Friday, October 27, 2023

தலைவர் வந்திருந்தார்..(வெள்ளிவிரல்-சிறுகதை-9)

  தலைவர் வந்திருந்தார்

       என்ன ஒரு அழகான மரம்.! கம்பீரமாக வானளாவும் பெருவிருட்சம். அடியில் குளுகுளு நிழல். தென்கிழக்கில் வேர்விட்டு நாடெங்கும் விழுதுகள் விட்டு அதற்காக  செந்நீரும் கண்ணீரும் விட்டு வளர்த்த தரு அது. பத்து இலட்சம் பறவைகள் தங்கலாம். இதமான காற்று. மேலே இலைகளின் ;தக்பீர்’ ஒலி சலசல சங்கீதமாய்... அடிமர வேரில் படுத்திருந்தேன்.  தனி ஓராளாய் ஏகாந்த நினைவுகளிலிருந்தேன். இவ்விருட்சத்தை நட்டு வைத்தவன் எதிர்காலத்தையும் ஊகித்து உணரக் கூடியää மாபெரிய தலைவனாகத்தானிருக்கும்  என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  நித்திரை பாதி..  விழிப்பு பாதி.. திடீரென ஒரு நறுமணம் பரவியது.  உடன் ஒரு குரல் உரத்து ஒலித்தது.

 

போராளியே புறப்படு..!

 

கம்பீரமான குரல்.. யாரது.இந்த ஆண்மையும்ää உறுதியும் மிக்க வசீகரக் குரல்..  யாருக்குரியது..அ..வரா..த..தலைவரா..?  ச்சே..இருக்காதே.. அவரைத்தான் அரந்தலாவையில் வைத்து...?  அப்படியானால்..?

 

போராளியே..!  விழித்தெழு..!! என்னைப் பார்..!!!

 

பார்த்தேன்.. திடுக்கிட்டேன்.. அதே புன்னகை. அதேசமயம்ää ஆழமாக ஊடுருவும் அந்த விழிகளின் தீட்சண்யம்.. திடீரென துணுக்குற்றெழுந்தேன்.  த.. தலைவரேதான்..

 

த.. தலைவரா.. நீங்களா ஸேர்..நீங்க ஹெலியில..?”   நாக்குழறிப் பயந்து போனேன்.

 

தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதை நான் உனக்குச் சொல்லித் தரவில்லையா..?”  சந்தேகமேயி;ல்லை தலைவரேதான்..

 

நீங்க சொல்லித் தந்தது ப்ப ஒண்டும் நடக்கல்லையே ஸேர்..   என்றேன் ஒருவாறு தைரியத்தை வரவழைத்தவனாக.

 

நடத்தாமல் விட்டதற்கு நான் பொறுப்பல்ல.. சரி.. நமது அருமைப் போராளிகள் அனைவரும் நலமா..?”  தலைவரின் கேள்வி புரியவில்லை.. விடுதலைப் போராளிகளையா கேட்கிறார்..?

 

என்னது..ஆரு..போராளிகளா..ஆரு ஸேர் அது..?”   திடுக்கிட்டுப் போய்க் கேட்டேன்..

 

ப்ளடி பூல்..!  ஆயிரமாயிரம் விளக்குடன் ஆதவன் போல் எழுந்து அணிவகுத்த அந்தப் போராளிகள்..ஒரு மரத்தைக் கொண்டுää கர்ச்சிக்கும் சிங்கத்தையும்ää சீறும் புலியையும்ää மேலும் பல இனவாத  வல்லூறுகளையும் விரட்டிக் காட்டிய உம்மத்துகள்..கட்சிக்காக மார்பு திறந்து காட்டித் துப்பாக்கிக் குண்டுகள் வாங்கிய  என் கண்ணியத்துக்குரிய வீரப் பேராளிகள்..ஆயிரமாயிரம்  விழுதுகளுடன் நமது  மரத்தை கண்ணீரால் காத்து செந்நீர் ஊற்றி வளர்த்த அந்தப் போராளிகளைக் கேட்கிறேன்..   தலைவரின் விழிகளில் நீர்.

