Friday, October 27, 2023

விட்டு விடுதலையாகி..(வெள்ளிவிரல்-சிறுகதை-4)

  விட்டு விடுதலையாகி..

 

இங்கே..ää

  பூமியில்ää ஆசியாக் கண்டத்தில்ää இலங்கையில்ää கொழும்பில்ää பழைய டப்ளியு பெரேரா மாவத்தையில்;ää 1862  இலக்க அறையில்ää கணிணி முன் உட்கார்ந்துää தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் பற்றிச் சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்... இப் பெருவெளிச் சுழற்சி முடிவடைந்துää இதனைவிட்டு விடுதலையாகி விட மட்டும்... இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைநகரில்ää ஒரு இராணுவ உயர் அதிகாரியைக் குறி வைத்து வெடித்துச் சிதறவிருக்கிறேன். உலகில் வாழும் கடைசி மணித்துளியில்ää ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..கதைக்கு விட்டு விடுதலையாகி என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் முற்றும் போடவில்லை. ஆனால்ää இலக்கை நெருங்கும் நேரம் நெருங்குகிறது.

 

என் நேரமும் என் விதியும் என்னை அழைத்தன. எழுந்தேன். சிறுகதை இன்னும் எழுதி முடியவில்லை. ஆயினும்ää ஆயத்தமானேன். தற்கொலை அங்கியை அணிந்தேன்.  பயனித்தேன்.. இடத்தை அடைந்தேன். இலக்கை நெருங்கினேன். எனக்கான சமிக்ஞை கிடைத்ததும்ää  முழு மூச்சுடன் உந்திப் பாய்ந்தேன். என்னை ஏற்றி வந்த வாகனச் சாரதி.. இலக்கு வைக்கப்பட்ட இராணுவத்தளபதி.. அவரது காவலர்கள்.. செருப்புத்தைக்கும் தொழிலாளி.. பள்ளி மாணவி.. கர்ப்பிணிப் பெண்ணொருத்தி.. தெருப்பிச்சைக்காரன்.. பாதையில் விரையும் மனிதர்கள்... எவரைப்பற்றியும் யோசிக்க எனக்கு சொல்லித்தரப்படவில்லை. ஒரு எக்காளப் பேரிடியொலி இறுதியாகச் சிதறிய எனது காதுகளில் கேட்...

 

 ()

அங்கே...

 

ஒரு ஏகாந்தப் பெருவெளியில்ää வெற்றிடத்தில் மிதந்து கொண்டிருந்தேன் நான்.  மேலே என்றும் சொல்ல முடியவில்லை. கீழே என்றும் சொல்ல முடியவில்லை. ஓளி இல்லை. இருள் இல்லை. காற்று இல்லை. உஷ்ணம்ää குளிர் இல்லை. பொதுவில் எந்த ஒரு சுற்றுப்புறச் சூழலுமே இல்லை. ஏகாந்தப் பெருவெளி! நானே வெளி” ஆகியுமிருந்தேன். ஒருதனியான ஏகாந்த வெற்றிடத்தில் தரித்திருந்தேன். ஆனால்ää எனது உடம்பைக் காணவில்லை. அது ப10மியில்ää  ஒருமரத்தில்ää தலைப்பகுதி ஒரு கிளையிலும்ää ஒரு கையும் மார்பின் சிறு  பகுதியும் வேறொரு கிளையிலும் தொங்கிக் கொண்டிருந்தன. நான் இருக்கிறேன் என்றுணர்ந்தேன்;. உயிருடன் இருக்கிறேன் என்றும் மனம் சொன்னது. ஆனால்ää உடம்புடன் இல்லை என்றும் புரிந்தது. உடம்புதான் ஒரு கணத்தில் வெடித்துச் சிதறி விட்டதே. ஒருகணக் குழப்ப நிலையின் பின் என்னுடைய சில புலன்கள் மட்டும் கூர்மையாகின. உமது பார்வையைக் கூர்மையாக்கி விட்டோம்..” என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரென்று தெரியவில்லை. ஒலியாகக் கேட்டதா.. அல்லதுää வசனங்கள் உணர்வில் பதிந்ததால் மொழி புரிந்ததா என்று நிர்ணயிக்க முடியவில்லை. நன்றாக உற்றுணர்ந்து பார்த்த போதுää சம்பவங்கள் கனவு போல ஞாபகத்தில் மெல்லியதாக தெளிவாகின.

