Thursday, July 30, 2015

ஏ.பீர் முகம்மது.

நௌஸாத்தின் சிறுகதைத் தொகுதிமீதான சிறப்புக் கண்ணோட்டம்.

Image result for thinakaran paper symbol

காதலையும் மனிதாபிமானத்தையும்       துல்லியப்படுத்தும் வெள்ளி விரல்   


                                                                                                          -----ஏ.பீர் முகம்மது.-----         

தமிழ்ச் சிறுகதையுலகின் பார்வையில் வித்தியாசமாகவும் வெற்றிகரமாகவும் தன்னை ஈடுபடுத்தி எழுத்தூழியம் செய்து வருபவர் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள். அவரின் பரிசு பெற்ற பன்னிரெண்டு சிறுகதைகளை ‘வெள்ளி விரல்;’ என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒருசேரத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளது.

சிறுகதைப்புனைவின் கூறுகளை நன்கு விளங்கிக் கொண்டநிலையிலும் மனித மனங்களை எக்காலத்திலும்  பிணைக்கின்றதாகவும் இக் கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஆற்றுநீர் போலும் ஆழத்தை  வெளிப்படுத்தும் அட்டைப் படமும் ஆரவாரமில்லாத பத்து வரியிலான பதிப்பக அறிமுகமும் சிறுகதைபற்றிய ஒரு சிறுஇகதை என்ற ஆசிரியரின் தன்னுரையும் தொகுதியை உடன் வாசிக்க வைத்துவிடுகின்றன

நமக்குப் பழக்கப்பட்டுப்போன சு10ழலோடு மட்டும் நின்று விடாமல் தாய்நாடு என்றும் தாய்லாந்து என்றும் ஏகாந்த வெற்றிடமென்றும் விசாலமான விண்வெளி என்றும் கதைக்குக் கதை வௌ;வேறு களம் நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்துகின்றது.

தாய்லாந்து நாட்டின் தலைநகரமாகிய பாங்கொங்கிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ‘கூவன்கோன்’ மாநிலத்திலுள்ள இரவுக் களியாட்ட விடுதியொன்றுக்குப் பறந்து வாருங்கள் என்று நம்மை அழைத்துச் சென்று  ‘தாய்.மொழி’ என்ற முதலாவது கதையை  தட்டில் வைத்துத்  தருகிறார் நூலாசிரியர்.

தமிழ்மொழிக்காக தாய்லாந்து நாட்டில் தனது தொழிலைப் பணயம் வைக்கும் இலங்தைத் தமிழனின் கதை. “என்ர அம்மோவ்இ என்ர கடவுளேஇ என்னக் காப்பாத்து” என்ற அழுகுரல் சத்தம் ஹோட்டல் அறையொன்றிலிருந்து வருவதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கதையின் நாயகன் குற்றஞ்சாட்டின்பேரில் தாக்குதலுக்குள்ளாகும் ஒருவனைக் கதவைத் திறந்து தப்பியோட விடுகிறான். தமிழ்மொழிக்காக இதனைச் செய்யாவிட்டால் நான் என்ன? என் தொழில் என்ன? என்று முகத்துக்கு நேரே நின்று  காட்டமாகக்  கேள்வி கேட்கும் கதை தாய்.மொழி.

‘சாகும் தலம்’ என்பது இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளின் பின்னர் அதாவது 3998 இல் நடைபெறுவதான அறிவியல் புனைகதை. ஐம்பதிலும் கூடிய வயதினரை உயிரழிப்புச்  செய்யும் அரசாங்கமொன்றின் செயற்திட்டத்தில் பணிக்கமர்த்தப்பட்ட இரண்டு ரோபோக்களின் கதை.உயிர் வழங்கப்பட்ட துஸ்யந்தன் எனும் ஆண் ரோபோவும் சகுந்தலை என்னும் பெண் ரோபோவும் காதலர்கள்.வயோதிபர்களைக் கொன்றொழிக்கும் அன்றைய தினம் சகுந்தலையின் பிறந்த நாள். பிறந்த நாள் பரிசாக வயோதிபர்களுக்கு உயிர்த்தானம் கொடுக்க விரும்புவதாகச் சொல்லி சகுந்தலையை முத்தமிட்ட பின்னர் ராக்கட்டை கடலுக்கு மேலால் செலுத்தி கீNழு விழுந்து துஸ்யந்தனும் சகுந்தலையும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.. வயோதிபர்களுக்கு உயிர்த்தானம் காதல் பரிசாகக் கிடைக்கின்றது.; நமக்கு துஸ்யந்தன் சகுந்தலை ரோபோ காதல் காவியம் பரிசாகக் கிடைக்கின்றது.

‘கல்லடிப்பாலம்’ என்ற கதையில் தவராஜா – றுவைதா காதல் காவியம் கைநழுவிப்போயிற்று. இந்தக் கதையிலாவது கிடைத்தது ரோபோ காதல் காவியம். மனித உயிரின் அடிப்படையே மனிதாபிமானமும் காதலும்தான் என்பதை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. அறிவியற் புனைகதை என்ற வகையில் கலைச் சொற்களின் பயன்பாடும் கதைசொல்லியின் வினைத்திறனும் கதையைக் கனதியாக்குகின்றது.