 

நீங்க சொன்ன ஆட்கள எனக்குத் தெரியாது ஸேர்.. முந்தி அப்பிடிக் கொஞ்சப் பேரு இருந்தாப் போல ஞாபகம்.. ஆனா ப்ப இருக்கிற அடிமட்டப் பேராளிகள் ஹர்த்தாலுக்கு ரோட்டுல டயர் பத்த வைக்கிறாங்க.. வாகனங்கள்ள கண்ணாடிய நொறுக்கிறாங்க..  நடுமட்டப் போராளிகள் சுருட்டின வரைக்கும் லாபமெண்டு சுருண்டு படுக்கிறாங்க..  உயர்பீடப் பேராளிகள் சங்கீதக் கதிரையைச் சுத்திச்சுத்தி போராட்டம் நடத்துறாங்க..எல்லாப் போராளிகளும் மொத்தத்துல  கடுமையாப் போராடிக் கொண்டுதான்இருக்கிறாங்க ஸேர்.

 

உண்மைகளை தலைவரிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல..என் வார்;த்தைகளில் அதிர்ந்து போன தலைவரின் கண்களில் தீப்பொறி பறந்தது.

 

ப்ளடி ஷிட்.! என்ன சொல்கிறாய் நீ.?”    இடிந்து போன தலைவர் அப்படியே மரத்தினடியில் உட்கார்ந்து விட்டார். சற்றே கண்களை மூடினார்..

 

உள்ளதச்சொன்னன்..  வேறென்ன சேர் கேக்கனும்;..?  எனக்கும்  நித்திர வருது..” என்றேன் கொட்டாவி விட்டபடி.. துணுக்குற்ற தலைவர் விரைவாகத் துள்ளி எழுந்தார்..  தன் கூர்மையான விழிகளால் என்னைத் துளைத்து விடுவதைப் போன்று பார்த்தார்..  முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது..

 

எனது வருகைக்காக இரவிரவாக கண்விழித்துக் காத்திருந்த போராளியா நீ....?  ச்சீ..! நமது கட்சியாவது கட்டுக் கோப்பாக இருக்கிறதல்லவா..?”    என்ன ஒரு நப்பாசைதான் தலைவருக்கு..

 

எந்தக் கட்சியக் கேக்கறீங்க ஸேர்..?”   புரியாமல் கேட்டேன்..   தலைவர் மறுபடி தீப்பொறிப் பார்வையுடன் என்னை எரித்தார்.

 

அடி முட்டாள்..!  நமக்கென்று இருப்பது ஒரு கட்சிதானே.. சிறீலங்கா முஸ்லிம் கோங்க்ரஸ்..?”

 

என்ன ஸேர்..  முஸ்லிம்  காங்கிரஸா.?  அது அந்தக் காலம்..  நீங்க இருந்து ஆண்ட காலம்.

 

அப்படியானால் நமது கட்சி..அதையும் கலைத்து விட்டீர்களா..?”  தலைவர் தன் இதயத்தைப் பொத்தியபடியே கேட்டார்.. எனது  பதிலை எதிர்பார்த்து தயார் நிலையானார்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. பாவம்..!  வேதனைப்படுவார் என்று சற்று மெல்லிய குரலில் முணுமுணுத்தேன்..

 

கலைத்து விடல்ல சேர்..!  நாங்களாகவே கலைஞ்சி விட்டோம்.

 

என்ன சொல்கிறாய்..?”   தலைவர் விசயம் புரியாதவராக நிமிர்ந்தார். குழப்பத்துடன் பார்த்தார்.

 

இப்ப நவீன காலம் ஸேர்.. பத்து லெச்சம் முஸிலிம்களுக்கு ஒரு கட்சி காணுமா ஸேர்..?  அதான் ப்ப நாங்களே பிரிச்சிட்டம்..  ப்ப போராளிகள்  எண்டு ஒரு ஆளும் ல்ல  ஸேர்.... எல்லோரும் தலைவர்தான்.. ;எல்லோரும் இந்நாட்டு மன்னர்தாம்..

 

என்ன..அப்படியானால்  நமது  பலம் மிக்க முஸ்லிம் கோங்ரஸ்..?”

 

நம்மட பலம் மிக்க முஸ்லிம் காங்கிரஸா..?  அது பழைய காலம்.. இப்பல்லாம் பணபலமிக்க தனித்தனி காங்கிரஸ்தான்.. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.. வடக்கு கிழக்கு முஸ்லிம் காங்கிரஸ்.. தேசிய முஸ்லிம் காங்கிரஸ்.. அஸ்ரப் காங்கிரஸ்.. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்.. சிங்கள முஸ்லிம் காங்கிரஸ்.. தமிழ்முஸ்லிம் காங்கிரஸ்.. உலமா காங்கிரஸ்.. கிழவர்கள் முஸ்லிம் காங்கிரஸ்.. ஐதேக சார்புக் காங்கிரஸ்..  பீஏ சார்புக் காங்கிரஸ்.. தூய காங்கிரஸ்.. முஸ்லிம் கூட்டமைப்பு..  முஸிலிம் தேசியவாதிகள் இயக்கம்.. முஸ்லிம் தேசக் கட்சிää தேசிய ஐக்கிய முன்னணி.. ஐக்கிய தேசிய முன்னணி.. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி.. இதெல்லாம் போதாதென்றுää  உம்மாää சும்மாää துஆää நுஆää குவாää அவா....  என்னுடைய கட்சிப்பட்டியலைக் கேட்ட தலைவர் துள்ளிக் குதித்தெழுந்துää