 

 

ஒரு கணம்முன்னர் நான் வாழ்ந்த  உலகம் வேறு இந்த உலகம் வேறு என்று விளங்கியது. என்ன உலகம் இது..ää? இதுதான் நிரந்தர உலகமா..ஒரு கணத்தின் முன் நான் வாழ்ந்த ப10மியை கோடானுகோடிக் கிரகங்களையும் தாண்டிப் பார்த்தேன். இப்போது  பூமியின் சகல காட்சிகளும் தெளிவாகத் தெரிந்தன. பூமியில் தொலைக்காட்சி பார்ப்பதைப் போல ப10மியையே ஒரு தொலைக் காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ப10மியின் எந்தப் பகுதியையும்ää புரட்டிப் பார்க்கக் கூடியதாக இருந்தது. காலபேதமின்றிää  பூமியைப் புரட்டிப் புரட்டிää இரவு பகல்களைää இடி மின்னல்ää மழை பெருவெள்ளத்தை  பார்க்க முடிந்தது. பக்கத்துக் கோடிக் கிரகங்கள் விரைந்தோடும் காட்சிகள் தெரிந்தன. ஓடும் கிரகங்களின் வேகத்தில் எழுந்த ஒலி எல்லாம் கலந்து ஒரே ஒலியாக ஓங்காரமாகக் கேட்டன. கேட்டன என்று சொல்ல முடியாது.. கேட்பதாக உணர்ந்தேன். கோடிக் கிரகங்கள்.. கோள்களி;ல் சீறியெழும் இராட்சத நெருப்பலைகள் தெரிந்தன. உருகிப் பிரவாகித்துப் பெருவெள்ளமெனத் திரண்ட பனிக்கடல் தெரிந்தது.. எங்கெங்கு நோக்கினும் சக்தி” கொண்டு தத்தம் குடும்பத்தினரோடு அதி விசையாய் விரையும் கோடான கோடிச்சு10ரியன்கள்... எண்ணி முடிக்க முடியாத எண்ணிக்கையில்.. மாபெரும் ஆழிச் சமுத்திரங்கள் ஒரு துளி நீராய் கிரகங்களின் ஈர்ப்பால் ஒட்டிக் கிடந்தன.

 

இதுவரை கண்டேயிராத நிறங்கள்... நீலம்ää சிவப்புää பச்சைää மற்றும்ää  ஓளம்ää கடிதால்ää சுட்டிப்பு என்றெ ல்லாம் உலகத்தோருக்குத் தெரியாத இன்னும்.. இலட்சக் கணக்கான வர்ணங்களை வாரியிறைத்தபடி கோள்கள்.. கிரகங்கள்.. நட்சத்திரங்கள்.. உடுத் தொகுதிகள்.. ஏதோ சப்தம் தொடராகக் கேட்டபடியே இருந்ததாக எண்ணினேன். அதனால். உணர்வற்றிருந்தேன். தொலைக்காட்சியில்ää ஒலிமறிப்பான் (ஆரவந) போல இருந்தது. அதை விடுவிக்கச் சொல்லவும்ää விரும்பாது ஏன் அதற்காக  முயற்சிக்காது சும்மாவே பார்த்துக்கொண்டிருந்N;தன்..

 

 

()

 

இங்கே..ää

 

