Friday, October 27, 2023

வதனமார்-(வெள்ளிவிரல்-சிறுகதை-2)

வதனமார்.


ஆர்.எம். நௌஸாத்.



~~ஓ.. ஒன்றும் பிறந்து உடையானைக் கை தொழுது

இரண்டும் பிறந்து ஈஸ்பரனைக் கைதொழுது

மூன்றும் பிறந்து  முக்கண்ணனைக் கைதொழுது

நான்கும் பிறந்து நான்முகனைக் கைதொழுது

ஐந்தும் பிறந்து ஐங்கரனைக் கைதொழுது......||


ஆனைச் சித்தன்; ஆடிக் கொண்டிருந்தான். பேயாட்டம் போல எம்பிஎம்பிக் குதித்தான். அவன் அணிந்திருந்த மண்டையோட்டு மாலை எகிறி எகிறிக் குதித்தது. அவனது சடாமுடியும்ää தாடியும்ää சிக்கலாகிப் பிரிக்க முடியாதபடி  தாறுமாறாகப் பறந்து கொண்டிருந்தன..அவனது கர்ணகடுரமான தொனியில் காவியப்பாடல் மயானத்தின் வெகு தூரம் வரை கேட்டுக் கொண்டிருந்;தது. அவனது இருகைகளிலும் இரண்டு கருஞ்சேவல்கள் கழுத்தில் கடிக்கப்பட்டு  குருதி விளாரிடத் துடித்துக் கொண்டிருந்தன.. ~~க்ராக்..க்ராக்கெ||ன்று கத்திக் கொண்டிருந்தன..  ஆனைச் சித்தன் முழு நிர்வாணமாக வெகு தீவிரமாக ஆடிக் கொண்டிருந்தான்.  சேவல்களின் கழுத்தை அடிக்கடி கடித்து குருதியை உறுஞ்சி உறுஞ்சி விழுங்கினான்.

மயானத்தில் ஆங்காங்கேää எரிந்தும் புகைந்தும் கொண்டிருந்த சிதைகளின்  வெளிச்சத்தில் சாம்பர் தூசுகள் புழுதிப் படலமாய் மேலெழுந்தன.. எரிந்து உருகும் நரமாமிசம் மூக்;கைக் குடைந்தது. மயானத்தின் இருட்பக்;கங்களில்ää  ஓநாய்களின் உளை கேட்டது. பற்பல இராப் பறவைகளின் குரல்கள் அதிபயங்;கரமாக ஒலித்தன.. ஆனைச் சித்தனின் வெறியாட்டத்தில்  மரப்பறவைகள் தூக்கமிழந்து சடசடவெனச் சிறகடித்துப் பறந்தன..

ஆனைச் சித்தனின் ஆட்டத்திலும்ää  இருண்ட மயான ஒலிகளின் திடுக்கத்திலும் மிரண்டு போயிருந்த சேணியனும் அவன் மருமகன் மாலினும் கைகள்கட்டி வாய் பொத்தி கீழே உட்கார்ந்து கொண்டிருந்தனர்.. ஆனைச் சித்தனின் நிர்வான ஆட்டத்தை நெஞ்சம் பதைபதைக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆடிக் கொண்டிருந்த ஆனைச்சித்தன் திடீரெனத் ~~தம்பிரானே...!||என்று மயானமே கிடுகிடுத்துப் போகுமாறு கத்தினான். பின்;ää  கீழே நடுநடுங்கியபடி உட்கார்ந்திருந்த இருவரையும் உற்றுப் பார்த்தான். ~பகபகபக|வெனச் சிரித்தான். வாய் முழுக்க கோழி இரத்தம் அப்பிக் காய்ந்து போயிருந்தது. ஆனைச்சித்தனின் கண்களில் குடி கொண்டிருந்த கொடுரமும்;ää வாயிலிருந்து வடிந்து மார்பு மயிர்களை நனைத்த குருதிச்; சிதறல்களும் கண்டு  அஞ்சித் திடுக்கிட்டுப் போயிருந்த  இருவரையும்ää பார்த்த ஆனைச்சித்தனின் மீது ~வதனமார்| வந்து வாலாயமாகி விட்டதை அவனது செந்நிறக்கண்களில் தெரிந்த விசித்திரக் குறிப்பாலுணர்ந்தனர். அடுத்த கணத்தில் ஆனைச்சித்தனின் வாயிலிருந்து இடி போலக் கேட்டது  ஒரு அமானுஷ்யக்; குரல்...