 

ஊ..ஆ..  என வீரிட்டலறினார்.

 

என்ன ஸேர்.. கடியன் கிடியன் கடிச்சிட்டா..?  இப்ப இந்த மரத்துல சீவராசிகள்  கூடிட்டுகள் ஸேர்..

 

பட்ட மரத்தின் பக்கமாக ஊர்ந்து கொண்டிருந்தää விஷ நாகங்களையும்ää  வேரடி மண்ணில் துளைத்தெழும் எறும்புகளையும்ää  வேரில் அரிக்கும்ää புழுக்களையும்ää பட்டைகளில் வளரும் கறையான் புற்றினையும்ää கிளைக்குக் கிளை தாவும் குரங்குகளையும்ää உச்சாணிக் கொம்பிலிருக்கும் வல்லூறுகளையும்ää சுற்றிச் சாற்றினைப் பிழிந்து கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளையும் சுட்டிக் காட்டினேன்..

 

அதில்ல நீ  இப்போது  சொன்ன பெயர்களெல்லாம்என்ன..?”

 

கட்சிகள் ஸேர்.. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்..!  என்னப்பா இந்த ஆள்..?   தலைவராக எப்படித்தான் இருந்தாரோ.. இது கூடத் தெரியாமல்.. என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே  சொன்னேன். ஆயினும் விடாமல் பிடிவாதமாய்க் கேட்டார்.

 

அப்படியானால் கட்டுக்கோப்பான நமது ஒரே கட்சி.. எங்கே..?”   தலைவரைப் பார்க்கவே பரிதாபமாகவிருந்தது.

 

கட்டிக் கோப்புக்குள் பத்திரமாய் வெச்சிருக்கம் ஸேர்..  இந்த  மனுசன்  விடமாட்டார் போலிருக்கிறதே..

 

அட.. மட்டயா.. மடயா..!  கட்சியையே சிதறடித்து விட்டீர்களாடா..?”    தள்ளாடிப் போன தலைவரைத் தாங்கிப் பிடிக்க முயன்ற போதுää அருவெறுப்புடன் என்னை விட்டும் விலகிச் சுதாகரித்த தலைவர்ää   மறுபடியும்ää

 

இதனைச் சிதறடித்தவர்கள் யார்..சொல்.!    ஆத்திரத்தால்  கத்தினார்.

 

ஐயோ.. ரொம்பச் சூடாகாதீங்க ஸேர்..!  அதுகளச் சொல்லப் போனா பொழுது விடியும்..  

 

அப்புறம் விடிகாலையில்  நான் தலைவருடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுää நமது பெருமதிப்புக்குரிய ஊடகவியலாளர்கள்  யாரும்  போய் பத்திரிகைகளில்ää எனது பெயரையும் படத்தையும்ää பின்னணியில் தலைவரின் கபன்துணிப் படத்தையும் போட்டுää ;‘லங்கா முஸ்லிம் தலைவர்  ஆவிக் காங்கிரஸ்’ ஆரம்பம்!   என்று செய்திபரப்பி விட்டால்.?   ஆகவேää இந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்.. நெடுநேரம் என் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்து போன தலைவர்ää சற்று இறங்கி வந்துää

 

தம்பி..! வாப்பா..!  இக்கட்சிகளை  ஆரம்பித்தவர்களையாவது சொல்லேன்.. ப்ளீஸ்..?”   என்று என்னைத் தந்திரமாக மடக்கப் பார்த்தார்.. நானா ஏமாறுவேன்..?   அந்தப் பெரிய  பிரேம மன்னரையும்ää சந்திரியம்மையையும் மடக்கிய மாதிரி நினைத்து விட்டாஎன்ன..?  பொதுவாகச் சொன்னேன்..