இலக்கைச் சரியாக இனம் கண்டு நான் நடத்தி முடித்திருந்த தற்கொலைத் தாக்குதலால்ää தலைநகர் அதிர்ந்தது. தலை தெறிக்க ஓடியது. வெடித்த சுற்றுச் சூழலில் மரண ஓலங்களுடனும் அலறல்களுடனும் மனிதர்கள் ஓடினர்.. வாகனங்கள் முண்டியடித்து முந்தியடித்துப் பறந்தன.. யாரோவெல்லாம் யாரைப் பார்க்கவோ ஓடினர்.. அழுதனர்.. தூக்கினர்.. இரத்த விளாறாய் மயங்கினர்.. தெளிவற்ற குரல்களில் பரபரப்பின் உச்சத்தில் கத்தினர். உளறினர்.. செல்லிடப் பேசிகள் ஒரே சமயத்த்pல் உயிர் பெற்றுப் பேசிச் செயலிழந்தன. முப்படைகளும்ää கட்டளை அதிகாரிகளின்ää தாறுமாறான கட்டளைகளின் படி  பரபரப்பாக ஓடியாடின. சிவப்பொளிர் தொப்பிகள் அணிந்த அம்பியூலன்ஸ் வண்டிகள்ää தீயனைப்பு வாகனங்கள் நீளமாய்க் கத்தியபடி பறந்து வந்தன. ஏற்றின.. இறக்கின.. தூக்கின.. நெருப்பணைத்தன.. உள்ளுர் அரசியல்வாதிகள் பாதுகாப்பான தூரங்களில் நின்று கொண்டு சிப்பாய்களை வேலை வாங்கினர்.. தாறுமாறாகப் பிய்ந்து தெறித்துக் கிடந்த மானுடத் துண்டங்களைப் பார்த்து வயிறு குமட்டினர். தம் மனைவியருக்கு நேர்முக வர்ணிப்புச் செய்தனர். பகல் சாப்பாட்டுக்கு இறைச்சி வேண்டாம் என்றனர்..

 

முக்கால் மணி நேரத்திற்கு தலைநகர வீதிகளில்ää ஒருவருக்கும் தலை சரியாக வேலை செய்யவில்லை. தத்தமது உறவினர் நண்பர் கதியறிய மக்கள் படையெடுத்துப் பாதையடைத்தனர்.. பாதைகள் மூடப்பட்டன. வாகனங்கள் திருப்பியனுப்பப்பட்டன. இனம் தெரியாத ஆட்களால் சுற்றிலுமிருந்த கடைகள் சந்தடி சாக்கில் உடைக்கப்பட்டன. காவலர் பயமின்றி;ää  பொருட்கள் கொள்ளை போயின. ஆஸ்பத்திரி வட்டாரங்கள்  உஷாரடைந்தன. அதி தீவிர கவனிப்புப் பிரிவில் கட்டில்கள் நிறைந்தன.. காயங்களுடனும்ää அரைகுறை உயிர்களுடனும் எழுந்த தீனமான ஒப்பாரி ஒலிகள்  வைத்தியசாலையெங்கும் அவலச் சத்தங்களாய் செவிகளைக் கிழித்தன. தாதிகள் புறாக்;களாய்ப் பறந்து திரிந்தனர்.. அத்தனை வைத்தியர்களும் அதி விரைவில் வந்திறங்கி அதிசயிக்க வைத்தனர்.  சின்னக் காயங்கள்பட்டோர்ää வெளிச்சிகிச்சை பெற்றுää  சாட்சி சொல்லப் பயந்து வெளியேறிப் பறந்தனர்.. தனியார் வைத்தியசாலைகள் காயப்பட்டோருக்குää திடீர் இலவச மருந்துகள் கட்டி மலிவான குளிகைகள் வழங்கிப் பேர் வாங்கின. எல்லாவகை மருந்துகளும் விலை உயர்ந்து பதுங்கின.

 

 

()

அங்கே...

 

தாக்குதலில் என்னோடு கூடவேää  உயிரிழந்த பதினைந்து பேரும்ää என்னுடனேயே இங்கே மிதந்து கொண்டிருந்தனர். எல்லாவற்றையும்ää என்னைப் போலவேää  பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களின் முகங்களைக் காணமுடியவில்லை. உடல்களும் இல்லை. ஆயினும் ஆத்மாக்களை அடையாளம் காண முடிந்தது. பூமியில் என்னை ஏற்றி வந்த வாகனச் சாரதிää.. இராணுவத்  தளபதி.. அவரது காவலர்கள்.. செருப்புத்தைக்கும் தொழிலாளி.. பள்ளி மாணவி.. கர்ப்பிணிப்பெண்ணொருத்தி.. தெருப்பிச்சைக்காரன்.. பாதையில் விரைந்த மனிதர்கள்... எல்லோரும் மிதந்து கொண்டிருந்தனர்.. ஆளடையாளம் காண முடியாவிட்டாலும்ää  உணரக் கூடியதாகவிருந்தது. ஆயினும்ää எவ்விதமான பய உணர்வும் இல்லை. நட்பும் இல்லை. எல்லோரும் சும்மா பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தோம்;. அல்லது விரும்பிய கிரகங்களில் விரும்பிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

