள்ளி- 24.01.2013
கதைவெளி புதியபரிணாமங்களுடன் விரிந்திருக்கிறது. மரபு சார்ந்திருந்த கதைப்பின்னல் முறைமையானது புறக்கணிக்கப்பட்ட அல்லது புதுமை அவாவுகையில் துலங்குகின்றது. வெள்ளி வெளியாக உருவங்கொண்டுவிட்டது.
உருவங்களைச் சிதைத்துக் கொண்டு புதிய உருவங்களைத் தேடல் என்பத நவீன இலக்கியத்தின் இயக்கமாகவே உள்ளது. இத்தகைய இயக்கம் நமது இலக்கிய வெளியைக் கனதியாக்குவது மட்டுமன்றி சிருஷ்டியின் உன்னதத்தையும் உணர்த்தி நிற்கின்றது.. இந்தப் பண்பு இன்று சிறுகதைகளிலும் பொருந்தி நிற்கின்றது. நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றையுடைய சிறுகதைக்கென்று இருந்துவந்த கட்டுமானங்கள் சட்டகங்கள் யாவும் இன்று தளர்ந்தும் வளர்ந்தும் வேறு ஒரு சாயலில் படைப்புவெளியை அகலித்துவிட்டது.
கதைகள் அதன் உட்பொருளிலும் அப்பொருளை வெளிப்படுத்தும் மொழி லாவகத்திலும் அம்மொழியால் கட்டமைக்கப்படும் உருவத்திலுமென புதுமை கோலோச்சத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு பேனாக் கோலோச்சும் நமது கதை சொல்லிகளுள் குறிப்பிடத்தக்கவராக அடையாளம் காட்டுபவர் தீரன் ஆர்.எம். நௌஸாத்.
நௌஸாத் தற்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களில் புதிய வீச்சம் நிறைந்தவர். நட்டுமை எழுத்து இதற்கு சாட்சி சொல்லும். உள்ளடக்கச் செழுமையும் உருவக்கட்டமைப்பும் கொண்டிருந்ததுää இவரது நட்டுமை நாவல் எழுத்து.
நட்டுமைக்குப் பின்னால் வந்திருக்கும் வெள்ளிவிரல் பன்னிரெண்டு கதைகளைப் பின்னியிருக்கிறது. இந்தப் பின்னல்கள் ஏதாவதொரு போட்டிக்காகப் பின்னப்பட்டவை அல்லது பின்னப்பட்டு போட்டிக்கு அனுப்பப்பட்டவை.. இவற்றுள் ~தலைவர் வந்திருந்தார்..| தவிர ஏனையவை போட்டிகளில் பரிசு வென்றவை..
பரிசுவென்ற கதைகளின் பரிசுத் தொகுப்பாகவே வெள்ளிவிரல் காலச்சுவடு பதிப்பகத்தில் 2011ல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2000ல் ~வல்லமை தாராயோ…| என்ற கதைத் தொகுப்பை நமது வாசிப்புத் தளத்துக்கு தந்திருக்கிற நௌஸாத் ~வெள்ளிவிரலி|னூடாக மேலும் பிரகாசிப்பதைக் காணமுடிகிறது.
~யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று….| என்று கூறும் நௌஸாத் யுத்தவெளியின் ஒட்டுமொத்த அவலங்களையும் உள்வாங்கி உணர்வில் பொங்கி அல்லது மனம் பேதலித்த நிலையில் பேனாவிடம் தஞ்சமடைந்திருக்கின்றார். இந்தத் தஞ்சமே இவரது எழுத்தைக் கூர்மைப்படுத்தியுமிருக்கிறது.
படைப்பாளியின் நோக்குநிலைää படைப்புமொழிääகதைக்கரு ääஇயங்குதளம்ää தனித்துவ நடைää புதுமைஉத்திää முடிவு என்று அவர் சொல்வது போல ஒவ்வொன்றின் மீதும் உள் ஒன்றிநின்று கதைவெளியைக் கட்டமைக்கின்றார் நௌஸாத்.
