வேக்காடு.
எங்கட வாப்பாவத் தெரியிம்தானே மச்சி..? நீயும் கேளுஹா லாத்தா நான் செல்லப் போற கதய.. நம்மட தலவரு அஸ்ரப்பு மாதிரி நெல்ல வடிவான ஆள்தான் எங்கு வாப்பா. இரும்புப் பட்ற மாதிரி அவர்ர நெஞ்சு. கடும் தகிரியமான ஆளு. சும்மா எங்கயோ மூலைக்க கெடந்த எங்க ம்மாவ ஏளப்பொண்ண நன்மக்கி எடுத்துப் பண்ணினாரு.
முக்குலத்தும்மா ண்ட அவட பேர மாத்தி மூமினும்மா ண்டு மாத்தி வெச்சாரு. நகநட்டுப் போட்டாரு. சோடிச்சாரு.. நடநாகரிகம் பழக்கினாரு. நாலுபேரு கூர்ரசபையில கூட்டிப்போவாரு.. கூச்சம் தெளிவிச்சாரு. பேச நடக்கப் பழக்கினாரு. முக்காடு போட்டாலும் மூலைக்க குந்த உடல்ல.. போற எடமெல்hம் கூட்டிப் போனாரு.. பாத்த ஆக்கள்ள கண்ணு பர்ர மாதிரி நெல்லாவெச்சிருந்தாரு. பாத்த ஆக்கள் மூக்குல வெரல வெச்சாஹ.
சிங்களம் இங்கிலீசி தளதண்ணி வாப்பாக்கு. ம்மாவும் கொஞ்சம் கொஞ்சமா பேசப் பழகிட்டா.. பொறகென்ன.. வாப்பா சென்னாரு.. என்ட உசிரு இவதான்.. இவட எணல்ல எல்லாரும் கூடியிரிங்க ண்டாரு.. கொஞ்ச நாள்ள இந்த எலங்கச் சிலோன்ல எங்கட ம்மாவத் தெரியாத ஆக்களே ல்லஹா மச்சி.. வாப்பாக்கு தலயெலல்லாம் மூள.. கடும் புத்திக்கார மனிசன்.. ஆனா பக்கத்து ஊட்டுல குடியிரிக்கிற மாறுசாதிக்காரனோட கொஞ்சம் சண்டையும் இருந்திச்சி. அவன் கட்டு பொம்மிசும் தோக்கும் வெச்சிருந்தான்.. எங்களுக்குச் செரியான பயம்தான்.. ஆனா வாப்பா அசய மாட்டாரு. என்ட தலதான் என்ட ஆய்தம் ண்டு சிரிப்பாரு.
வர்ப்பாவச் சுத்தி எப்பவும் ஆக்கள்தான். சக்கிம் சாச்;சா..கனி வைத்தியரு.. மூத்தவாப்பா.. அதவத்தல்லா.. தாவுது.. தொப்பி யாவாரி.. வேற சிங்கள யாவாரிமாரு.. ப்பிடிக் கனபேரு. எங்கம்மாவும் இவஹ ளோட கூட இரிப்பா.. கதப்பா.. எல்லாரும் ஒரு குடும்பத்து ஆக்களப் போல ஒத்துமயா இரிந்தம்.. குடும்பத்த வாப்பா கடும் ~கொன்றோலா|த்தான் வெச்சிருந்தாரு.. எவரும் வாப்பாவ எதுத்துக் கதைக்க ஏலாது. வாப்பா மடக்கிடுவாரு.. கூடயிரிந்த சேகுட வாய் கொஞ்சம் நீண்டுட்டு ண்டு ஊட்ட உட்டே ஒரேயடியா வெரசி உட்ட ஆள் அவரு.
எண்டாலும் என்னய்ற..? உழ்வின உடுமா..? கொளும்புல இரிந்து வெரக்குள்ள ~கப்பல் மலையில| தட்டி ஒடஞ்சாப்பல எங்கட சீதேவி வாப்பா ஒடஞ்சி கரியாப் போனாருஹா மச்சி.. லாத்தோவ்..! எளம் வயசல போய்ட்டாரு.. ம்மாட கெதி அதோகெதியாயிட்டுது....
பொறகுதானே கடும் பெரச்சின தொடங்கிச்சி.. ம்மாடி எத்தினஎத்தின பெரச்சினஹா மச்சி.. இம்பட்டுப் பெரச்சினயும் மூமினும்மாட்ட இரிந்திச்சா ண்டு வாப்பா ~மவ்த்|;தானதுக்குப் பொறகுதானே வெளிப்பட்டிச்சி.. என்ன புதினம்டியம்மா... கேளுஹா மச்சி.. எங்க ம்மா ப்பவும் எளந்தாரியா இருந்தத்தால ம்மாவக் கலியாணம் பண்ற ஆரு ண்ட பெரச்சினயிலதான் ஆரம்;பிச்சி... ம்மாடி... எத்தின ஆய்ரம் ~கதஹால்|கள்.. பெரச்சினைகள்... அவவ ஒழுங்கா ~இத்தா| இரிக்கயும் விடல்ல.. அத உடு.. வாப்பாட நாப்பது கழியிறத்துக்குள்ள ம்மாக்கு ஆரு மாப்பிள்ள ண்டு போட்டி.. ~நான் பண்ண..நீ பண்ண..| ண்டு கலியானப் போட்டி...