 

தலைநகரின் வெடிப்புச் சம்பவம் ஏற்படுத்திய  அதிர்வுக் கணங்களை உணர்ச்சியற்றுத் தெளிவாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.. என்னைச் சார்ந்தவர்களின்ää தற்கொடைப் போராளிகட்கான வீர வணக்கமும்ää என்னைச் சேர்ந்தவர்களின்ää பாசவெளிப்பாட்டுக்கானää ஒப்பாரி அழுகையும்ää இங்கே என்னைத் துளியும்பாதிக்கவில்லை. இரண்டு நிகழ்வுகளும் ஒன்றேää அதேசமயம்ää  இரண்டும் எனதல்லää என்று உணர்வு கூறியது. யாருக்கோ யாரோ அழுகிறார்கள்.. “..எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..” என்றுää மிக நிம்மதியாகவிருந்தது. பயங்கரக் கனவொன்றை விட்டும் விடுதலையாகி   இருந்தாற் போலிருந்தது.. யாருக்கும் எக்கவலையும் இல்லை. ஆயின்ää சந்தோஸமும் இல்லை. எதையும் யோசிக்கவோ செற்படுத்தவோ முடியாத வகையில் எதனாலோ கட்டுண்டதைப் போலிருந்தது.. விடுதலையும் தேவைப்படவில்லை. எனினும்ää எதற்கோ யாருக்காகவோ காத்திருப்பதைப் போலுமிருந்தது. அதுவரைக்கும்ää சும்மா பூமியைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிரää எங்களுக்குää வேறு எவ்வேலையும் இருப்பதாகத் தோன்றவில்லை.

 

()

 

 

இங்கே..ää

 

அரச திணைக்களங்கள் அக்கணமே வெறிச்சோடின. அலறிய தொலைபேசிகள்ää ‘அழைப்பி’ லிருத்தப்பட்டன. அரச ஊழியர்கள்ää கடமை நேரத்தைக் களவெடுத்த திருப்தியுடன்ää கடுகதியில்ää வீடு திரும்பி மனைவி பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்தினர். தம்முடைய சமயோசித மூளையால்தான் தாம் தப்பியமை பற்றிப் பேசி அதிசயிக்க வைத்தனர். இன்னும் மூன்று  நாட்களுக்குத் தமக்கு விடுமுறையென தாமாகவே அறிவித்து மகிழ்ந்தனர். தனியார்கள் தாளாத மனத்தாங்கலுடன்ää தட்டிகளை இறக்கி மூடினர். வங்கிகள் தம் பணவெள்ளத்தை நிறுத்தின. திகதியிட்ட காசோலைகள் சிரித்தன. ஊடகங்கள் செய்தியை  தத்தம் கொள்கைகளுக்கேற்ப ஊதிப் பெருப்பித்துப் பரப்பின. நேரடி வர்ணிக்க வந்தவர்கள் தம்மையே நெடுநேரமாய் காண்பித்து வெறுப்பேற்படுத்தினர். .கமராக்காரர்கள் சந்தடி சாக்கில் அழகான பெண்களைத் திருட்டுத்தனமாக காட்சிப்படுத்திப் பார்க்க வைத்தனர். சம்பவ இடத்தைக் காண்பிக்காமல் அரசியல்வாதிகளைக் காட்டினர்.