இது ஆனைச்சித்தனின் குரலல்ல..

~~நீ வந்ததென்னடா சேணியா..?||

0

சில நாட்களுக்கு முன்னர்ää பசும் புற்தரை மேய்ச்சலுக்காக கறுப்புளாப்பட்டியை அடர்வன மேய்ச்சல் வெளியில் கொண்டு வந்து விட்டிருந்தான் சேணியன். கறுப்புளாப் பசு  நன்றாகப் புஷ்டியாகி பால்மடி  பாரம் தள்ளிப் பருத்திருந்தது. சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றிருந்தது. இப்;போது கறுப்புளாப் பசுவின் பட்டியில் இரண்டு நாம்பன்களும்ää இரண்டு மறிச்சிகளும் இருந்தன. எல்லாவற்றுக்கும்ää  குறியிட்டுää ஒரே பட்டியாகப் பழக்கியிருந்தான் சேணியன். 

சேணியனின் இந்தக் கறுப்புளாப் பட்டிக்குää மிகவு ம் மதிப்பும்ää பெறுமதியும் இருந்தன. பட்டிப்பளை வியாபாரி ஒருவர்ää  பட்டியுடன் மொத்தமாக நாற்பது ரூபாய் பணமாகவே கொடுத்துவிடத் தயாராகவிருந்த போதிலும்ää சேணியன்  இதை விற்பனைக்கு விடவில்லை. குட்டிகள் குடித்தது போகää கறுப்புளாப்பட்டி தினமும்ää மேலதிகமாக நான்கு பட்டைப் பால் கறந்து தந்தது. குட்டிகளுடன் மேயும் போதுää கறுப்புளாப் பட்டியின் முலைகளின் விசாலத்தையும்ää காம்புகளின் கன பரிமானத்தையும் கண்ட வியாபாரிகள் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் சேணியன் விற்பனைக்கு இணங்கவில்லை.  பணத்துக்காக  தனக்கும் கறுப்புளாப்பட்டிக்கும் இடையிலிருந்த  ஒரு அந்நியோன்னிய நட்புணர்வை இழப்பதை சேணியனால் தாங்கிக் கொள்ள முடியாது. 

கறுப்புளாப்பட்டி வந்ததிலிருந்துதான் சேணியனின் மூன்று பெண்களுக்கும் திருமணம்  நடந்திருந்தது.  திருமணம் செய்து கொடுத்த கையோடுää சேணியனுக்கே இந்த 70 வயதிலும்ää ஒரு மகன் பிறந்திருந்தான். சேணியனின் குடிசை  செங்கல் வீடாக மாறியிருந்தது. இன்னோரன்ன நன்மைகளால்ää தனக்கு வாழ்வளித்த கறுப்புளாப் பட்டியை எக்காரணம் கொண்டும் இழக்க சேணியன் விரும்பவில்லை. சேணியனின்; வாழ்வுக்கு ஆதாரமான இத்தகைய கறுப்புளாப்பட்டியை கடந்த சில நாட்களாகக் காணவில்லை. மேய்ச்சலுக்குப் போன பட்டி திரும்பவில்லை.  பதறிப் போன சேணியன் தனக்குத் தெரிந்த எல்லா வழிகளிலும் முயன்றும் கறுப்புளாப்பட்டியைக் கண்டு பிடிக்க முடியவி;ல்லை. ஊண் உறக்கமின்றிக் காடுகளில் தேடித்தேடி அலைந்த சேணியனும்ää மருமகன் மாலினும்ää  தவியாய்த் தவித்துச் செயலிழந்திருந்தனர்..

0

ஆனைச்சித்தனின் வாயிலிருந்து இடி போலக் கேட்டது ஒரு அமானுஷ்யக் குரல்... இது ஆனைச்சித்தனின் குரலல்ல..