படைப்பாளியின் மனஅடுப்பின் கொதிப்பிலிருந்து நுரைபொங்கி வருகின்ற பால்தான் எழுத்து.. அந்தப் பாலின் இன்சுவையும் அது பொங்கும் லாவகமும் போல கதை எழுத்தும் அமைதல் வேண்டும். அத்தகைய கதை பொங்கும் எழுத்துக்கள் நௌஸாத்துடையவை.
~தாய்மொழி| முதலாக ~சாகும்தலம|; ஈறாக பன்னிரு கதைகள் காட்டும் விந்தைகள்.. விந்தைகளுக்குள்ளிருந்து வியாபிக்கும் உணர்வுகள் உணர்வுகளுடாக அறியமுடிகிற சமுக மாந்தர் இயல்புகள்.. நடத்தைக் கோலங்கள்.. கோலங்களுடாக வெளிப்படுத்தும் சமுகப் பார்வை என நௌஸாத் கதை பின்னணியில் புதியநுட்பங்களை இழையோடச் செய்கிறார். சம்பவங்களும் சம்பவங்களின் அடியாகத் தோன்றும் உணர்வுகளுமென கதை சொல்லி இயங்கும் தளம் வியப்புக்குரியது.
நௌஸாத்தின் வெள்ளிவிரல் கதைகளை இரண்டு நிலையில் நோக்கலாம்.
01. கதைசொல் முறையில் ஒரு நவீனப் பாய்ச்சல்
02. கதைபொதிந்துள்ள உள்ளடக்க வீச்சம்.
நல்லகதையின் வெற்றியென்பது இவ்விரண்டு தளமும் சந்திக்கும் புள்ளியில்தான் தெரியும். நௌஸாத்தின் பெரும்பாலான கதைகள் இவ்விரண்டு தளங்களினதும் சங்கமிப்புகளாகவே வெளிப்படுகின்றன.
விட்டுவிடுதலையாகி.. மீள்தகவு.. காலவட்டம்.. ஸீனத்தும்மா.. சாகும்தலம்..முதலிய கதைகள் வெளிப்பாட்டுத் தளத்தில் நவீனத்துவம் மிக்கவை..
வெள்ளிவிரல்.. விட்டுவிடுதலையாகி.. மீள்தகவு.. காலவட்டம்.. தலைவர் வந்திருந்தார்.. ஸீனத்தும்மா.. முதலியன் பொருள்வீச்சம் நிறைந்தவை.
தாய்மொழி..சாகும்தலம்.. வதனமார் போன்றன புதிய அனுபவத்தைப் பாய்ச்சுபவை..
தலைவர் வந்திருந்தார்.. ஸீனத்தும்மா.. வெள்ளிவிரல்.. ஆகியன சமுக அடக்குமுறையின் குரலாக வெளிப்படுபவை.. விட்டுவிடுதலையாகி.. நல்லதொரு துரோகம்.. முதலியன போராட்ட காலத்தை மையப்படுத்தியவை.
இப்படியாக நௌஸாத்தின் கதைத் தேர்வும் கதை சொல்லும் நேர்த்தியும் அழகிய பின்னலாக வாசகர் மனதில் இழையோடி நிற்கின்றன..
நௌஸாத்தின் கதைகள் இன்னொரு பரிமானத்தின் அவாவுகை எனலாம்.0
-மர்யம்- விடிவெள்ளி-
Thursday, July 16, 2015
இலங்கை செய்திகள்
இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012
திங்கள்இ 01 அக்டோபர் 2012 00:30 செய்தி -
இலங்கை செய்திகள்
நு-ஆயுஐடு | PசுஐNவு |
கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2012) வெயங்கொடஇ பத்தலகெதர சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வருடாந்த தேசிய சாகித்திய விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் சிங்களஇ தமிழ்இ ஆங்கில மொழிகளில் எழுந்த மிகச் சிறந்த நூல்களுக்கு தேசிய சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில்இ 2011ம் ஆண்டு சிறுகதைஇ நாவல்இ கவிதைஇ காவியம்இ மொழிபெயர்ப்புஇ ஆய்வு முதலான பல துறைகளிலும் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டுஇ அவற்றுக்கான விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.