 

வதந்திகள் வாய்த்தந்திகளில் பறந்தன. வானொலிகள் சூடான செய்தியை சுடச்சுடப் பரிமாறின. அடுத்த கணமே சம்பந்தா சம்பந்தமற்ற சினிமாப் பாட்டுக்களைää நேயர்கள்ää  இலங்கையின் அரைவாசிச் சனத் தொகையின் பெயர்களைக் கூறிää போதாதென்றுää மற்றும் அப்பா அம்மா அக்காவுக்கும்ää மற்றும் நண்பர்களுக்கும்ää மற்றும் அறிவிப்பாளருக்கும்ää மற்றும் கலையுலக நண்பர்களுக்கும் விரும்பிக் கேட்டனர்.  குண்டு வெடிப்பையும்ää தமது கண்டு பிடிப்பையும் பொறுப்புணர்வற்றுப் பொது ஊடகங்களில்ää பேசினர்.. இணையத் தளங்கள் யாவும் முடுக்கப்பட்டு  வெடி தளத்தைக் காட்சிப்படுத்தி காசு வாங்கின. பத்திரிகைகள்  எனது சிதறிப் பறந்த தலையை இரத்த விளாறாகப் படம் பிடித்து  இந்தத் தற்கொலையாளியை அடையாளம் தெரிகிறதா.?” என்று கேட்டன  தகவல் தருபவருக்கு இரண்டு இலட்சம் சன்மானம்!” என்றன.. மாற்றுக் கருத்துப் பத்திரிகைகள் பாதுகாப்பில் ஓட்டை! மேலும் நூற்றி இருபத்தேழு தற்கொலைதாரிகள் நகருக்குள் உள்ளனர்.?” என்று சந்தேகம் தெரிவித்தன. துரித பொலிஸ் விசாரணைக்கு பாதுகாப்பமைச்சர் உத்தரவு!  என்றன.

 

()

 

அங்கே...

 

ஒரு எக்காள ஒலி போலக்கேட்டது. இதுவரையும் கேட்டேயிராத வாத்தியத்திலிருந்து அது வாசிக்கப்பட்டது. உடனேää எனது மூன்றாம் கண்ணும் திறந்து கொள்ள மஹா மைதானம் ஒன்று முதற் தடவையாகத் தெளிவாகப் புலப்பட்டது. மைதானத்தில்ää நான் கோடானு கோடிப் பேர்களுடன் நின்று கொண்டிருந்தேன். எனது வலது இடது பக்கங்களில்ää இரண்டுää பட்டோலைகள் முளைத்திருந்தன. அதில்ää புரிகிற எழுத்தில்ää என் சரித்திரமும்ää நான் தரித்து நிற்கும் இடமும் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தது. அடுத்த இடம் குறிப்பிடப்படவில்லை. ஏதோ எழுதப்பட்டிருந்தது தெரிந்தாலும்ää வாசிக்கவோää புரிந்து கொள்ளவோ முடியவில்லை. அப்பட்டோலைகளைச் சிறகுகளாகக் கொண்டு மைதானத்தின் மத்தியிலிருந்த மாபெரிய தராசில் அமர ஆவலுடன்ää அசைந்தேன்  .அதுவும் என் வசத்திலில்லை எனப் புரிந்தது. எனக்கான முறை வந்து நான் அழைக்கப்பட்டு விஸாரணைகள் முடிந்துää கணக்குத் தீர்க்கப்படும் மட்டும் காத்திருக்க வேண்டியிருப்பதாகத் தோன்றியது.

 

இனி ஒன்றும் செய்வதற்கில்லை. “..நமக்குமது வழியே நாம் போகுமட்டும்..” சும்மா மிதப்பதை விட வேறென்ன வேலை..?  கோடானுகோடிப் பேர்கள் வரிசையில் மைதானத்தில்ää மிதந்து கொண்டிருக்க திடீரென  எனது நாமம் என் தந்தையின்ää பெயரோடு சேர்த்து அழைக்கப்பட்டது. மறுபடியும்ää அந்த எக்காள ஒலியில் என் உயிர் நடுநடுங்கி அச்சமுற்றுப் பரிதவிக்கää  நான் தராசின் முன் கொணரப்பட்டேன்.. என்னிரு பக்கங்களிலும்ää சிலர் ஒளி வண்ணத்தில் நின்று கொண்டிருந்தனர். மறுபடியும் என் பெயர் மும்முறை  யாராலோ உச்சரிக்கப்பட்டது. உடன்ää என் விசாரனை தொடங்கிற்று. என் முயற்சிகளின்றி என் வாக்குமூலம் பதிவாகிகொண்டிருந்தது. என் அந்தரங்கää பகிரங்க செயல்களும்ää என் நல்லää தீய நினைவுகளும் கூட என்னாலேயேää ஒப்புவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றில்ää  ஒரு  குற்றெழுத்துக் கூட மாற்றமில்லை. யாவும் உண்மையே.

