Friday, October 27, 2023

நல்லதொரு துரோகம்-(வெள்ளிவிரல்-சிறுகதை-10)

  நல்லதொரு துரோகம்

 

மாஞ்சோலைக் கிராமத்தில்ää புதிதாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு பொலிஸ் காவலரண். அதிகம் பேரில்லை. ஒன்பது பொலிசாரும்ää நான்கு ஊர்காவற்படையினரும்தான் அங்கு கடமை. அதற்குப் பொறுப்பாளராக இருந்;தார் நிஸ்ஸங்க என அழைக்கப்படுகிற  நந்தமித்ர முதியன்சலாகே  நிஸ்ஸங்க பண்டார.   மனிதர் தோள்களி;ல் இரண்டு நட்சத்திர அந்தஸ்துகளைச் சுமந்திருந்தாலும்ää ஆட்சி மாற்றத்தில் பதவியிறக்கப்பட்டு இங்கு வந்து பாரமெடுக்க வேண்டியிருந்தது.

 

     நிஸ்ஸங்க தனது பகுதியினரை மிகவும் சுதந்திரமாக இயங்க விட்டிருந்தார்.  இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்பதால்ää இயக்க அச்சுறுத்தல் மிகக் குறைவாக இருந்தது ஒரு காரணம். மற்றது ஜன்ம அரச விரோதம்.

 

     நிஸ்ஸங்கவிடம் ஒரு வழக்கமிருந்தது. ஒவ்வொரு பின்நேரமும்ää தனது மோபைக்கில்ää கிராமத்தைச் சுற்றி ஒரு உலா. பின்னிருக்கையில்ää அவரது எஸ்எல்ஆர் துப்பாக்கியை ஏந்தியபடி ஊர்காவற்படைவீரன் அய்யுப் கம்பீரமாகக் காட்சியளிப்பான். எஸ்எல்ஆர் துப்பாக்கியை தொட்டுப் பார்ப்பதிலேயே பேரின்பம் அடைகிற அய்யுபுக்கு இந்த வழக்கம்  பேரானந்தமாக இருந்ததில் வியப்பில்லை.

 

     அய்யுபை நிஸ்ஸங்க நம்பிய அளவுக்கு மற்றச் சிங்களப் பொலிசாரை நம்பவில்லை. அய்யுபிடம் எஜமான விசுவாசம் மிக அதிகம். இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால்ää பாமரனான அய்யுபிடம் இருந்த துப்பாக்கி பற்றிய அறிவுதான். எஸ்எல்ஆர் துப்பாக்கியை தனி இருட்டில் வைத்துக் கழற்றிப் பின் கச்சிதமாக மறுபடி பூட்டித் தருவான். மூன்று செக்கன்களில் உயிரை வாங்கும் கிரேனைட்டின் ஆழியைக் கழற்றி வலதுகைப் பெருவிரலால் அழுத்தி பத்து நிமிடங்கள் வைத்திருப்பான்.  நிஸ்ஸங்கவும் அய்யுபும் உரையாடுவதைக் கேட்பதே ஒரு விநோதமான அனுபவம். தமிழும்ää சிங்களமும் ஆளாளுக்குக் கொஞ்சம் தெரியும். எனவே உரையாடல்களில் தடங்கல் இருந்ததில்லை.  நிஸ்ஸங்க அய்யுபை தனது எஸ்எல்ஆர் துப்பாக்கியாலேயே கட்டிப் போட்டிருந்தார். அய்யுப் வைத்திருக்கும் ஒற்றைக்குழாய் சொட்கண் துப்பாக்கி மிகவும் அதரப் பழசானது. அதை அவன் கணக்கிலும் எடுப்பதில்லை. எஸ்எல்ஆரினால்ää  போரிட்டு அதனால்ää செத்தாலும் பரவாயில்லை…. சரளமரளமாகச் சுட்டுப் பார்க்கவேண்டும். சில மாலைப் பொழுதுகளில்ää நிஸ்ஸங்க கேட்பார்ää

 

அய்ப்! மேக்க மொனவத..என்ன..இது.?

 

அது சேர்ää எஸ்எல்ஆர்ர  போஸைற் பிளேட். ஸேர்!.

 

மேக்க கொஹேத பிக்ஸ் கெரளாத்  தியன்னே..?