~~நீ வந்ததென்னடா சேணியா..? வந்ததென்னடா சேணியா..?|| 

~~அய்யனே.. அய்யனே...!|| என்று குழறியபடி ஆனைச்சித்தனின் கால்களில் விழுந்த சேணியன் சொன்னான். ~~அய்யனே... என்ட கறுப்புளாப் பட்டியைக் காணல்லை யய்யனே..ய்...||

~~பட்டித் தம்பிரானுக்குப் பங்கென்னடா சேணியா..?||

~~பால் கறக்கிறன்.. அஞ்சி கொடம் வெண்ணை தாறன்..ன்னய்யனே..ய்..||

திடீரென ஆனைச்சித்தன் ஆழமாக மூச்சிரைத்தான்..  நான்கு திசைகளிலும் நுகர்ச்சிப் புலனை கூர்மையாக்கி காற்றில் மோப்பம் பிடித்தான்.. சட்டென்று வடக்குத் திசையை நோக்கிய ஆனைச்சித்தன்  பெருங்குரலெடுத்துக் கத்தினான்.

~~ஆ.. ஹோ..ய்... ! கறுப்புளா.....டே... ஹோ..ய்..||

0

பட்டிப்பளை ஆற்றையும்ää கடந்து சென்று பற்பல வியாபாரிகளிடம் விசாரித்தும் எத்தகவலும் கிடைக்கவில்லை. ஒரேஒருத்தன் மட்டும்ää தனது நாம்பனை மேய்ச்சலுக்கு விட்டுக் கொண்டிருந்த போது. கறுப்புளாப்பட்டியை  தீவட்டையில் கண்டதாக தகவல் சொன்னான். சேணியன் பதறிப் போனான். தீவட்டை தாண்டினால் வரும் அடர்வனத்துக்குள்ளிருந்துää காட்டு ஓநாய்களின் அபாயம் எப்போதும் இருந்து வந்தது. ஓநாய்க் கூட்டம் கறுப்புளாப்பட்டியை சாய்த்துக் கொண்டு போய்ää  தாழைப்பள்ளத்துக்குள் வீழ்த்திக் கொன்று தின்றிருக்கும் என்ற அபிப்பிராயம் வந்த போதெல்லாம் சேணியன் நெஞ்சம் பபைதைபதைத்;தான்.  தன் மூன்று மருமக்களுடனும்ää  தாழைப்பள்ளத்துக்கு அபாய வழியில் போய்ப் பார்;த்தான்.. ஆனால்ää ஓநாய்கள் கறுப்புளாப்பட்டியைக் கொண்டு சென்ற தடம் ஏதும் அகப்படவில்லை.  

கறுப்புளாப்பட்டியில். சேர்ந்து திரிந்து கொண்டிருந்த ஒரு நடையனாவது கண்ணில் அகப்படவில்லை. எனவேää ஏற்கனவே இதில் கண்; வைத்திருந்த அந்தப் பட்டிப்பளை வியாபாரிதான் கறுப்புளாப்பட்டியைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கே  வரமுடிந்தது. எனவேää நாற்பது மைல்கள் நடந்து சென்று பட்டிப்பளை வியாபாரியைச் சந்தித்தனர்.  அவ்வியாபாரியின் பட்டியில் கறுப்புளா காணப்படவில்லை. வியாபாரியும் தான்ää பத்துப்பட்டிக்கு அதிபதியாயிருக்கும் போதுää கறுப்புளாப்பட்டி தனக்கெதற்கு என்று கூறிää  சந்தேகித்துத்தேடிச் சென்ற சேணியனுக்கும்ää மருமகன் மாலினுக்கும் கட்டி வைத்து மாட்டுக் கயிற்றால் தாறுமாறாக அடித்து அனுப்பியிருந்தான்.

என்ன செய்தும்ää கறுப்புளாப்பட்டியைக் காணாத சேணியன்ää பட்டித் தெய்வம் ஒன்றே தனது கறுப்புளாப்பட்டியைத் தேடித்தரும் என்ற பெருநம்பிக்கையுடன்ää மயானத்தில் சஞ்சரிக்கும் ஆனைச்சித்தனைத் தேடி வந்திருந்தான். ஆனைச்சித்தனைச் சந்தித்தவர்கள் அடுத்த வருடம் உயிருடன் இருந்ததில்லை என்ற தன் குக்கிராமத்து முன்னோர் மொழியையும் பொருட்படுத்தாது வந்திருந்தான்.  தான் உயிர் இழந்தாலும் பரவாயில்லை கறுப்புளாப்பட்டியின் மர்மத்தை அறிந்து கொண்டுää அதனை மீட்;பதில்ää சேணியன் திட்டமாகவிருந்தான். 

0

ஆனைச்சித்தனின் உடல் மறுபடி துள்ளி வில்லாகித் துவண்டுää நிமிர்ந்தது. அவனது ஆட்டம் உச்ச வேகம் பிடித்தது. 