 

திடீரென என் பட்டோலைச் சிறகுகள் கழற்றப்பட்டன. அவைää தராசில் இடப்பட்டன.. தராசின் மேல் நாக்கு பயங்கரமாக இரு பக்கமும் ஆடியது. திடீரெனää என்ன நடந்ததென்று புரியவில்லை. ஒரு மஹா நீதிபதி வந்தாற் போல் உணர்ந்தேன். ஒரு கணக் குழப்பத்தில்ää யாரோ யாருக்கோ கட்டளையிடää நான் ஒரே விசிறலில் மைதானத்தை விட்டும்ää ‘வெளியில்ää தூக்கியெறியப்பட்டேன். ஒரு இடமிலிக் குவியத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.. என்றும்ää அது அப்படித்தான் கோடான கோடி காலங்களாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது என்றும் உணர்ந்தேன். அது ஏனென்றெல்லாம் எண்ணவும் விரும்பவில்லை. விடையளிக்க முடியாதää விரிந்த வெளியில் விடை தேடி விரைந்து கொண்டேயிருந்தோருக்குச் சொல்லப்படும் ஒரு பதிலைத் தேடி...நானும் விரைந்து கொண்டேயிருந்தேன்..

 

()

 

இங்கே..ää

 

இரும்புத்திரைக்குள்ளிருந்தாலும்ää தலைமைப் பீடம் துணுக்குற்றுத்  திடுக்கிட்டது. உயர் பீட மட்டத்தில் அவசர ஆலோசனை நடத்தியது. ஆட்சி கவிழாதிருப்பதை உடன் உறுதி செய்தது. தனதுää மகிழ்ந்த சிந்தனையைச் சற்றே நிறுத்தி தனக்குள்ää முகிழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது.  ஆளும் கட்சிப்பிரதமர்ää   கொல்லப்பட்ட  முக்கிய நட்சத்திர அந்தஸ்து தளபதிகளின்ää வீடுகளுக்கு நேரில் சென்றுää பளபள சவப் பெட்டிகளில்ää தன்முகம்  பார்த்துää சோக மனைவியருக்கு  கைகூப்பினார். எதிர்க்கட்சித் தலைவர்ää பொங்கிய மகிழ்ச்சியை மறைத்துச் சோகமாகிää  திரண்ட மக்களிடையேää ஆவேஷமாய்க் கையசைத்தார். தான் ஆட்சிக்கு வந்;தால்ää ஒலிவ் மரங்கள் வாசலில் பூக்கும் என்றார்.

 

பாதுகாப்பு அமைச்சர் ஸ்தலத்தில் பாதுகாப்பாக வந்திறங்கிää பரபரப்பூட்டினார். பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் தாமதமான கட்டளைகள் பிறப்பித்தார். அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் ஒருவர்ää “மூன்றே நாட்களில் அடக்குவோம்  என்று ஊடகங்களில்ää உறுமியதை நம்பாத மக்கள்ää மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்றுää கொண்டதால்ää பரபரப்பு உச்சத்தை தொட்டது. மறுபடி நாடு முழுவதும்  அத்தியாவசியப் பொருட்கள் பதுங்கின. மதுக்கடைகள்  உச்சக் கட்டக் கொள்வனவில் தள்ளாடின. எல்லா வாகனங்களும்ää எரிபொருள் நிரப்பு நிலையங்களில்ää நீள் பாம்புகளாகி கார்பன் விஷம் கக்கின. பெற்றோல் தாங்கியில்ää  வதந்தி நிரப்பி பீதி;ப் புகை கக்கிப் பறந்தன. வாயு விலை சந்தடி சாக்கில்ää புஸ்ஸென உயர்ந்தது. நகரின் பொருளாதார மையங்கள்  ஒருகணம் ஸ்தம்பித்துப் பின் உயர்வடைந்தன. தூதுவராலயங்கள் தூக்கம் கலைந்து வழமையானää வன்மையான கண்டனங்களையும்ää அனுதாபச் செய்திகளையும்ää அச்சடிக்க ஆரம்பித்தன. இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.” என்றன. கண்காணிப்புக் குழு கண்களைக் கூனிக் கொண்டு ஆங்கில வார்த்தைகளில் ஆதங்கப்பட்டது. இது சமாதான முயற்சியைப் பாதிக்கும்” என்று எண்ணூற்றிச் சொச்சம் தடவைகள் சொன்னதைச் சொல்லின. வெள்ளைக்காரர் பயமும் பீதியுமாக களத்தில் நின்று கொண்டு முறைப்பாடு  பதிந்து கொண்டிருந்தார்.