 

கட்சி ஆரம்பிக்கிற என்ன பெரிய சீன வித்தையா ஸேர்.. நீங்க ஆரம்பிச்சாப் போலää ரோட்டுரோட்டா மழைக்க வெயிலுக்க அலைஞ்சி திரிஞ்சிää துவக்கு வெடிக்குத் தப்பிää காசி இல்லாம.. வாகனம் இல்லாம குடும்பத்தை இழந்துää குடியிருந்த வீட்ட இழந்து.. சட்டநுணுக்கம் பார்த்துää  தற்றுணிவை வளர்த்துää மலைகளுடன் மோதி.. மலர்மாலைகள் வாங்கி..  அதெல்லாம் உங்கட காலம் ஸேர்!   இப்ப றோட்டளக்கிற பொடியனுகள் விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கிறத்துக்குப் பதிலா நேரடியா கட்சியே  ஆரம்பிக்கிறாங்க.. ;சிம்பிள்’..வேல.. தவிரவும்ää விளையாட்டுக்கழகமும் கட்சியும் ரெண்டும் ஒண்டுதானே ஸேர்.?  எல்லாருமேää கட்சித் தலைவராகனும்  ண்டால்ää என்ன செய்ற..?”

 

என்ன விநோதம் இது..அப்படியானால்ää ஒட்டு மொத்த முஸ்லிம் வாக்குகளையும் ஒரே சின்னத்தின் கீழ் பெற்று ஆட்சியைத் தீர்மானிக்கிற  தனிப்பெரும் முஸ்லிம் காங்கிரஸ் எது.. யார்..?”    சரிதான்..!    தலைவர் விடவே மாட்டார்.  இனி நாமும்  சற்றுச் சூடாகப் பதில் சொல்லத்தான் வேண்டும்.

 

ஐயொ..!   கதய நிப்பாட்டுங்க ஸேர்..  ஆட்சியைத் தீர்மானிக்கிறதா.ப்ப அப்பிடி ல்லை ஸேர்.. ஆட்சியில இருக்கிறவருதான்   உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் ஆருண்டு தீர்மானிக்கிற.. விளங்குதா ஸேர்.. இதெல்லாம் அரசியல்ல நீங்களே படிக்காத பாடங்கள்.. விளங்குதா ஸேர்..?”

 

என்னவோ உளறுகிறாய்.. ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஏதோ பிழையாகி விட்டது..   என்ற தலைவர் ஒன்றும் புரியாமல்ää சற்று நேரம் மௌனமாக இருந்தார்.. முகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் தெரிந்தன.. இதற்கெல்லாம் பதில் சொல்லி மாளாது.. நான் தூங்;குவதற்கு ஆயத்தப்படுத்தினேன். மரத்தினடியில்ää ஒரு ஒதுக்கிடம் தேடினேன்.  எங்கே கால் வைக்க.. எங்கே தலை வைக்க..?  என் பிரச்சினை புரியாத தலைவர்ää சற்றே கனைத்தார். என் கவனத்தை  ஈர்த்தார்.. கெஞ்சலாக என்னைப் பார்த்தார். ஏதோ கேள்வியா மறுபடியும்..சுருதி குறைந்த குரலில்ää மெதுவாகக் கேட்டார்..

 

சரி..சரி.. நமக்கு இப்போது எத்தனை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.. அதையாவது குழப்பாமல் சொல்லேன்..

 

இந்த ஆள் விட மாட்டார். ஆனால்ää கேள்வியே பிழையாயிற்றே.. எதற்கும் இதற்காவது சரியாகப் பதில் சொல்லாவிட்டால்ää பாவம் மனிதர் இடிந்து போய் விடுவார்.. எனவேää நான் விரல்களை மடித்து  எண்ண ஆரம்பித்தேன். இதைக் கண்ட தலைவர் மறுபடியும்ää கோபமுற்று

 

முட்டாளே.. என்ன இது.. இது கூடத் தெரியாதா.. ?”   என்று பாய்ந்தார்.