‘விட்டு விடுதலையாகி’ என்பது தற்கொலைக் குண்டுதாரி ஒருவன் பற்றிய கதை. வெடிப்பதற்கு ஒரு மணித்தியாலம் உள்ள நிலையில்  சிறுகதையொன்றை எழுத ஆரம்பித்து  எழுதி முடியமுன்னர் உரிய நேரம் வந்து விட்டதால் வெடித்துச் சிதறி நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது கதை.. குண்டு வெடிப்பின் பின்னரான தலைநகரின் யதார்த்தம் நறுக்குத் தெறித்தாற்போலும் வசனங்களால் படம் பிடிக்கப்படுகின்றது.

“இறைவன் தந்த உயிரைக் காவு கொள்ள எவருக்கும் உரிமையில்லை” என்று ‘ஸீனத்தும்மா’ கதையில் மனதாபிமானத் தத்துவத்தைச் சொன்ன கதாசிரியர் மற்றொரு கதையில் சிறுமியை வல்லுறவுக்கு முயற்சித்த பொலிஸ் அதிகாரியை அவன்கூடவே வந்த ஊர்க்காவல்படை வீரன் சுட்டுக் கொன்றபோது ‘நல்லதொரு துரோகம்’ என்று கதைக்குத் தலைப்பிட்டது ஏன்? கதையை வாசித்தபோது நியாயம் தெரிந்தது..

‘வெள்ளி விரல்’  ‘வதனமார்’ ஆகிய கதைகள் மானுடச்சிக்கல் உருவாக்கத்தின் பின்புலத்தை வெளிப்படையாகச் சொல்லும் கதைகள்.  சுகத்தைத் தொலைத்துவிட்டு பரிகாரியிடம் விடை தேடி நிற்கும் ‘வெள்ளி விரல்’ கதையைப்போலவே ‘வதனமார்’என்ற கதையும்  பொருளைத் தொலைத்துவிட்டு ஆனைச்சித்தனைத்தேடி சுடலைக்குப் போகும் கதை.’ வெள்ளி விரல்’ சலுகாக் கிழவியையும் ‘வதனமார்’ ஆனைச் சித்தனையும் செப்பமாச் செதுக்கியுள்ளார் ஆசிரியர்.

கதை சொல்லும் உத்தியினால் ‘வேக்காடு’ கதை  ஏனையவற்றிலிருந்து வேறுபடுகின்றது. நடுத்தர வயதுப் பெண் கதாபாத்திரம் தனது குடும்பத்தின் நிலையை தனக்கு முன்னாலுள்ள மற்றொருவரிடம் சொல்லுகின்றது. இக்கதாபாத்திரத்திரத்தின் பேச்சுத் தவிர வேறு பேச்சு எதுவுமில்லாத வகையில் கதை நகர்;த்தப்படுகின்றது. இவ்வாறாகக் கதை சொல்லும் உத்தி சற்றுக் கடினமானது.

கையாலாகாத்தனம் ‘மீள்தகவு’ என்ற பெயரில் சிறுகதையாகப் பிரசவமாகியுள்ளது. இனக்கலவரத்தில் கையிழந்துபோன அப்பாவி ஒருவர் தனக்குரிய உதவிப்பணத்தைப்  பெறமுனையும்போது இலஞ்சம் மொழிப்பிரச்சினை ஏச்சுப் பேச்சு அசமந்தம் என்று  அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அந்த அப்பாவிமீது நமது அனுதாபத்தைப் பீய்ச்சுகிறது. அரசு உத்தியோகத்தர்களின் கறுப்பு முகத்தை புதியதொரு சிறுகதைப் பாணியில் தோலுரிக்கிறது இந்த ‘மீள்தகவு’.

‘தலைவர் வந்திருந்தார்’ என்பது  முழுக்க முழுக்க அரசியலைச் சொல்லுகின்றது.. ‘காலவட்டம்’ என்பது சரணடையும் எதிரியைக் காப்பாற்றுதல் தார்மீகப் பொறுப்பு என்பதைச் சொல்லி   தமிழ் அரசியலை ஞாபகமூட்டுகின்றது.

 “ கதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திகதி கதை உத்தி கருதி 2009 என செவ்விதாக்கம் செய்யப்பட்தான ஆசிரியரின் பிற்குறிப்பு  கதைக்குச் சேலைன் பாய்ச்சியதால் ‘காலவட்டம்’ சத்துள்ள கதையாகச் சமைகிறது.

கதைகளினூடே உலா வரும் கதாபாத்திரங்கள்இ இயல்பாகவே வந்து விழும் சொற்கள்இ வசனச் செறிவுஇ  படைப்பு மொழிப் பிரயோகம்இ வௌ;வேறு வகை உத்திகளால் நாம் அடையும் பிரமிப்புஇ கதையின் தளத்திலிருந்து சமுகத்தைப் பிணைக்கும் நுட்பம் எனவாகும் பல வழிகளினால்  மேற்கிளம்பி ஐந்து நட்சத்திர அந்தஸ்து நோக்கிப் பயணம் செய்கிறதோ இந்த ‘வெள்ளி விரல்’.

நன்றி  தினகரன்  18.05.2012        
           
     

No comments:

Post a Comment