கல்லடிப் பாலம்.
தெரியும்தானே மட்டக்களப்பு கல்லடிப் பாலம்..? 1927ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டு இதுவரைக்கும் புகழோடும் உறுதியோடும் இருக்கும் கல்லடிப் பாலத்தின்ää எழுபத்திரண்டு இரும்புச் சட்டகங்களில் ஒன்றின்ää கைப்பிடியில் அமர்ந்திருந்த நான் தவராஜா.!
பாலத்தின் கீழே அறுபதடி தூரத்தில்ää நெளியும்ää ஆழமான வாவியில்ää இன்னும் சற்று நேத்தில் மீன்கள் பாட ஆரம்பித்துவிடும். இந்தப் பாடும் மீன்கள்தாமே இப்பாலத்தின் தனித்தவப் புகழுக்குக் காரணம்.. இப்போதுää மாலை மங்கிக் கொண்டிருந்த நேரம்..! மஞ்சள் நிற ‘டிஸ்பிரின்’ குளிசை போல சூரியன் வாவி நீரில் கரைந்து கொண்டிருந்தது. தூரத்து மாநகரத்து ஒளிவிளக்குகள் வாவி நீரில் ஆடின.. கருக்கிருட்டின் இந்த இரம்மியமான பொழுதை இரசிக்கும் மனநிலையில் நான் இல்லை. நான் எனக்குள்ளே கேட்டு வந்த கேள்விக்குப் பதில் இல்லை. இனிக் கிடைக்குமென்றும் தோன்றவில்லை. பாலத்தில் சில வாகனங்கள் விரைந்து கடந்தன.. இரும்புச் சட்டகங்கள் ‘தடக்..தடக்’கென்று அதிர்ந்தன என் மனதைப் போலவே..! என் பிரச்சினைக்குத் தீர்வு என்ன.. ஆயிரம் தடவை இக்கேள்வியை மனம் மனதிடமே வினவிக் கொண்டாலும் விடை தெரியவில்லை. கேள்வி ஒன்றும் பெரிய புதிர் அல்ல.. ஆனால்ää இது வாழ்க்கைப் பிரச்சினை.. இனப்பிரச்சினை.. மதப்பிரச்சினை.. ஊர்ப்பிரச்சினை.. சமூகப் பிரச்சினை.. எல்லாப் பிரச்சினைகளும் இந்த என்னுடய ஒரே பிரச்சினையில் தங்கியிருக்கின்றள.
“றுவைதாவைக் கைவிடுவதா.. கரம்பற்றுவதா..?”
தவராஜா என்கிற தமிழ் வாலிபனான நான்ää றுவைதா என்கிற முஸ்லிம் இனப் பெண்ணை மணந்து கொள்ளுதல் சாத்தியமா.. இது நடக்குமா..? தீர்வு கிடைக்குமா..? யாரிடம் கேட்க..?
“என்னிடம் கேள்..!” என்;று ஒரு அசரீரி ஒலித்தது. யாரது..? சுற்றிலும் பார்த்தேன். எனக்குள் மறுகிக் கொண்டிருந்த எண்ணங்களுக்குப் பதிலளிப்பது யார்..?
“நான்தான்..!”
“யார் நீ..? எங்கிருந்து பேசுகிறாய்..?”
“நான்தான் கல்லடிப் பாலம்..! என் பெயர்!”
“பாலமா..? நீ பேசுவதுண்டா..?”
“என்னுடன் மனிதர்கள் பேசுவதுண்டு. என் வாவிக் காலடியில் மீன்கள் பாடுவதுண்டு. என் தலைச் சட்டகத்தின் மேலே பறவைகள் இசைப்பதுண்டு.. என் வயிற்றின் மத்தியில் வாகனங்கள் உறுமிக் கதைப்பதுண்டு..”
“புகழாதே..!”
