Tuesday, July 14, 2015

இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012

இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012
திங்கள்இ 01 அக்டோபர் 2012 00:30 செய்தி - இலங்கை செய்திகள்
நு-ஆயுஐடு | PசுஐNவு |



கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.2012) வெயங்கொடஇ பத்தலகெதர சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வருடாந்த தேசிய சாகித்திய விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
ஆண்டுதோறும் சிங்களஇ தமிழ்இ ஆங்கில மொழிகளில் எழுந்த மிகச் சிறந்த நூல்களுக்கு தேசிய சாகித்திய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில்இ 2011ம் ஆண்டு சிறுகதைஇ நாவல்இ கவிதைஇ காவியம்இ மொழிபெயர்ப்புஇ ஆய்வு முதலான பல துறைகளிலும் வெளிவந்த மிகச் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டுஇ அவற்றுக்கான விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை தேசிய சாகித்திய விருது பெற்ற தமிழ் நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:


01. சிறந்த நாவல் - “சொடுதா” - எஸ்.ஏ.உதயன்

02. சிறந்த சிறுகதைத் தொகுதி    --  “வெள்ளி விரல்” - ஆர். எம்.நௌஷாத்

03. காவியம் - “தோட்டுப்பாய் மூத்தம்மா” - பாலமுனை பாரூக்
04. கவிதை - “நிலம் பிரிந்தவனின் கவிதை” - சுஜந்தன்
05. சிறந்த ஆய்வு - “இந்துக் கணித வானியல் மரபு” - ச.முகுந்தன்
06. சிறந்த நாடக நூல் - “கருவறையில் இருந்து” - கந்தையா ஸ்ரீகந்தவேள்
07. சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் - “அம்மாவின் ரகசியம்” - எம்.ரிஷான் ஷெரீப்
08. சிறந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை - “ஒரு சுறங்கைப் பேரீச்சம்பழங்கள்” - அஷ்ரஃப் சிஹாப்தீன்
09. சிறந்த மொழிபெயர்ப்பு (சிறுவர் இலக்கியம்) - “காட்டுப்புற வீரர்கள்” - திக்குவல்லைக் கமால்
10. சிறந்த மொழிபெயர்ப்பு (பல்துறை) - “பர்மிய பிக்கு சொன்ன கதைகள்” - சோ.பத்மநாதன்


தேசிய சாகித்திய விருதுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல்களுள் இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஏனைய நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் பற்றிய விபரம் வருமாறு:


01. விபுலானந்தர் காவியம் - சுப்ரமணியம் சிவலிங்கம்
02. வாத்தியார் மாப்பிள்ளை - ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
03. அலைக்குமிழ் - அகளங்கன்
04. காடும் கழனியும் - ஆ.மு.பி. வேலழகன்
05. அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - தாட்சாயணி
06. நேற்றுப்போல் இருக்கிறது - கே.எஸ். பாலச்சந்திரன்
07. மீண்டு வந்த நாட்கள் - வதிரி. சி. ரவீந்திரன்
08. ஓவியம் செதுக்குகிற பாடல் - ஸ்ரீபிரசாந்தன்
09. குறுங்கூத்துக்கள் - கலையார்வன்
10. முல்லைத் தீவுத் தாத்தா - திக்குவல்லை கமால்


இலங்கையில் தேசிய சாகித்திய விருதுபெற்ற தமிழ்ப் படைப்பாளிகள் அனைவருக்கும் இந்நேரம்.காம் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

சுநயன அழசந யடிழரவ இலங்கைத் தேசிய சாகித்திய விருது - 2012 ஜ5979ஸ | இலங்கை செய்திகள் | செய்தி யவ றறற.றநடி-யசஉhiஎந.inநெசயஅ.உழஅ

















                                                                        
காலச்சுவடு பதிப்பக நூல்களுக்கு
இலங்கை அரசின் சாகித்திய விருது.-

2012ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது வழங்கும் விழா கடந்த அக்டோபரில் கொழும்பில் நடைபெற்றது. இதில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது எம் ரிசான் சரிப் மொழிபெயர்த்த சுனந்த தேசப்பிரியாவின் அம்மாவின் ரகசியம் நாவலுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது கஜந்தனின் நிலம் பிரிந்தவனின் கவிதை தொகுப்புக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது ஆர்.எம். நௌஸாத்தின் வெள்ளிவிரலுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இம்மூன்று நூல்களும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக கடந்த 2011 ஆம்’ஆண்டு வெளிவந்தவை. விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு காலச்சுவடு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

காலச்சுவடு. டிசம்பர் 2012. இதழ் 156- பக்கம் 79

No comments:

Post a Comment