 

என்ன ஸேர்.. எப்படி கரெக்டாச்  சொல்ற..?  நான் சாதாரண வாக்காளன். நீங்க பெரிய தலைவரு. லோயரு.. சரி..  ஏலுமென்டால்ää  நீங்களே எண்ணிப் பாருங்களேன்..  காங்கிரஸ{க்கு என்று மொத்தம் ஏழு பேரு.. அதுல ஐதேக சின்னத்துல காங்கிரஸ் கட்சிக்காரர் மூணு பேர். இதக் கூட்டுங்க.. பத்து.  காங்கிரஸ் சின்னத்துல ஐதேக ரெண்டு பேர் இருக்கிறாங்க... அதக் கழிங்க..   நம்மட உறுப்பினரா இருந்து பொதுமுன்னணிக்குப் போனது ரெண்டு.. கழிங்க.. ஐதேக தேசியப்பட்டியல்ல இருந்து நம்மட உறுப்பினரா வந்த ஒண்டு.. கூட்டுங்க.. நம்மட ஒரு ஆளை அவங்கட லிஸ்ட்டுல போட்டது..  அதயும் கூட்டுங்க.. காங்கிரஸில வெண்டும் வழக்கில தோத்து காங்கிரஸாக இல்லாதது ஒரு ஆள்.. கழிங்க..  வழக்கில வெண்டு காங்கிரஸ விட்டு மாற்றுக்குழுவில மூண்டு.. கழிங்க.. ல்ல .. கூட்டுங்க..ச்சே..கழிங்க..

 

ச்சே மடையா.. முட்டாளே. என்ன இதெல்லாம்..ää?”   தலைவர் ஆவேசமாக எழுந்தார். தனது புறங்கையால் எனக்கு ஓங்கி அறைந்தார். எனது கைகளைப் பிடித்துää விரல்களை முறித்துவிடுவதைப் போல நெரித்தார்.

 

ச்சீ.. முட்டாளே.! என்ன கணக்கு இது..இதெல்லாம் எப்படிச் சாத்தியம்..நமக்கென்றொரு கட்சி யாப்பு இருக்கிறதல்லவா..?”  

 

தன்னுடைய ஆற்றல்மிக்க மூளையை உருக்கி வார்த்த வார்த்தைகளைக் கேட்கிறார். ஓ..யாப்பு..! கட்சி யாப்பு.. அதையா கேட்கிறார்..அதன் கதையைச் சொல்லப் போனால் என்ன செய்வாரோ..?  சரி.. யாப்பையா கேட்டார்..? 

 

யாப்பா..எந்த யாப்பக் கேட்கறீங்க..ஸேர்.பழைய பாப்பா..புது யாப்பா..மகிந்த யாப்பா திருத்தின யாப்பா.?   உயர் பீடத்துல திருத்தின யாப்பா..?  இல்ல உயர் மாடியில வெச்சு தத்தமக்கு வாய்ப்பா திருத்தின யாப்பா..?  ல்லää ‘லோயர்  விஜித யாப்பா திருத்தித் தந்த யாப்பா..?”  எனது கேள்விகளால் வாயடைத்துப் போன தலைவர் மறுபடியும் மெனமானார். இனியும் ஏதாவது கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளாமலிருக்க முயல்கிறாரோ..  பாவமாக இருந்தது.. எப்பேர்ப்பட்ட இரும்பு மனிதர்.. கூனிக் குறுகிப் போய் உட்கார்ந்திருந்தார்.. என்னவோ முணுமுணுத்தார்..

 

வாட் நொன்ஸன்ஸ்..!  எக்கேடாவது கெட்டுப் போங்கள்..   என்று சொன்னது போலிருந்தது.. நானும் கொஞ்ச நேரம் சாயலாம் என நினைத்து உட்கார்ந்தேன். தலைவர் உடனே எழுந்து விட்டார். இறுதித் தீர்மானத்துக்கு வந்தது போல முகம் பாவனை காட்டியது. என்னைப் புன்னகையுடன் பார்த்தார்.. அப்பாடா.!  மெதுவாக என்னருகே வந்தார். அன்போடு என்னை அணைத்துக் கொண்டார்.. என் காதருகே தனது சிவந்த உதடுகளை வைத்தார்.

 

என்னுடைய தங்கக் கிளியே..!  இறுதியாக இதைமட்டுமாவது வெட்டொன்றாய் துண்டு ரெண்டாய்ச் சொல்வாயா ராசா..?  ;ப்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு யார் தேசியத்தலைவர்..நேராகப் பதில்  சொல்.. நான் போய் விடுகிறேன்..

 

என்ன கேள்வி இது..தேசியத் தலைவரா..இதற்கு நேரான பதிலா..என்  கனவுக்கண்ணெதிரே கொழும்பு உயர்நீதிமன்றக் கட்டிடம் தெரிந்து மறைந்தது. என்ன சொல்ல.. எப்படிச் சொல்ல..ஏதோ சொல்லத்தானே வேண்டும்..?   