 

அது ஹேன்ட் சிலிப்புக்குப் பக்கத்துல.. ஸேர்.!

 

ஹரி..! இது..என்னடா..கியபாங்.!

 

அது  பட் பிளேட்டின் அடிப்பக்க ஹோர்ன்.  பொருத்தும் போதுää கொஞ்சம் தட்டிவிட்டுப் பொருத்தினா பிறகு பிரச்சினை தராது.. ஹரித ஸேர்..?

 

ஓவ்.. ஹொந்தய்.

 

ஸேர்.. எனக்கு ஒருக்காச் சுடத் தருவீங்களா ஸேர்..?

 

மோடயா.. மோடயா..

 

இது  பயரிங் பண்ண ஹரி ஆஸாவ ஸேர் மட்ட.

 

ஙாஹா.. அடோää அய்யுப்.. கொட்டி வாரது. நான் தாரது. எத்தக்கொட்ட நீ வெடிவக்கிறது..  ஹரித.?

 

ம்..  ஸேர்.

 

எஸ்எல்ஆரினால்ää சுட்டுப் பார்க்கவாவது ஒரு தாக்குதல் சம்பவம் நடக்காதா  என்ற ஏக்கம் அய்யுபுக்கு. விபரீதம் அறியாத விருப்பு..

()

 

           மரப்பலகையால்ää உறுதியுடன் அமைக்கப்பட்டிருந்த தனது அறைக்குள் தனது சீருடையைக் களைந்து கொண்டிருந்தார் நிஸ்ஸங்க. அய்யுப் அவரது கட்டிலிலிருந்தான்.  எஸ்எல்ஆர் துண்டுதுண்டாகக் கழற்றப்பட்டுக் கிடந்தது.   அய்யுப் அவற்றை ஒரு பூனைக் குட்டியின் இலாவகத்தோடு தொட்டுத் தொட்டு துடைத்து மெருகேற்றிக் கொண்டிருந்தான்.

 

அடோ அய்யுப்.  மம குளிச்சிட்டு வாரது.. தென்னம ரவுண்ட போறது. இண்டைக்கு மகே பேர்த்டே.. உம்பட்ட மம பாட்டி எக்க தாறது..

 

ஹரி ஸேர்.. குளிச்சிட்டு வாங்க.. நான் இதைப் பூட்டி வக்கிறன்..

 

அடோ.. புல்லட்ஸ்...

 

ஹரி..ஹரி..ஸேர்.  கவனமாயிரிப்பன்.. புல்லட்ஸை போடாம வெச்சிருப்பன் ஸேர்..

 

     நிஸ்ஸங்க துவாயுடன் குளிக்கப் போனார். அய்யுப் முதலில் எயார் கூளிங் ஹோலைக் கவனமுடன் துப்பரவு செய்து முடித்தான்.  அதை கவனமுடன் பரல்லுடன் பூட்டினான். பின் மெகஸின் கேஜைத் தளர்த்தி  மெகஸின் ஹவுஸ{க்குள் நுழைத்தான். கச்சிதமாகப் பொருந்தி  ;க்ள்ளப்;’ என்றது.  அப்படியே நிமிர்த்தி இரு தொடைகளுக்கும் நடுவில் வைத்து இறுக்கிப் பிடித்து ஹெண்டுலை பலமாக ஒருதரம் இழுத்தான்.  பின் போஸைட் பிளேட்டை உயர்த்தி சு இல்ää சேப்ரிகார்ட்டை வைத்தான்.  இப்போது எஸ்எல்ஆர் சுடுதற்குத் தயார்.

   

     ஆச்சரிய ரஸ்ய நிபுணத்துவம். அய்யுபுக்கு முகம் முழுக்கப் பெருமிதம்  துப்பாக்கியை எடுத்து முழங்காலில் நின்று கொண்டு போஸைட் பிளேட்டின்  ஊடாகப் போஸைற்  டிப்பைப் பார்த்தான். சட்டென நிஸ்ஸங்க வந்து நின்றபோதுää துப்பாக்கியின் மசல் முனை அவரது மார்பைச் சரியாகக் குறி பார்த்தது.  நிஸ்ஸங்க வெலவெலத்துப் போனார்.

 

மோடயா..ஹ{த்தோ.. மொகத்த மேக்க..?