“ஏன்.. புகழக் கூடாது..? என் புகழ் உலகளாவியது.. மாண்புமிகு பிரிட்டிஸ் மகாராணியாரின் தூதுவரிலிருந்துää பெருந்தலைவர்களானää தந்தை செல்வாää டீ.எஸ். சேனநாயக்கா.. தளபதி.அமிர்தலிங்கம்ääää கேற்முதலியார் காரியப்பர்ää செ. இராசதுரை.. கல்லடி வேலன்ää பிதா தனிநாயகம் அடிகள்ää. காசி ஆனந்தன்ää புலவர்மணி சரிபுதின் ஐயா.. தியாகிதிலீபன்.. விமர்சகன் வீ. ஆனந்தன்….”
“நிறுத்து பட்டியல் போதும்..”
“இன்னுமின்னும் எத்தனை லட்சம் மனிதர்கள்ää.. வாகனங்கள்.. நூற்றுக் கணக்கான தலைவர்களைக் கண்ட எனக்கு நீயும்ää உன் பிரச்சினையும் ஒரு பொருட்டா..?”
“முட்டாள் பாலமே..! என் பிரச்சினை வித்தியாசமானது.. வெறும் காதல் மட்டும்; சம்பந்தப்பட்ட பிரச்சினையில்லை இது..”
“தெரியும்.. மதம் சார்ந்த பிரச்சினை… இனம் வேறு.. மதம் வேறு.. ஊர் வேறு.. கலாச்சாரம் வேறு.. பழக்கவழக்கம் வேறு.. உணவு வேறு.. எல்லாமே வேறு….வேறு..”
“தெரிந்துமா என் பிரச்சினை உனக்கு ஒரு பொருட்டாகப்படவில்லை..?”
“தெரியும்.. என் வயது உனக்குத் தெரியுமா.. அற்ப மனிதனே..?”
“தெரியாது.. எனக்குத் தேவையில்லை..”
“உனக்கு அது தேவை..! 1927ல் ஆங்கிலேய ஆட்சியில் நான் பிறந்தேன்.. இது 2007.! எண்பது வயது. எஃகு உடம்பு. இப்போதும் என்னைப் பாவிக்கும் மனிதர்கள் எத்தனை லட்சம் பேர்…”
“சரி சரி.. என் பிரச்சினை என்னவென்றால்…”
“உன் பிரச்சினை எனக்குத் தெரியும்.. முதலில் நான் சொல்லப்போகும் இந்தக் கதையைக் கேட்டுப் பார்.. அதில் உனக்குத் தீர்வு இருக்கிறது..!
“சரி சொல்லித் தொலை” என்றேன் வெறுப்பாக..
“1967ல்ää என் நாற்பதாவது வயதில் நீ அமர்ந்திருக்கும்.. இதே இடத்தில் நடந்த உண்மைக்கதை இது. உன்னைப் போலவே ஒரு தீவிரமான காதலனை எனக்குத் தெரியும்.. அவனது பெயர் அஸார்டீன். முஸ்லிம் பெடியன். பக்கத்துக் காத்தான்குடிதான் அவனது ஊர். அவனும்ää அக்காலத்தில்ää உன்னைப் போலவே இக் கைப்பிடியில் அமர்ந்து கொண்டிருப்பான். மணிக்கணக்கில் யோசித்திருப்பான். உன்னைப் போலவே அவனுக்கும் இன மாறுபாட்டு;க் காதல். அஸார்டீனின் காதலியின் பெயர் மகேஸ்வரி. தமிழ்ப் பெடிச்சி. எப்படியோ காதல் வயப்பட்டு விட்டார்கள்.. ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ முடியாமல் ஆகி வி;ட்டார்கள்…”
“1967ல் அஸார்டீனுக்கும் மகேஸ்வரிக்கும் காதல்.. 2007ல் தவராஜாவுக்கும்ää றுவைதாவுக்கும் காதல்..! விசித்திரம்தான்..! அவர்களின் முடிவு என்னாயிற்று..?” என்றேன் பரபரப்புடன்.. பாலத்தின் கதையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது எனக்கு.