 

அதூ..வந்தூஊ..   நிச்சயமா எப்பிடி ஸேர் சொல்ற..தேசத் தலைவர்கள்தான்  முஸ்லிம் காங்கிரஸ{க்கும் தேசியத் தலைவர்களாக இருந்தாங்க.. கொஞ்ச நாள் சந்திரிக்காவும்.. பிறகு  ரணிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரா இருந்தாங்க..  இப்ப வழக்குப் போட்டு இருக்கு.. ;கோட்தான் அதத் தீர்மானிக்கும்.. எந்த நேரத்திலும் யாரும் தலைவராகி விடும் அபாயம் இருக்குது  ஸேர்.. நொட்சுவர்..

 

என்னது தலைமைத்துவத்த்pற்கே வழக்கா.?”   மறுபடியும் ஆவேசப்பட ஆரம்பித்தார் தலைவர்

 

வழக்கே தலைமைத்துவத்திற்குத்தான் ஸேர்.   என்றேன் பட்டவர்த்தனமாக..

 

மடையா.. எல்லா ஊர்களிலும் ;மஜ்லிஸ் ஸ{றா’ வைத்திருந்தேனே.. எல்லா ஊர்களிலும் இருந்த  என்னுடைய  ஆட்கள் எல்லாம் எங்கே..?”

 

எல்லோரும்தான் இருக்கிறாங்க..  உங்கட நினைவு நாள் வந்தா ஒவ்வொரு இறைச்சிக்கடையிலயும் உங்கள சந்துசந்தா அரிஞ்சி அரிஞ்சி அறுத்து விக்கிறாங்க.. நல்லா பிஸினஸ் செய்றாங்க.. வாக்குகள்  பொறுக்கிக் கொடுத்து உண்டியல் நிரப்புறாங்க.. போதுமா ?   வீணா என் வாயைக் கிண்டாதீங்க ஸேர்..

 

யா ரஹ்மானே!  இதெல்லாம் என்ன..எல்லாம் உடைந்தே விட்டதா..கருத்து பேதமென்னும் கறையான் வந்துங்கள்  ஒற்றுமையைச் சீரழிக்கும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.. பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்  என்று பாடிப் பாடிச் சொன்னேனே..?”   குரல் உடைந்து போய் அழுகுரலில் பாடினார் தலைவர்..

 

பாடி வெச்சிட்டு உங்கட பாட்டுக்கு நீங்க போய்ட்டீங்க.. நாங்க படுற பாட்ட இப்ப நாங்க பாடுறம்..  புது இசையில.. புதுப்புது தாளத்துல.. இப்ப உள்ள அரசியல் தாளத்துக்கு ஏற்ற பாட்டு இது..  கேட்கறீங்களா..ரெண்டு வரி பாடிக்காட்டவா.?”

 

வேண்டாம்..வேண்டாம்..!  இந்தச் சீரழிவெல்லாம் உடனேயே ஏற்பட்டதா..?”

 

ஆமாம்.! உடனேயே..!  அதுவும் நீங்கதானே பாடினீங்க..  ;விக்கி அழுது வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்.. தூக்கி விரைவில் எடுத்துச் சென்று தொழுதுவிட்டு  அடக்குங்கள்..’ என்று நீங்க பாடல்லையா..வரி பிசகாம அப்பிடியே செஞ்சம்..  தொழுது விட்டு அடக்க ஆரம்பிச்சம்... வீணாக நேரத்தை ஒட்டவி;ல்லை நாங்கள்.. விரைவாகத் திரும்பி வந்து கட்சித் தலைமையகத்தைக்கைப்பற்ற எங்கட ஆட்களை ஏவி.. மற்றவரை அடக்க ஆரம்பித்தோம்.. ஒரு இரவிலேயே சாந்தி இல்லத்தை சமர்க்களமாக ஆக்கினோம்..’’

 

ஐயயையையோ..

 

தலைவரின் அலறல் சத்தத்தில்  பெரு விருட்சத்தில்  மீதியாயிருந்த பறவைகளும் கிறீச்சிட்டுப் பறந்தன.. திடீரென தலைவர் மறைந்து விட்டார்.. அத்துடன் நறுமணமும் மறைந்தது. நான் அண்ணார்ந்து பார்த்தேன். மரத்தில் ஒட்டியிருந்த விஷப்பிராணிகளால் கொத்திக் குதறப்பட்ட என் முஸ்லிம் உடம்பு  மரத்தின் உச்சியில்  நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.நியதி 2005 பெப்ரவரி ஃ மறுபிரசுரம்:- மீள்பார்வை. 2005.

 

 

 

No comments:

Post a Comment