 

தீவிர அரசியற்கட்சித் தலைவர் ஒருவர்ää முழுமையான யுத்தத்தில் இறங்க மக்களை அழைக்கää இதனை நம்பிப் பாதாள உலகிலிருந்துää இனமுறுகல்த் தீப்பொறிகள் ஒன்றிரண்டாய் தெறிக்கத் தொடங்கின. பணப்பெட்டிகள் சவப்;பெட்டிகளில் பரிமாறின. ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு. பாதாளத் தாதாக்களின் உயர்மட்டச் சமிக்ஞைக்காகக் காத்திருந்தன இது புரியாத சிறுபாண்மையினர் அவசர அவசரமாக சந்தையில் சாமான்கள் தேடி ஓடிக் கொண்டிருந்தனர். உள்நாட்டுப் பாதுகாப்பமைச்சின்உயர் செயலாளர்கள் குளிர் அறைகளுக்குள் வைப்புத்துணைகளுடன்’ ‘பூட்டிக்கொண்டுää ‘குண்டுகளையும்ää’ ‘வெடிப்புக ளையும்   ஆராய்ந்தனர். அடுத்த நிலை உயரதிகாரிகள்ää வீட்டிலிருந்துää காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துää செல் பேசினர். சிறிய செயலாளர்கள்ää சும்மா காரில்ää ஓடியாடிக் கொண்டிருந்தனர். கனிஷ்ட அதிகாரிகள்ää திடீர் சுகயீன விடுமுறையில்ää மனைவி பிள்ளை க ளு ட ன்ää வாகனங்களில் காணாமல் போயினர். கீழ்நிலை இலிகிதர்கள் இதுவரை நடந்த தற்கொலைத் தாக்குதல்கள்ää காயப்பட்டோர் இறந்தோர் எண்ணிக்கை.. நிவாரண விடயங்கள் என்று தரவு நிரைப்படுத்த ஆரம்பித்தனர்.

 

()

 

அங்கே...

 

விஸ்தார வெளியில் விசிறப்பட்டு திக்கற்ற சூன்யத்தில்ää விரைந்தேன். என்னோடு இன்னும் கோடிக் கணக்கானோரும் விசிறப்பட்டிருந்தனர்.. விரைந்த வேக தூரங்களில்ää அவர்களுடனும்ää பூமியில் விழாத இன்னும் கோடிப் பேருடனும்ää நானும் அந்தப் பாலத்தை நோக்கியே பயனித்துக் கொண்டிருக்கிறேன். மகாப் பிரமாண்;ட கிரகங்களிலிருந்தும்ää பூமியிலிருந்தும் விசிறப்பட்டு இன்னும் கோடிக் கணக்கானவர்கள் என்னுடன் புதிதாகச் சேர்ந்து கொண்டேயிருந்தனர்.

 

ஒரு தலைமுடியை ஏழாகப் பிரித்த அளவிலான ஒடுக்கமான பாலத்தைக் கண்டோம் .அதைக்கடக்கும்  போது தாக்குப்பிடிக்க முடியாதää பல கோடிக்கனக்கானோர்ää மகாப் பிரமாண்டமான கிரகங்களிலும்.. பூமியிலும்ää சிதறி விழுந்தனர்.. விழுந்து சிதறினர்.. சிதறி உயிர்த்தனர்.. உயிர்த்து முளைத்தனர்..  முளைத்து மறுபடி எழுந்தனர்.. ஊர்ந்தனர்.. மேய்ந்தனர்.. பறந்தனர்.. நடந்தனர்..  சிலர்ää அசையாப் பொருளாகி ஸ்தம்பித்தனர். சிலர் அணுவாகி மறைந்தனர்.. சிலர் நட்சத்திரங்களாகி ஒளி வீசி விரைந்தனர். அதே சமயம்- பாலத்தைக் கடக்கையில்ää தவறி வீழ்ந்துää நானும்ää  மறுபடி ப10மிக்கே மீண்டுää மேய்வதற்குää ஊர்வதற்குää நடப்பதற்குää நிற்பதற்கு அல்லது சும்மா கிடப்பதற்கு என்று விழுந்து விடலாம்  போலிருந்தது. ஆனால் அது என் வசத்திலில்லை என்றும் புரிந்தது.