 

ஹி..ஹி.. சும்மா குறி பாத்தன் ஸேர்.. நிக்கங்..நிக்கங்..

 

மோடயோ வெப்பன் எண்ட் வைப் பாடங் தெரியாது..?

 

தெரியிம் ஸேர்..  ஆய்தமும் பொண்டாட்டியும் ஒண்டு. ரெண்டயிம் வேறாள்க்கிட்ட கைமாறக் கூடாது. அது துரொகய..  ஏக்க    ஹஹரி மோட வெட ஸேர்.

 

ஹொந்தய்.. பளயாங்.. மோபைக் கொண்டு வாரது..

 

     அய்யுப் துப்பாக்கியை எடுத்துää அதன்ää கெச்சிங் ஹெண்டிலை பலமாக மூன்று தரம் இழுத்தான்.  மெகஸின் கேஜை அழுத்தியதும்ää மெகசின் பெட்டி இலேசாக வந்தது. அப்படியே கட்டிலில் வைத்தான். பின் வெளியே வந்தான்.  நிஸ்ஸங்கவின் மோபைக்கை எடுத்தான்.  பெற்றோல் டாங்க்கைத் திறந்து பார்த்தான்.  தள்ளிக் கொண்டு வந்து காவலரண் வாசலில் வைத்தான்.  காவலரணில்ää கடமையிலிருந்த கான்ஸ்டபிள்கள் பொடிமஹத்தயாவும்ää ஜயந்தவும் இவனை மிக எரிச்சலுடன் பார்த்தார்கள். விளங்கக் கஸ்டமான நாட்டுச் சிங்களத்தில்ää  பொடிமஹத்தயா இவனிடம்ää

 

அடோ அய்யுப்..!  கோழிக்கள்ளன் நிஸங்கவக் கூட்டிப் போய் தங்கச்சிய    கூட்டிக் குடுடா..

   

அய்யுபுக்கு அந்தச் சிங்களம் விளங்காவிட்டாலும் பக்கத்திலிருந்த ஜயந்த சிரித்த சிரிப்பில் இது விளங்கியது. ஜயந்தவும்ää தன் பங்குக்கு நாக்கினால்ää இதை விளங்கப்படுத்தி தூஸணம் காட்டிää குக்குளா..குக்குளா.. என்று சொல்லிவிட்டுää கோழிக்கு தம்பிலா பொடிகாட்;.. தம்பிலாக்கு கோழி பொடிகாட்.. என்று கூறää இருவரும் சத்தமிட்டுச் சிரித்தனர்.ää  உடன் அய்யுப் கோபமுற்றுää தனது நாட்டுத்தமிழில்ää சத்தமாகää

 

-சீனாப்பூனா மக்களே.. புலிப்பட வந்தா குசுப்பறக்க அம்மாமாருட்ட ஓடுவீங்க. ஏலாத ;வையாச் சிங்.’.  நாய்ஹளுக்கு கத மட்டும் பெருசி..        என்றான் உஷ்ணக் குரலில்.

 

இந்தத் தமிழ் விளங்காத பொடிமஹத்தயாவும்ää ஜயந்தவும் மிகக் கோபப்பட்டுää “மச்சான் மெ பற வேசி வள்ளா பொளக் காறயா அப்பிட்ட வென்னாத..?”  என்று கடுகடுத்தபடியேää காவலரனை விட்டுவெளியே வந்துää அய்யுபின் ஊர்காவற் காக்கிச் சட்டையை நெஞ்சோடு சேர்த்து இறுக்கிப் பிடித்து  அறையக் கையோங்கää

 

சட்டென நிஸ்ஸங்க வெளியே வந்தார். உடனே பொடிமஹத்தயா அப்படியே அய்யுபை ஆரத் தழுவிச் சிரித்தான். நிஸ்ஸங்கவிடம்ää

 

ஸேர்.. அய்யுப் அபிட்ட ஹொந்த யாளுவா.. சேர்..

 

என்று சொல்லிச் சிரித்தான்.  ஜயந்தவும் சிரித்து ஒவ்ஒவ் என்றான்.. நிஸ்ஸங்க புன்னகையடன்ää அய்யுபைப் பார்த்துää

 

ஹரி..ஹரி.. யாளுவா தெண்ட சைக்கிளயக்..