இம்முறை தேசிய சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. சிறந்த நாவல் - “சொடுதா - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த சிறுகதைத் தொகுதி
“வெள்ளி விரல் - ஆர். எம்.நௌஷாத்
03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷெரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (சிறுவர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவல்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (பல்துறை) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
தேசிய சாகித்திய விருதுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களுள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
சுநயன அழசந யடிழரவ இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 ஜ5979ஸ | இலங்கை செய்திகள் | செய்தி யவ றறற.றநடி-யசஉhiஎந.inநெசயஅ.உழஅwww.web-archive.inneram.com
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
சுநயன அழசந யடிழரவ இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 ஜ5979ஸ | இலங்கை செய்திகள் | செய்தி யவ றறற.றநடி-யசஉhiஎந.inநெசயஅ.உழஅwww.web-archive.inneram.com
ஊடக தகவல்கள்
வெள்ளிவிரல் - ஊடக தகவல்கள்
2012 ஜூலை 01 தினக்குரல்
வீச்சான கதைகளின் விளைநிலம்- வெள்ளிவிரல்.--
தம்பிலுவில் ஜெகா.
2012 ஜூன்.ஞானம். இதழ். 145
நூல் அறிமுகம். ~~வெள்ளிவிரல்.||-
குறிஞ்சிநாடன்.
2012. மே. 18 தினகரன்.
காதலையும் மனிதாபிமானத்தையும் துல்லியப்படுத்தும் வெள்ளிவிரல்.|-
ஏ.பீர்முகம்மது
2012. ஏப்ரல். செங்கதிர்.- இதழ் 52. ஏப்ரல்.
நோக்கல்;- வெள்ளிவிரல்- சிறுகதைத் தொகுதி-
இரண்டாம் விசுவாமித்திரன்.
Wednesday, July 15, 2015
உள்ளடக்கங்கள்

2011இல் அரச தேசிய சாஹித்திய விருதையும் கிழக்கு மாகாண சாஹித்திய விருதையும் பெற்றது.
முதற் பதிப்பு -ஒக்டோபர் 2011
வெளியீடு -
காலச்சுவடு பப்ளிகேஷன் (பி)லிட் 669 கே பி சாலை நாகர்கோவில் தமிழ்நாடு
பக்கங்கள் 186
பிரிண்ட்- பிரிண்ட் ஸ்பெசலிஸ்ட் - சென்னை
சமர்ப்பனம்
1992 இல் சாய்ந்தமருது பொதுச் சந்தையில் குண்டு வெடிப்பில் பலியான 31 அப்பாவி மனிதர்களுக்கு
முன்னுரை
அல்ஹாஜ் எம் ரீ எம் நிஸாம் -
மாகாண கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாணம் திருகோணமலை
விலை - இந்திய ரூபாய் 100
அட்டைப்படம் - ரஷ்மி
உள்ளடக்கம் --- 12 சிறுகதைகள்
தாய்.மொழி.
வதனமார்
வெள்ளிவிரல்
விட்டு விடுதலையாகி
வேக்காடு
கல்லடிப் பாலம்
மீள் தகவு
காலவட்டம்
தலைவர் வந்திருந்தார்
நல்லதொரு துரோகம்
சீனத்தும்மா
சாகும் தலம்
பின்னட்டை குறிப்பு
இந்தக் கதைகளின் களம் - ஈழம் தாய்லாந்து விண்வெளி காலம் நேற்று இன்று நாளையையும் கடந்த முடிவற்ற காலம் ...இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக் காகவும் போராடுகிறார்கள் அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன.. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது ..இந்த மானுடச் சிக்கலை முன் வைப்பவை இந்தக் கதைகள்
சு .ரா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற நட்டுமையின் ஆசிரியர் நவ்சாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்
அட்டைப்படம் - ரஷ்மி
உள்ளடக்கம் --- 12 சிறுகதைகள்
தாய்.மொழி.