“பொறு. அவசரப்படாதே..! அஸார்டீன்ää மகேஸ்வரி இருவரது வீட்டிலும்ää ஊரிலும் எதிர்ப்பு..உடனேயே தொடங்கிவிட்டது. சச்;சரவுகள்ää தடைகள்.. உக்கிரம் பெற்றன. காதல் கைகூடாது என்று இருவருக்கும் நன்கு புரிந்துவிட்டது. தத்தம் வீடுகளில் பிடிவாதம்ää ஒத்துழையாமை.ää உண்ணாவிரதம் முதலான போராட்டங்களையெல்லாம் செய்து பார்த்துக் களைத்து விட்டனர்…”
“நாங்களும்தான்..” என்றேன் அவசரமாக:ää
“குறுக்கிடாதே..! அஸார்டீன்ää மகேஸ்வரியின் போராட்டங்கள் அமைதி நிரம்பியிருந்த அக்காலத்தில் மிகவும் சூடு பிடித்தன.. எனினும்ää மதவாயுதம் கொண்டு அடக்கப்பட்டன. ஆனால்ää பிரச்சினை என்னவோ நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டேயிருந்தது. எத்தனை கட்டுக்காவல் தடைகளைத் தாண்டியும் காதலர்கள் சந்தித்தே விடுகிறார்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சிலசமயங்களில் காதலருக்குச் சாதகமாகவே அமைந்து விடுவதுண்டு. திடீரென ஒரு நாள் இருவரும் இதே இடத்தில் சந்தித்துக் கொண்டனர். நீண்ட நாள் பிரிவின் பின் சந்திப்பு..! காதலர்கள்.. அந்தி மாலை.. பாடும் மீன்கள்.. பலரும் கவனிக்காத இந்தப் பாலத்தடிச் சந்து..
“நிறுத்து.. கறுத்தப் பாலமே..! வர்ணணை வேண்டாம்.. கதைக்கு வா..” என்னால் ஆவலை அடக்க முடியவில்லை. பொறுமை இருக்கவில்லை.
“வர்ணிப்பதற்கு மட்டுமல்லää இவ்விடத்தில் ஒரு தமிழ்ச்சினிமாப் பாட்டு பாடுவதற்கும் ஏற்ற ‘சிற்றுவேசன்’தான்.. இருந்தாலும்ää மகேஸ்வரி அழுதுகொண்டிருந்தாள். அஸார்டீன் பேசாமலிருந்தான். இருவரும் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேசத் தேவையிருக்க வில்லை. மகேஸ்வரி தன் கால்களிலிருந்த நெருப்புச் சூட்டுக் காயங்களை காட்டினாள். அஸார்டீன் தன் முதுகில் விழுந்திருந்த இரும்புப் பொல்லடிகளின் செந்தழும்புகளைக் காட்டினான்.. இருவரும் அழுதனர்.. இனி என்ன முடிவு செய்வது.? ஒருபோதும் இணைய முடியாதென்று இருவருக்கும்தான் மிகத் தெளிவாகப் புரிந்து விட்டதே.. பிரிவதைத் தவிர வேறென்ன செய்வது..?”
“பிரிந்து விட்டார்களா..?”
“மிக நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்து விட்டுää அஸார்டீன் ää மகேஸ்வரியிடம் ஒரு வரியில் சொன்னான். மகேஸ்..! உன் காதல் உறுதியும் உளத்தூய்மையுமுடையதாய் இருந்தால்ää அடுத்த வெள்ளிக்கிழமையன்று இதே இடத்திற்கு நீ வர வேண்டும்.. மகேஸ்வரி ஒரு வரியில் பதிலளித்தாள். கட்டாயம் வருவேன்..”
“வந்தார்களா.. சந்தித்தார்களா..?