 

நிஸ்ஸங்க மோபைக்கில் அரைவட்டமாகக் கால் விரித்து ஏறினார்.  எஸ்எல்ஆரை அய்யுபிடம் கொடுத்தார். நகிண்ன” என்றார்.  அய்யுப் பின்னால் ஏறää ஒரே உதையுடன்  எஞ்சின் உறுமி;ச் சத்தமிட்டுää சட்டென கிளச்சிலிருந்து விடுபட்டுää வேகமாய் நகர்ந்தது.  காவலரணைக் கடந்த போதுää பொடிமஹத்தயாவும்ää ஜயந்தவும்ää நிஸ்ஸங்கவுக்கு சல்யூட் செய்து விறைத்து விட்டுää அதே கையால்ää பின் பக்கமாக அய்யுபிடம் விரல்களர் படுமோசமாக பாலியல் சேட்டை செய்து காட்டினர்.

 

சேர்ää பொடிமாத்தியாவும்ää சயந்தவும் கீள்சாதி வள்ளோ ஸேர்..

 

ம்ஹ்.. மன் தெக்கா.. கண்ணாடிவளின் வெலுவா.. ஓக்க பஸ்ஸ வலமு..  அடோ அய்யுப்! தன் நிக்கங் கட்ட வஹலா எனவாதமுக்கியங் வேல ஒண்டு செய்யப் போறது..

 

முக்கிய வேலயா.. என்ன ஸேர்..புலிப்பட வெருதா?

 

வஹண்ட கட்ட.. அய்யுப்.. இதிங் டெலஸ்கோப்  கெனாவத புத்தே..?

 

ஒவ்..ஸேர்..

 

எஹனம் ஹரி.

 

     மோபைக்  உறுமியபடி பிள்ளையார் கோயில் பிரகாரம் ஊடாக ஓடி கிறவல் வீதியில் ஏறியது.  மீண்டும் வலப்பக்கம் ப10மரச் சந்தியால் திரும்பி ஓட..  சனங்கள் ஒன்றிரண்டு தென்பட்டனர். மாஞ்சோலையின் சொற்பச் சனத் தொகையினர்.  குக்கிராமக் கடைத் தெருவைத் தாண்டியதும்ää ஒரு தனிக் கடையருகே மோபைக் இஞ்சினை நிறுத்தாமல் நின்றது.  நிஸ்ஸங்க  பி;ன்னாலிருந்து பேர்ஸை எடுத்துää அதன் ஷிப்பை இழுத்துää புத்தம் புது நூறு ரூபா நோட்டை நீட்டினார்.

 

சிகரட் பக்கட் எக்குய்ää  பிளேன் சோடாக்குய் கெணன்ன! இக்மன்ட..

 

     அய்யுப் மிகுதிப் பணத்தை தானே வைத்துக் கொண்டான். கேட்கவே மாட்டார். மேலும் ஒரு மைல் தூரம்ää உட்புற வீதிகளில் ஓடியதும்ää குடியாட்டங்கள் அதிகமற்ற இடத்தில் மோபைக் நின்றது.

 

இது வம்மியடி! தூரத்தே புன்னலைப் பற்றைக் காடுகள்.  உயர்ந்த மஞ்சோனா மரங்கள்.. வழி நெடுக முட்களுடன் மஞ்சட்பூக்கள் காட்டும்ää  முசுறுப் பற்றைகள். வண்;டிப் பாதை வழித்தடம்.. உயர்ந்து கிளைகள் பரப்பி பெரு விருட்சமான ஆலை மரம்.. அதில்ää அப்பிப்படர்ந்திருக்கும் ஒட்டுண்ணிக் கொடிகள்.. பக்கத்திலிருந்து உடனடியாகத் தொடங்கிப் பரந்திருக்கும் வயற் புரண்கள்.. இங்கொன்றும் அங்கொன்றுமாய் விவசாய வாடிகள். ஒதுக்குப் புறத்தில் பொதுக்கிணறு.  அதில்ää க.தெ.பி.ச. 1982. அரை மைல் தூரத்தே வற்றிய வாய்க்காலையும்ää கிறவல் பாதையையும் இணைக்கும்  ஒற்றைப் பாலம்..  சன நடமாட்டத்தைக் காணவில்லை. எனினும் இருவருக்கும் தெரியும்.. தூரத்து வாடிகளிலிருந்து சனம் இவர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். வெளியே வரமாட்டார்கள்.