வதனமார்
வெள்ளிவிரல்
விட்டு விடுதலையாகி
வேக்காடு
கல்லடிப் பாலம்
மீள் தகவு
காலவட்டம்
தலைவர் வந்திருந்தார்
நல்லதொரு துரோகம்
சீனத்தும்மா
சாகும் தலம்
பின்னட்டை குறிப்பு
இந்தக் கதைகளின் களம் - ஈழம் தாய்லாந்து விண்வெளி காலம் நேற்று இன்று நாளையையும் கடந்த முடிவற்ற காலம் ...இடமும் பொழுதும் வெவ்வேறானாலும் மனிதர்கள் தமது இருப்புக்காகவும் அடையாளத்துக் காகவும் போராடுகிறார்கள் அடையாளங்கள் சில சமயம் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்குகின்றன.. வாழ்வடையாளத்துக்காகப் பல சமயம் அபாயகரமாகப் போராட நேர்கிறது ..இந்த மானுடச் சிக்கலை முன் வைப்பவை இந்தக் கதைகள்
சு .ரா. நினைவு குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற நட்டுமையின் ஆசிரியர் நவ்சாத்தின் பன்னிரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இந்நூல்
Tuesday, July 14, 2015
இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012
இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012
திங்கள்இ 01 அக்டோபர் 2012 00:30 செய்தி - இலங்கை செய்திகள்
நு-ஆயுஐடு | PசுஐNவு | கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2012) வெயங்கொடஇ பத்தலகெதர சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வருடாந்த தேசிய சாகித்திய விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் சிங்களஇ தமிழ்இ ஆங்கில மொழிகளில் எழுந்த மிகச் சிறந்த நூல்களுக்கு தேசிய சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில்இ 2011ம் ஆண்டு சிறுகதைஇ நாவல்இ கவிதைஇ காவியம்இ மொழிபெயர்ப்புஇ ஆய்வு முதலான பல துறைகளிலும் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டுஇ அவற்றுக்கான விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.
இம்முறை தேசிய சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்
02. சிறந்த சிறுகதைத் தொகுதி -- “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்
03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷெரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (சிறுவர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவல்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (பல்துறை) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்
தேசிய சாகித்திய விருதுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களுள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:
01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்
இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
சுநயன அழசந யடிழரவ இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 ஜ5979ஸ | இலங்கை செய்திகள் | செய்தி யவ றறற.றநடி-யசஉhiஎந.inநெசயஅ.உழஅ
காலச்சுவடு பதிப்பக நூல்களுக்கு
இலங்கை அரசின் சாகித்திய விருது.-
இம்மூன்று நூல்களும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக கடந்த 2011 ஆம்’ஆண்டு வெளிவந்தவை. விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு காலச்சுவடு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
காலச்சுவடு. டிசம்பர் 2012. இதழ் 156- பக்கம் 79
Thursday, June 18, 2015
41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013
41வது இலக்கியச் சந்திப்பு –
யாழ்ப்பாணம் 2013
(குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு)
8.45- 10-30: இலக்கியம்
தலைமை : சோ. பத்மநாதன்
1. வெள்ளிவிரல்: சில கதையாடல்கள் - ரமீஸ் அப்துல்லா
2. அண்மைக்காலக் கவிதைகள் -சு. குணேஸ்வரன்
3. பெண்கள் சொல்லும் சேதிகள் - கால் நூற்றாண்டுக் கவிதைகளை முன்வைத்து -சித்ரலேகா மௌனகுரு
4. சிங்களப் புனைகதைகளில் தமிழ்க் கதாபாத்திரங்கள் - ஒரு சுருக்கமான ஆய்வு - லியனகே அமரகீர்த்தி
5. மலையகக் கவிதைச் செல்நெறியும் மலையகத் தேசியமும் - மல்லியப்புசந்தி திலகர்
6. எழுத்தியலின் அரசியலும் மொழிபெயர்ப்பாளரின் பணியும் - சிவமோகன் சுமதி
7. புகலிட இலக்கியம் - சில வரலாற்றுக் குறிப்புக்கள் - ஸ்ராலின்
Subscribe to:
Posts (Atom)