 

எங்கே விழுவேன்.. நடப்பேனா.. மேய்வேனா.. ஊர்வேனா.. நிற்பேனா.. கோடிக் கிரகங்கள் கடந்து பெருவெளிப் பயனம் செய்துää பாலம் நெருங்க- எனது மூன்றாவது கண் ஒளியிழக்கத் தொடங்கியது. காட்சிகள் மங்கின. ஞாபகம் மறந்து வேறேதோ பிரக்ஞை உண்டானது. பாலத்தைக்  கடந்தபோதுää..ää

 

 

()

 

இங்கே..ää

 

மறுபடி  பூமியில்தான் ஒரு வந்து விழுந்தேன்.. என் ஞாபகத் தொடர்கள் அறுந்திருந்தன.. என் மூன்றாவது கண் முற்றாக மூடிக் கொண்டது.  யாரோ அதனை மறைத்து ஒரு பொட்டு இட்டார்கள். நான் அழுதேன்.. பலர் சிரித்தார்கள். பலர் கலகலத்தார்கள் பெண்பிள்ளை பிறந்திருக்கிறது என்றார்கள். என் தாயின் கதகதப்பையும் உணர்ந்தேன்.  கண்ணே..! கண்ணே..!!  என்று ஏதோ ஒரு மொழியில் என் தாய்ää என்னை அழைத்துக் கொஞ்சுவது கேட்டது.. இனம் புரியாத பாசம் என்னுள் முகிழ்த்தது.  கொஞ்சம் பசித்தது.  தாய் முலை தேடினேன். அமிர்தம் பருகினேன். இதமாக ஒரு காற்று வீசியது.  எங்கிருக்கிறேன்... எப்போது பிறந்தேன்..?  எப்படி வளர்ந்தேன்..படித்தேன்..வெட்டுப் புள்ளியில் உயர்கல்வி வாய்ப்பு இழந்தேன்..தொழில் வாய்ப்பில் இனமொதுக்கப்பட்டுää இனக்கலவரத்தில் பெற்றோரைப் பலி கொடுத்து..ää விரக்தியாகி..ää வாழ்வுரிமை பறிக்கப்பட்டு..ää அகதியாய்த் துரத்தப்பட்டு..ää உச்சக்கட்ட ரோசத்தில்ää இயக்கத்தில் சேர்ந்து..ää பயிற்சி பெற்று வெளியேறி.. இப்போதுää இங்குää

 

பூமியில்ää ஆசியாக் கண்டத்தில்ää இலங்கையில்ää கொழும்பில்ää பழைய டப்ளியு பெரேரா மாவத்தையில்;ää 1862 இலக்க அறையில்ää கணிணி முன் உட்கார்ந்துää தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் பற்றிச் சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்... இப் பெருவெளிச் சுழற்சி முடிவடைந்துää இதனைவிட்டு விடுதலையாகி விட மட்டும்... இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைநகரில்ää ஒரு இராணுவ உயர் அதிகாரியைக் குறி வைத்து வெடித்துச் சிதறவிருக்கிறேன். உலகில் வாழும் கடைசி மணித்துளியில்ää ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.. கதைக்கு விட்டு விடுதலையாகி என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் முற்றும் போடவில்லை. ஆனால்ää இலக்கை நெருங்கும் நேரம் நெருங்குகிறது. என் நேரமும் என் விதியும் என்னை அழைக்கின்றன. எழுந்தேன். சிறுகதை இன்னும் எழுதி முடியவில்லை.0

 

00000000000000000000

 

 

No comments:

Post a Comment