 

மிக இதமாக சிலுசிலுவென்று காற்று வீசியது.. நிஸ்ஸங்க கீழே இறங்கினார்.. இடுப்பிலிருந்த பிஸ்டலை மோபைக் சீற்றில் வைத்தார்.. பக்கப் பெட்டியைத் திறந்தார்.  ஒரு போத்தலை வெளியே எடுத்தார்..  ஓஹ்..! ஓல்ட் அரக்.. பொன்னிறத் திராவகம்.. கண்டதுமே அய்யுப் உற்சாகமானான். நிஸ்ஸங்க ஒரு புன்னகையுடன் அய்யுபைப் பார்த்தார்.. பின் வெகு சாதுர்யமாக போத்தலைத் திறந்தார்.  அய்யுப் விரைவாகப் பக்கப் பெட்டியைத் திறந்து கிளாஸை எடுத்து நீட்டினான்.  நுரை எழா வண்ணம் சாய்த்து ஊற்றியதும்ää அய்யுப் பிளேன் சோடாவைத் திறந்து அதனுள் ஊற்றினான்..

 

அடோ.. இளந்தாரியோ.. எடு அப்பா சாராயங்..

 

     நிஸ்ஸங்க கிளாஸை உயர்த்தி;ச்  ;சியர்ஸ்’ என்றார்..  அய்யுப் சிரித்து விட்டுää போத்தலோடு அப்படியே வாயில் மளுக்கென்று ஒரு பெரிய மிடறு விழுங்கினான்.  தொண்டையில் தீப்பற்றிக் கசந்துää வெந்நீராய் வயிற்றில் இறங்கியது.  அவனது முகத்தின் அஷ்ட கோணலைக் கண்டு நிஸ்ஸங்க சிரித்தார்..

 

ஹரியட்ட வூறுவாகே தமய்..

 

நிஸ்ஸங்க ஆறுதலாய் ஒரு தரம் குடித்து விட்டுää  மறுபடி சோடாவைக் கலந்து மடக்கென விழுங்கினார்.. அய்யுப் சிகரெட்டை எடுத்து நீட்டினான்.. அதைப்பெற்று வாயில் வைத்துக் கொழுத்தி ஆழமாக இழுத்து நீளமாகப் புகை விட்டார்.. இருவரும் நடந்து சென்று பொதுக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஏறி உட்கார்ந்தனர்.. நிஸ்ஸங்க தனது பிறந்த நாளை ஒட்டி மிகச் சந்தோஸமாக இருந்தார்.. தன தொலைநோக்குக் கருவியினூடாகச் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தார்.. திடீரென உச்சக்குரலில் பாடினார்.

 

மாகே..ஏ..லஸ்ஸனே.. மல்..மல்.. கெல்லொ..ஓ...

 

அய்யுப் எஸ்எல்ஆரின் தடுப்புக்குதிரையை விடுவிக்காமல் சும்மா  பறவைகளைக் குறிபார்த்து கற்பனையில் சுட்டுக் கொண்டிருந்தான்.. மாலைச் சூரியன் கதிர்கள் உஷ்ணமிழந்தன..  மணி 5:40 என்றது.. நிஸ்ஸங்க பாடலை நிறுத்தினார்.. அய்யுப் எஸ்எல்லாரை கிணற்றில் சாய்த்து வைத்து விட்டுää மறுபடியும் போத்தலை எடுத்து நீட்டினான்.

 

அய்யுப்.. நாம வாறது.. ஒரு மெஸேஜ் வந்தது.. கொட்டிநாயக்கா எக்கனக் மெ பத்தன் தன் எனவா  கியலா.. தேருனாத..?

 

புலிப்படத் தலவரு வருவாரா ஸேர்.. எந்த மடயன்மெஸேஜ் தந்த.. இப்பிடித்தான் கூப்பிட்டுää பண்டார மாத்தையாவையும் புலி சுட்ட..

 

அதுக்கு முந்தி நீ எஸ்எல்ஆர்  வெடி தாண்ட..

 

ஹரி..ஸேர்..