“குறிப்பிட்டபடி அதே வெள்ளிக்கிழமையன்று சந்திப்பு நிகழ்ந்தது. காத்தான்குடிப்பக்கமுள்ள எனது முகப்பிலிருந்து அஸார்டீன் நடந்து வந்து கொண்டிருந்தான். மட்டக்களப்பு முகத்திலிருந்து மகேஸ்வரி வந்து கொண்டிருந்தாள். நடுமத்தியில் இருவரும் சந்தித்தனர். அவர்கள் ஒரு கணமும் யோசிக்கவில்லை. ஒருவரையொருவர் நெருங்கியதும்ää சுற்றுப்பபுறச் சூழலை மறந்து திடீரென ஆளையாள்க் கட்டியணைத்தனர்.. ஒரு நிமிடம் அணைப்பில் மெய்மறந்திருந்தனர். பாலத்தால் பயணிததுக் கொண்டிருந்த அத்தனை வாகனங்களும்ää மனிதரும் அபூர்வமான இந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருந்த போது. திடீரென. கட்டியணைத்திருந்த இருவரும்ää கலகலவெனப் பலமாகச் சிரித்தனர். அடுத்த கணத்தில்ää அறுபதடி கீழே வாவியில் பாய்ந்தனர். பாயும் போதுää “அ..ஸாhh…ர்ää ! ம..கே.ஏ.ஸ்..!” எனக் கத்தினர். குரல்கள் ஓயும் முன்னரே கீழே ஆழமான.. வாவியோடு இருவரும் புதைந்து மறைந்து விட்டனர்.”
“என்னது..?” நான் திடுக்கிட்டுப் போய் எழுந்தேன்.. தடுமாறினேன்..
“ஆம்.! கடல் பெருக்கெடுத்து வாவியில் நிறைந்திருந்த அந்த 120 அடி ஆழத்தில்ää தம்மையும்ää தமது நிறைவேறாத காதலையும் புதைத்துவிட்டனர்..”
“…………………………..!”
“இச்சம்பவம் அக்காலத்தில் இலங்கையெங்கிலும்ää பிரசித்து பெற்றது. சிறுகதைகள்ää கவிதைகள்..ää விவாதங்கள்ää ‘இசையும்கதையும்’ என்றெல்லாம் ஊடகங்களில் வெளிவந்தன.. ‘அஸார்-மகேஸ் காதல் காவியம்’ எனப் புகழப்பட்ட இதுää இன்றைக்கு மறக்கடிக்கப்பட்டுப் போன ஒரு கதையாகிவிட்டது. ஆனால்ää வரலாறு உள் வடிவத்தில் மீள்கிறது...”
“என்ன உளறுகிறாய்.?” எனக்குப் பயமாகவிருந்தது.
“அஸார்டீன் ஒரு முஸ்லிம்..! மகேஸ்வரி தமிழ்ப்பெண்.… நீ தவராஜா தமிழ்..! றுவைதா ஒரு முஸ்லிம்.. பெண்.. பாத்திரங்கள்தாம் வேறு. தளம் ஒன்றே.. அவர்கள் 67ம் ஆண்டு தேடிக் கொண்ட தீர்வு அது. இது மிலேனிய யுகம்.. 2007ல் நீங்கள் தேடிக் கொள்ளப்போகும் தீர்வு என்ன..?”
“அதைத் தேடித்தானே நான் இங்கு வந்தேன்..” என்றேன் எரிச்சலுடன்.
“நல்ல இடம்.. நீ வந்த இடம்..! நான் மட்டக்களப்பையும் காத்தான்குடியையும் இணக்கும் பாலம்.. 67ம் ஆண்டு இனமாறுபாட்டுக் காதலை இணைத்து வைத்த பாலம். மரணத்தில் காதலர்களை வாழ வைத்த பாலம். இப்போது சொல் நான் அனுபவஸ்தன் இல்லையா.. நான் பிரச்சினையைத் தீhத்து வைக்க வில்லையா..?”
“நன்றாகத் ‘தீர்த்து’ வைத்தாய்..!” என்றேன் வெகு நக்கலாக..
“தீர்வுகள் வசனங்களால்ää சொல்லித் தரப்படவேண்டியவை அல்ல. மனதால்ää உணரப்பட வேண்டியவை. உன் பிரச்சினைக்கான தீர்வை முதலில் நீயே உணர வேண்டும்.”