~~விடாய்க்குதுடா சேணியா...|| என்று கத்தினான். உடனேää மாலின்   வெகுதுரிதமாக எழுந்து மீதமிருந்த இன்னொரு வெள்ளைச் சேவலைக் கதறக்கதறப் பிடித்து ஆனைச்சித்தனிடம் பயபக்தியுடன் நீட்டினான். அதனைப் பற்றிப்பிடித்த ஆனைசச்சித்தன் சட்டென்று தனது வேட்டைப்பற்களால்ää கோழியின் கழுத்தில் கடித்தான். பீய்ச்சியடித்த செங்குருதியை  உறுஞ்சி விழுங்கினான். திடீரெனப் பாய்ந்து கூத்தாட ஆரம்பித்தான். ~~ஆ.. ஹோ..ய்... ! கறுப்புளா.....டே... ஹோ..ய்..|| என்று கூவிக் கொண்டேää கோழியின் கால்களைப் பிடித்துப் பம்பரமாகச் சுழற்றியபடியேää சட்டென்று தெற்குத் திசையை நோக்கிய ஆனைச்சித்தன் பெருங்குரலெடுத்துப் பாடினான். ஆனைச் சித்தனின் கூக்குரல்  அடர்வனத்தின் நாலாபுறமும் உடுருவியது..

ஆறும் பிறந்து ஆறுமுகனைக் கைதொழுது

ஏழும் பிறந்து  எம்பெருமானைக் கைதொழுது

எட்டும் பிறந்து  இளையோனைக் கைதொழுது

ஒன்பதும் பிறக்க ஒண் பொருளுமுண்டாகி

பத்தும் பிறக்கப்.....

திடீரெனப் பாட்டை நிறுத்தியää அவனது செந்நிறக் கண்கள் சேணியனை ஊடுருவிப் பார்த்தன. உடனே சேனியனுக்குள் விபரிக்க முடியாத ஒரு உணர்வு வியாபித்துப் பரந்தது. சட்டெனää சேணியன் மிகத் தைரியத்துடன் எழுந்தான். ஆனைச் சித்தனை நேருக்கு நேராகப் பார்த்தான். இப்போது ஆனைச் சித்தனின் செந்நிறக் கண்களின் ஒளி குறையää சேணியனின்ääகண்கள்  அந்த ஒளியை வாங்கி சிவப்பேற ஆரம்பித்துப் படிப்படியாகச் செந்நிறமாகின.  திடீரென ஆனைச் சித்தன் அடியற்ற மரம்போலக் கீழே மடாரென விழுந்தான். சேணியன் மீது வதனமார் மாறிவிட்டது. அடுத்த கணத்தில். சேணியன் மகா பெருங்குரலெடுத்துக் கத்தினான். 

~~அன்னம் தேவி அமுதம் தலைகாவல்

முண்டி முறண்டி முழுநீலி சோமல்

என்ற நூற்றெட்டு எருமையும்

தெக்கத்தித் தெசையிலே மறிபட்டுத்..

தறிகெட்டுத் தவிக்கையிலே..

ஏகினார் தம்பிரான் இளம்பெரிய கானகத்தே... 

கானகத்தே... கானகத்தே....

கத்திக் கொண்டிருந்த சேணியன்ää அடுத்தகணம்ää  தெற்குத் திசை நோக்கிப் பாய்ந்து ஒடத் தொடங்கினான். சேணியன்  உச்ச உந்துவிசையில்  ஓடினான். உடனேää மாலினும்ää சேணியனைத் தொடர்ந்து ஓடினான். அடர்ந்த இருளிலும் அடர் பற்றைகளுக்கும்ää விஷப் பிராணிகளுக்கும்ää திடீர்ப் புதைகுழிகளுக்கும் மத்தியில் கண்ணை மறைக்கும் காரிருளில் உடுருவிக் கொண்டு ஒடினான். அவன் உணர்வு  அவன் வசமில்லை. . மாலினால்ää சேணியனைத் தொடர முடியவில்லை.  மாலின்   காரிருளில் தட்டு முட்டுப் பட்டுப் போய் ஒருஇலக்கும் புரியாமல்ää மரங்களில் மோதி மூர்சித்து விழுந்து விட்டான்.