 

நிஸ்ஸங்க மறுபடியும் குடித்து விட்டுத் தொலைநோக்கியூடாகக் குறித்த ஒரு இடத்தையே அடிக்கடி பார்;த்தவாறிருந்தார்.. பாலத்தின் அடியில் எதைப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை..  அய்யுபுக்கு மெதுமெதுவாகப் போதை ஏறிக் கொண்டிருந்தது.  பேசாமல்ää  புதிதாகக் காதலில் விழுந்து விட்ட தன் தங்கை பாயிஷாவைப் பற்றி யோசித்துக் கொணடிருந்தான்.  நாலைந்து நிமிடங்களின் பின் நிஸ்ஸங்க சற்றுப் பதட்டமானார்..

 

அடோ..அய்யுப்.. மே டிக்கக் வலண்ண..

 

அய்யுப் தொலைக்காட்டியை வாங்கி அதனூடே அவர் பார்த்த திசையில் பார்த்தான்..  தூரத்துப் பாலம் அருகே வந்தது.. தெளிவானது.. பாலத்தின் மீது இரண்டு சிறுவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்..

 

மொக்கத்த வலண்னே..?

 

ரெண்டு பெடியனுகள் ஸேர்..

 

கொட்டி நெத்த..?

 

ல்ல ஸேர். ஆய்தம் ஒண்டும் ல்லையே.. சும்மா சின்னப் பொடியனுகள்..

 

பிஸ்ஸ_த..கொணா..  ஹொந்தட்ட வலப்பாங்..

 

மறுபடியும் உற்றுத் தொலைநோக்கினான்.. இம்முறை   பாலத்தின் கீழே ஒரு பருவச் சிறுமி தெரிந்தாள். வெறும் உடுத்தாடையுடன் தெரிந்தாள்.. பாலத்தின் மேலிருந்த இரு சிறுவர்களும்ää எதையோ தேடித்தேடிப் பொறுக்கிக் கொண்டிருந்தனர்.. நிஸ்ஸங்க எதைப் பார்த்தார் என்று புரியவில்லை.

 

அடோ..அந்தப்பொம்புளபாக்கிறதா..தன் தெக்க வலனவாத மோடயா..?

 

அய்யுப் புன்னகைத்தபடியே மறுபடி கூர்மையாகப் பார்த்தான்.. சற்றே போகஸ் செய்து பார்த்தான்.. சிறுமி மிகமிக அருகில் தெரிந்தாள். ஒரேயொரு சிறிய உடுத்தாடை அணிந்திருந்தாள்.. ஒரு சொற்பத் தண்ணீரில்ää தன் மற்றச் சட்டையை பிழிந்து கொண்டிருந்தாள்.. கறுப்பாகத் புஷ்டியாகத் தெரிந்தாள்.. தங்கை பாயிஷாவைப் போலவே இருந்தாள்.. ஆனால் கறுப்பு.. நெற்றியில் ஒரு சின்னக் கறுப்புப் பொட்டும் தெரிந்தது..  வளர்நிலை மார்பகம் முன்நீட்டித் தெரிந்தன.. சட்டென நிஸ்ஸங்க தொலைநோக்கியைச் சுண்டிப் பிடுங்கினார்..

 

அடோ எளந்தாரி.. பொம்புள பாக்கிறது..  ஒலுவ சூட் பண்றது..

 

என்ற நிஸ்ஸங்க பிஸ்டலை எடுத்து அய்யுபின் நெற்றியில் வைத்து அழுத்தினார்.. குடித்திருக்கிறார்.. பயத்துடன் சிரித்தான் அய்யுப். நிஸ்ஸங்கவும் சிரித்து விட்டு கைத்துப்;பாக்கியை இடுப்பில் சொருகி விட்டுää மறுபடி தொலைநோக்கியூடாகப் பார்த்தார்.  சிறுமி உடுத்தாடை அவிழ்ப்பதைப் பார்க்கிறாரா..?

 

அய்யுப்.. சிகரெட் எக்க தீப்பாங்..