“போதும்.. உபதேசம்.! முடிவாக என்னதான் சொல்லுகிறாய் நீ..? நான் றுவைதாவைக் கைவிடுவதா.. கரம் பற்றுவதா.. அதைச் சொல் முதலில்..” கறுத்தப் பாலத்தின்ää கதைமயக்கலில் கட்டுண்ண விரும்பவில்லை நான். தீர்வொன்றும் சொல்லாத இந்த இரும்பு(மனது)ப் பாலத்திடம் வெற்றுக் கதை கேட்டுக் கொண்டிருப்பதில் எனக்கென்ன வந்தது..? என் பிரச்சினக்குத் தீர்வு சொல்ல உன்னால் முடியமா முடியாதா அதைச் சொல் முதலில்..
என் மனவோட்டத்தை அறிந்து கொண்டாற் போல்ää கறுத்தப் பாலம் கடகடவென்று சிரித்தது.. பின் உறுதியான குரலில் சொன்னது: “மறுபடியும் என்னையே கேட்கிறாய்.. 67ல் நடந்தது போல நீயும்ää றுவைதாவும் அடுத்த வெள்ளியன்று இவ்விடத்தில் சந்தித்து தற்கொலை செய்து கொள்ளலாம் அல்லவா..?” நான் அதிர்ச்சியும்ää ஆத்திரமுமாகப் பாலத்தைப் பார்த்தேன். பாலம் தடதடத்தது. எனது நெஞ்சு பயத்தினால் காய்ந்து விட்டது. வெறுப்பான குரலில் கத்தினேன்..
“கறுத்தப் பாலமே..! காதலுக்குத் தற்கொலை ஒன்றுதானா உன்னிடமுள்ள ஒரே தீர்வு..?”
“அது எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்துää அப்படித்தான் தீர்வு காணப்பட்டது..”
“அப்படியானால்..? நானும்.. றுவைதாவும்..?”
“உன் விருப்பம். அவள் விருப்பம்.. எனக்கென்ன வந்தது..? நான் அடுத்த வெள்ளிக் கிழமையும் இங்கேதான் ஆடாதசையாது காத்திருப்பேன் உங்களிருவரின் வருகைக்காக..!”
வெகுநேரம் நான் பாலத்துடன் பேசவில்லை. இனிப் பேசினால்ää பாலமே என்னைப் பிடித்து வாவிக்குள் தள்ளிவிட்டுவிடும் என்று தோன்றியது. நன்றாக இருட்டிவிட்டது. அரசடியம்மன் கோயிலிலிருந்து கடவுட் துதி கேட்டது.. சற்று நேரத்தில்ää மட்டுநகர் பள்ளிவாசல் பாங்கோசையும் கேட்டது. கோவிலுக்குச் செல்வதா.. பள்ளிவாசலுக்குப் போவதா..? நீண்ட மணித்தியாலயங்களின் பின்னர் பாலத்தின் கைப்பிடிச் சட்டகத்திலிருந்து குதித்தேன். திமிர்த்துப் போயிருந்த கால்களை உதறிவிட்டேன். மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்..
“என்ன பேசாமல் போகிறாய்..?” பாலம் கேட்டது. குரலில் ஏளனம் கலந்திருந்தது.
“தீர்மானத்தை உணர்ந்து வி;ட்டேன்…” என்றேன் உறுதியான குரலில்.
“என்னவென்று..?”
“பிரிவினைதான் ஒரே தீர்வு.”
“உலகத்தை விட்டே பிரியப் போகின்றீர்களா..?”
“றுவைதவை விட்டும் பிரியப் போகின்றேன்.”
என்குரலில் தெரிந்த உறுதியைப் பார்த்து பாலமே பயந்து விட்டது. நான் நடக்க ஆரம்பித்தேன்.. இப்போதுää எனக்கு அரசடி அம்மனின் தேவாரமும்ää பள்ளியின் பாங்கோசையும் கேட்கவில்லை. கீழே வாவியில் மட்டுநகர் கல்லடிப் பாலத்தின் கீழ் விரையும் வாவியிலிருந்துää மீனினங்கள் பாடும் இன்னிசை மட்டுமே கேட்டது.0
கலாப10ஷணம் புலோலியூர். க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி.யில் பரிசுச் சான்றிதழ் பெற்றது. 2007.- ஞானம்.
No comments:
Post a Comment