வெள்ளிவிரலின் கதைப்பின்னல்
பனுவல் புதிது-
முல்லை முஸ்ரிபா- (மர்யம்)
விடிவெள்ளி- 24.01.2013
கதைவெளி புதியபரிணாமங்களுடன் விரிந்திருக்கிறது. மரபு சார்ந்திருந்த கதைப்பின்னல் முறைமையானது புறக்கணிக்கப்பட்ட அல்லது புதுமை அவாவுகையில் துலங்குகின்றது. வெள்ளி வெளியாக உருவங்கொண்டுவிட்டது.
உருவங்களைச் சிதைத்துக் கொண்டு புதிய உருவங்களைத் தேடல் என்பத நவீன இலக்கியத்தின் இயக்கமாகவே உள்ளது. இத்தகைய இயக்கம் நமது இலக்கிய வெளியைக் கனதியாக்குவது மட்டுமன்றி சிருஷ்டியின் உன்னதத்தையும் உணர்த்தி நிற்கின்றது.. இந்தப் பண்பு இன்று சிறுகதைகளிலும் பொருந்தி நிற்கின்றது. நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றையுடைய சிறுகதைக்கென்று இருந்துவந்த கட்டுமானங்கள் சட்டகங்கள் யாவும் இன்று தளர்ந்தும் வளர்ந்தும் வேறு ஒரு சாயலில் படைப்புவெளியை அகலித்துவிட்டது.
கதைகள் அதன் உட்பொருளிலும் அப்பொருளை வெளிப்படுத்தும் மொழி லாவகத்திலும் அம்மொழியால் கட்டமைக்கப்படும் உருவத்திலுமென புதுமை கோலோச்சத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு பேனாக் கோலோச்சும் நமது கதை சொல்லிகளுள் குறிப்பிடத்தக்கவராக அடையாளம் காட்டுபவர் தீரன் ஆர்.எம். நௌஸாத்.
நௌஸாத் தற்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்களில் புதிய வீச்சம் நிறைந்தவர். நட்டுமை எழுத்து இதற்கு சாட்சி சொல்லும். உள்ளடக்கச் செழுமையும் உருவக்கட்டமைப்பும் கொண்டிருந்ததுää இவரது நட்டுமை நாவல் எழுத்து.
நட்டுமைக்குப் பின்னால் வந்திருக்கும் வெள்ளிவிரல் பன்னிரெண்டு கதைகளைப் பின்னியிருக்கிறது. இந்தப் பின்னல்கள் ஏதாவதொரு போட்டிக்காகப் பின்னப்பட்டவை அல்லது பின்னப்பட்டு போட்டிக்கு அனுப்பப்பட்டவை.. இவற்றுள் ~தலைவர் வந்திருந்தார்..| தவிர ஏனையவை போட்டிகளில் பரிசு வென்றவை..
பரிசுவென்ற கதைகளின் பரிசுத் தொகுப்பாகவே வெள்ளிவிரல் காலச்சுவடு பதிப்பகத்தில் 2011ல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 2000ல் ~வல்லமை தாராயோ…| என்ற கதைத் தொகுப்பை நமது வாசிப்புத் தளத்துக்கு தந்திருக்கிற நௌஸாத் ~வெள்ளிவிரலி|னூடாக மேலும் பிரகாசிப்பதைக் காணமுடிகிறது.
~யுத்தமே என்னை எழுதத் தூண்டிற்று….| என்று கூறும் நௌஸாத் யுத்தவெளியின் ஒட்டுமொத்த அவலங்களையும் உள்வாங்கி உணர்வில் பொங்கி அல்லது மனம் பேதலித்த நிலையில் பேனாவிடம் தஞ்சமடைந்திருக்கின்றார். இந்தத் தஞ்சமே இவரது எழுத்தைக் கூர்மைப்படுத்தியுமிருக்கிறது.
படைப்பாளியின் நோக்குநிலைää படைப்புமொழிääகதைக்கரு ääஇயங்குதளம்ää தனித்துவ நடைää புதுமைஉத்திää முடிவு என்று அவர் சொல்வது போல ஒவ்வொன்றின் மீதும் உள் ஒன்றிநின்று கதைவெளியைக் கட்டமைக்கின்றார் நௌஸாத்.
படைப்பாளியின் மனஅடுப்பின் கொதிப்பிலிருந்து நுரைபொங்கி வருகின்ற பால்தான் எழுத்து.. அந்தப் பாலின் இன்சுவையும் அது பொங்கும் லாவகமும் போல கதை எழுத்தும் அமைதல் வேண்டும். அத்தகைய கதை பொங்கும் எழுத்துக்கள் நௌஸாத்துடையவை.
~தாய்மொழி| முதலாக ~சாகும்தலம|; ஈறாக பன்னிரு கதைகள் காட்டும் விந்தைகள்.. விந்தைகளுக்குள்ளிருந்து வியாபிக்கும் உணர்வுகள் உணர்வுகளுடாக அறியமுடிகிற சமுக மாந்தர் இயல்புகள்.. நடத்தைக் கோலங்கள்.. கோலங்களுடாக வெளிப்படுத்தும் சமுகப் பார்வை என நௌஸாத் கதை பின்னணியில் புதியநுட்பங்களை இழையோடச் செய்கிறார். சம்பவங்களும் சம்பவங்களின் அடியாகத் தோன்றும் உணர்வுகளுமென கதை சொல்லி இயங்கும் தளம் வியப்புக்குரியது.
நௌஸாத்தின் வெள்ளிவிரல் கதைகளை இரண்டு நிலையில் நோக்கலாம்.
01. கதைசொல் முறையில் ஒரு நவீனப் பாய்ச்சல்
02. கதைபொதிந்துள்ள உள்ளடக்க வீச்சம்.
நல்லகதையின் வெற்றியென்பது இவ்விரண்டு தளமும் சந்திக்கும் புள்ளியில்தான் தெரியும். நௌஸாத்தின் பெரும்பாலான கதைகள் இவ்விரண்டு தளங்களினதும் சங்கமிப்புகளாகவே வெளிப்படுகின்றன.
விட்டுவிடுதலையாகி.. மீள்தகவு.. காலவட்டம்.. ஸீனத்தும்மா.. சாகும்தலம்..முதலிய கதைகள் வெளிப்பாட்டுத் தளத்தில் நவீனத்துவம் மிக்கவை..
வெள்ளிவிரல்.. விட்டுவிடுதலையாகி.. மீள்தகவு.. காலவட்டம்.. தலைவர் வந்திருந்தார்.. ஸீனத்தும்மா.. முதலியன் பொருள்வீச்சம் நிறைந்தவை.
தாய்மொழி..சாகும்தலம்.. வதனமார் போன்றன புதிய அனுபவத்தைப் பாய்ச்சுபவை..
தலைவர் வந்திருந்தார்.. ஸீனத்தும்மா.. வெள்ளிவிரல்.. ஆகியன சமுக அடக்குமுறையின் குரலாக வெளிப்படுபவை.. விட்டுவிடுதலையாகி.. நல்லதொரு துரோகம்.. முதலியன போராட்ட காலத்தை மையப்படுத்தியவை.
இப்படியாக நௌஸாத்தின் கதைத் தேர்வும் கதை சொல்லும் நேர்த்தியும் அழகிய பின்னலாக வாசகர் மனதில் இழையோடி நிற்கின்றன..
நௌஸாத்தின் கதைகள் இன்னொரு பரிமானத்தின் அவாவுகை எனலாம்.0
-மர்யம்- விடிவெள்ளி-
No comments:
Post a Comment