 

அய்யுப் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொளுத்தி அவரிடம் நீட்டினான். அவன் புகைப்பதில்லை..  சட்டென நிஸ்ஸங்க  கைப்பிடிச் சுவரிலிருந்து குதித்தார்.. கொஞ்சம் தீவிரமாக யோசித்தார்.. இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துää முறித்துää உள்ளே குண்டுகளைச் சரிபார்த்தார்.. பின் ;சடக்’ கெனப் ப10ட்டி ;ஸேப்டியில் தள்ளி இடுப்பில் சொருகினார்.. எஸ்எல்ஆரை எடுத்துää அய்யுபிடம் கொடுத்தார்.. மஹா கர்வமுடன் அதை தோளில் அணிந்து கொண்டான்.

 

மெ அய்யுப்.. மம  எஹாப் பத்தங் கிஹிலா  தவ பொட்டக்கிங் என்னங்.. உம்ப மெத்தனமே இண்ட.. மகே. ஹண்ட அஹன்னக்கங் மகே பத்தட்ட என்ட எப்பா.. ஓணனங்  மங் கதாகரனவா.. தேருனாத..?

 

ஹரி ஸேர்.. உங்கட சத்தம் கேட்குமட்டுக்கும் இந்த இடத்த  உட்டு அசயமாட்டன்.. செரிதானே  ஸேர்..?

 

பொஹோம ஹரி.. ந்தா சாராயங் இரிக்கிறது. அடிச்சிட்டு சும்மா இருக்கிறது.. நான் வாரது.. |

 

ஹரி ஸேர்.. குடிச்சிருக்கீங்க.. கவனம்.. நான் இருக்கன். கிஹிலா என்னங்கோ..ஸேர்..

 

     நிஸ்ஸங்க விரைந்து சப்பாத்துகளைக் கழற்றி விட்டுää வெறுங்காலுடன்   புன்னலைப் பற்றைகளுக்குள் புகுந்தார்.. மாலை மங்க்சூரியன் செந்தணலில் தெரிந்தது.. சற்று நேரத்தில். அவர் பாலத்தை நோக்கி மறைந்து பதுங்கிச் செல்வது கோரைப் புற்களின் அசைவில் தெரிந்தது..  பின் அசைவும் நின்றது.. மெதுவாக முன்னேறுகிறார் போல.. நிஸ்ஸங்க நெஞ்சுறுதிமிக்கவர்.. இலேசில் பயப்படமாட்டார்.. ஆனால்ää குடித்திருக்கிறார். அய்யுப்  சற்றுக் கவலையுடன்  தன் எஜமானன் போன திசையைத் தொலைநோக்கியூடாகப் பார்த்து கொண்டிருந்தான்.. பின்ää தொலைநோக்கியை வைத்துவிட்டுää பொன்னிறத் திராவகத்தை எடுத்துää மறுபடியும் ஒரு மிடறு விழுங்கினான்.. போதை ஏறத் தொடங்கியது... உற்சாக உலகின் திரைகள் விலக ஆரம்பித்திருந்தன..  உலகின் தனிப் பெரும் கதாநாகனாக எஸ்எல்லாருடன் அய்யுப் விளங்கினான்.. கொஞ்சம் சிரிப்பு வந்தது..  தங்கை பாயிஷாவின்கவலை கொஞ்சம் மறைந்தது..

 

     மறுபடி தொலைநோக்கியை எடுத்துப் பார்த்தான்.. சிறிது பதட்டமானான்.. எஸ்எல்ஆரை இறுகப் பற்றினான். நிஸ்ஸங்கவை காணவில்லை..  அவர் போன வழியில்  காட்சியைத் தொடர்ந்தான்.. பாலம் பெரிதாக முன் வந்தது.. சிறுவர்களைக் காணவில்லை.. கீழேää சிறுமியையும் காணவில்லை..  நெஞ்சு துணுக்குற்றுää  கிணற்றின்ää கைப்பிடிச் சுவரின் மீது ஏறினான்.. தெளிவாக்கியை இழுத்துப் பார்த்....

 

     காணக் கூடாத காட்சியைக் கண்டான்.. என்னது.. உண்மையா.. விழிகள் விறைத்தன.. உண்மைக் காட்சியில் உறைந்து போனான்.. அந்தச் சிறுமி முழு நிர்வாணமாக மரத்தில் சாய்ந்து நின்றபடி பீதி கக்கும் விழிகளால்  எதிரே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவள் எதைப் பார்க்கிறாள் என்று தெரியவில்லை.. அய்யுப் சட்டென கைப்பிடிச் சுவரிலிருந்து குதித்தான்.  முன்னால் ஓடினான்.. சாய்ந்திருந்த தென்னம் வேரில் பாய்ந்தேறினான்.. மறுபடி நோக்கினான்..