இயக்கப்பட்ட  கருவி போல விசை கொண்டு விரைந்த சேணியன் இடையிடையேää ~~ஹே...ய்.. கறுப்புளாவே..கறுப்புளாவே...!|| என்று கத்திக் கூக்குரலிட்டான். இருளுக்குள் அவனது கண்கள் செந்நிற வெளிச்சம் பாய்ச்சின.. ஒரு அச்சமும் அவனைப் பிடிக்கவில்லை. சேணியனின் ஒட்டத்தில்ää கலவரப்பட்டுää காட்டு ஒநாய்கள்.. இரண்டொரு சிறுத்தைகள்.. பாம்புகள்.. இராப் பறவைகள்..  இன்னும் இதர காட்டு ஜந்துகளும்ää மிரண்டோடää தொடர்ச்சியாகää முப்பது காதம் ஓடிய சேணியன் சரசரவென்;று ஒரு குன்றில் ஏறி நின்றுää பெருங்குரலெடுத்துää 

 ~~டே...ய்.. கறுப்புளாவே...!|| என்று கூக்குரலிட்டான்.  அதேகணத்தில்ää 

அடர்வனத்துக்குள்ää தன் குட்டிகளுடனும்ää மறியனுடனும்ää  திக்குத் திசை தப்பி வெகுதூரம் ஊடுருவி வந்துää புதை மணலில் சிக்கிக் கொண்டிருந்த கறுப்புளாப் பட்டியின் காதுகளில்ää தன் எஜமான் சேணியனின் அழைப்பு வெகு துல்லியமாகக் கேட்டது. அடுத்தகணம்ää தன் உடல்பலம் முழுவதையும் திரட்டித் துள்ளி மேலெழுந்து புதை மணலிலிருந்து விடுபட்டுப் பாய்ந்து தனது பட்டியுடன் சேர்ந்தது. அடுத்த கணத்தில்ää கறுப்புளாப்பட்டிகள் யாவும் ~~ம்மபாபாபபா||வென்ற பெரும் அலறல்களுடன்ää அசுர வேகத்தில்ää தன் எஜமானின் குரல் கேட்ட திசை நோக்கிப்;ää பாய்ந்து ஓடி வந்தன.. அவற்றின் ஒட்ட வேகத்தில்ää காடு கிடுகிடுத்தது.  கறுப்ளாப்பட்டிகள் தமக்குத் தெரிந்த ஒரு செந்நிற ஒளியை இலக்காகக் கொண்டு உச்ச வேகத்தில் நாலுகால் பாய்ச்சலில் வந்தன..

0

காட்டின் இருள் விலகிää அடர்வனத்த்pன் மரங்களுக்கிடையில் சூரியன் உட்புகுந்து வெளிச்சம் பாய்ச்சி;ää சுள்ளென்று முகத்தில் சுட்டதால் மூர்ச்சை தெளிந்து எழுந்தான் மாலின்.  பதைபதைத்துப் போய்ää ஒரே கணத்தில்ää இரவுச் சம்பவங்கள் ஞாபகம் வரää ஒரே உந்தலில் சேணியன் சென்றிருந்த திசையில் முறிபட்டும்ää சிதைந்தும் கிடந்த மரக்கிளைகளின் வழிகாட்டலில்ää சேணியனின் காலடித் தடங்களில் கருத்தாகக கண் வைத்து தொங்கோட்டத்தில் ஓடி வந்த மாலின்ää அச்சிறு குன்றை வந்தடைந்த போதுää அவனது  காதுகளில்ää ~~ம்பாபாபா|| வென்று நீளமாகக் கத்தி உறுமிய கறுப்புளாப் பட்டியின் குரல் இனிமையாக ஒலித்தது. குன்றின் சரிவில் கறுப்புளாப்பட்டி நின்றுகொண்டிருந்தது தெரிந்தது.. ஆனால்ää சேணியனைக் காணவில்லை.

~~மாமா.... மாமாவே..|| என்று சேணியனைக் கூப்பிட்டபடியேää  பரபரவென்று குன்றின் கீழிறங்கியமாலின் சட்டென நின்று விட்டான்.  

காரணம்ää தரையில்ää விறைத்துப்; போய்க் கிடந்தää தன் எஜமான் சேணியனின் உயிரற்ற உடலை கறுப்புளாப்பட்டி  கண்ணீர் வழிய நக்கிக் கொண்டிருந்தது.0

 (ஞானம் கலைஇலக்கிய சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச்; சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை.)  





 

No comments:

Post a Comment