 

     இப்போது எல்லாம் தெளிவாகத் தெரிந்தன.. அந்தச் சிறுமி  தன் இரு கைகளையும்ää  தொடைகளுக்கு மத்தியில் வைத்து மறைத்துக் கொண்டு  ஏதோ சொல்லித் தலையை ஆட்டுகிறாள்.. நிஸ்ஸங்க அவளின் எதிரே நின்று கொண்டுää கைத்துப்பாக்கியை நீட்டியபடியே  அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டு நெருங்குகிறார்.. சட்டென அவளின் கையைப்பற்றி இழுக்கிறார்..  ஒரு கோழிக்குஞ்சின் பீதியுடன் அவள் அவரருகே இழுபட்டு வரää நிஸ்ஸங்க  சிறுமியின் வயிற்றில் முழங்காலால் இடிக்கிறார்.. அவள் மானத்தை விட்டு வயிற்றைப் பொத்தியபடிää கீழே விழ.. அவர் அவசரமாக சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு. சட்டெனக் குனிந்து கைத்துப்பாக்கியை அவளின் தலை மீது வைத்து அழுத்திக் கொண்டுää மறு கையினால் அவளது கன்னத்தில் அறைகிறார்..

 

     அய்யுப் விதிர்விதிர்த்துப் போய்  தொலைநோக்கியூடாகப் ப பார்த்துக் கொண்டே.. அடி வயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்தினான்..

 

ஙா..ஆஆ..எப்..பாஆஆஆ ஸே..ர்..!

 

சட்டெனக் கீழே குதித்தான். ஒரே  தாவில் புன்னலைப் பற்றைக்குள் பாய்ந்தான். உருண்டு எழுந்தான்..  வாய் நிறையச் சுவாசித்துää மூச்சிரைக்க ஓடினான்.. பழக்கமில்லாத வழியில் பதட்டமாக ஓடித் தடுமாறி ஆயினும் ஓடி பாலத்தின் மீது பாய்ந்தேறினான்.. அதன் இரும்புக் கைப்பிடியின் மீது வயிற்றைக் கொடுத்துச் சாய்த்தபடி கீழே  பார்த்தான்..

 

     இப்போதுää நிஸ்ஸங்க சிறுமியை முழங்காலால் அழுத்தியபடி ஒரு கையால் தன் காற்சட்டையை கீழே இழுத்து விட்டு மிக அவசர கதியில் அச்சிறுமி மீது வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தார்..

 

-ஹா..ய்..ஹ{...!  எப்பாஆ..ஆ.. ஸே..ர்..!

 

அய்யுப் ஒரு அபாயப் பாய்ச்சலில்ää  கீழ்ப்புறமாக  பதினைந்தடி குதித்தான். உண்டு சட்டென நிதானப்பட்டுää  அவர்களை நோக்கி ஓடி வந்தான்.. அய்யுபைக் கண்ட நிஸ்ஸங்க ஆத்திரம் பொங்கää

 

அடோ..ஹ{த்திக்க புத்தோ..பளயாங்..பளயாங்.!    என்று கத்தினார்.. ஆனால்ää அய்யுப்  சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில்ää வர-

 

சட்டென எழுந்த நிஸ்ஸங்கää கைத்துப்பாக்கியால்ää சிறுமியின் தலை மீது மிக இரக்கமின்றிச் சுட்டார்.. கூந்தல் பிய்ந்து தலை வழியாகää சிவப்புத் துண்டங்கள் வெளிப் பறந்தன..  அதே வேகத்தில்ää திரும்பிää  வெறியுடன் ஓடிவந்த அய்யுபை நோக்கி

 

உம்பத் பள்ளயாங் ஹ{த்தோவ்..!

 

என்று கத்திக் கொண்டேää கைத்துப்பாக்கியை நீட்...டியää  சரியாய் அதே கணத்தில்ää அய்யுப்ää மின்னல் வேகத்தில்ää எஸ்எல்ஆரை உயர்த்திää  ஒரே குறியில்;;.. அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.

 

இலங்கைää பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை.கீதம். 1999

 

 

 

 

No comments:

Post a Comment