ம்மா தெணறிப் போய்ட்டா.. வாப்பா ல்லாத வடு மார்றத்துக்குள்ள ன்னொரு கலியாணமா.. அவரு ல்லாம நமக்கு வேற மாப்பிள்ளயா.. ண்டெல்லாம் யோசிச்சாலும் எப்பிடியும் கலியாணம் முடிச்சித்தானே ஆகணும் ண்டு நாங்க புள்ளயள் சேர்ந்து வப்புறுத்தினம்.. போனது போகட்டும் நீ ஆரெண்டாலும் கலியானம் பண்ணும்மா எங்கள வாப்பா ல்லாத அறாமியள் ண்டு மாறுசாதிக்காரன் ஏசிறான்.. அதுக்காச்சும் நீங்க கலியாணம் பண்ணித்தான் ஆகணும் ண்டு நாங்களும் ஒருபுடியில நிண்ட்டம். ஆனா மாப்;புள்ள ஆரு..? பொருத்தாமன மாப்புள்ள பாக்க முந்தியே ம்மாவப் பண்ணிக்க எத்தினயோ மாப்புள்ளமாரு பாஞ்சாஹடியம்மா... ம்மர்டீ... வாப்பாக்குக் கூடயிரிந்த கொஞ்சப்பேரு ம்மாவப் பண்ணி மூமினம்மாக்கு தலையாரியாக கடும் போட்டிபோட்டுப் பாஞ்சாஹ.. தலையாரி ஆக நானாநீயா ண்டு அடிபுடி சண்ட..
எந்நரமும் வாப்பாவோட இரிந்த சக்கிம் சாச்சா ம்மாவப் பண்ணட்டும் ண்டு செல புள்ளயள் விரும்பிச்சுகள்.. அந்நரம் பாத்து மருதமுனையால கனிவைத்தியரு ~~நாந்தான் குடும்பத்தல மூத்த துண வைத்தியரு.. நான்தான் பண்ணுவன்.. ண்டு கௌம்ப.. புள்ளயள் காறித்துப்பி.. கெழட்டு வைத்தியனுக்கு இன்னம் ஆச உடல்ல ண்டு புறுபுறுத்திச்சுகள்.. மறுகா வாப்பாவோட கூட்டுக்கு யாவாரம் செஞ்ச பெரிய சிங்குள நோனா வாப்பாட்ட எடுபுடியாயிரிந்த காத்தான்குடி வெள்ளப்பொடியன நீ கேட்டுப் பாரன் ண்டு கிட்டி விட்டா.. அவனும் இதுர பாரதூரம் தெரியாம நா எளந்தாரி! ம்மாவ நான் நெல்லா வெச்சிரிப்பன் ண்டு செல்லியனுப்பினான். சிங்கள நோனாட கதயக் கேட்டு ஆடுறவன் ண்டு புள்ளயள் அவனையும் விரும்பல்ல.
பொறகு கொளும்பால ஒரு மொத்த யாவாரி கேட்டாரு.. கொழும்புக்குப் போக ம்மாவும்; புள்ளயளும் விரும்பல்ல.. அப்;ப ஆரு பண்ற.. ~ஒரு கதயும் வேணா.. நான் பண்றன்| ண்டு அக்கரப்பத்து அதவத்தல்லா கேட்டாரு.. மறுகா.. குருநாகலையிலயிரிந்து ஒரு அப்புரத்து ~லாக்குத்தரு| கேட்டாரு.. சம்மாந்தொறையால தொப்பி லாவாரி ஒடியந்து ~மவ்த்தானவருக்கு| நான் சொந்தக் காக்கா! நான்தான் மொற மாப்புள்ள ண்டு சத்தம் போட்டாரு.. இன்னம் ஒட்டமாவடியில தாவுது.. பொத்துவில்லு பாறுக்கு.. ப்பிடி ஆயிரம் மாப்புள்ளமாரு...ஆனானப்பட்ட மலையெல்லாம் மோதி மண்ட ஒடையக்குள்ள ஆன வட்டைக்க வெள்ளாமச் செஞ்ச மஞ்சுறும் மினீக்கிட்டுக் குலுக்கிட்டு ஒரு நப்பாசையோட ஒரு வெசளம் அனுப்பிப் பாத்தாருஹா.. ம்மாடி.....
அதுக்குள்ள வாப்பாட கம்பளை மச்சி வந்தா.. ~~கலபல| பண்ண வோணாவா.. நாப்பது கலிய மட்டுங் உம்மா எண்ட ஊட்டுல வந்து இரிக்கேலும்..|| ண்டு கம்பளக் கத பழகினா.. இது அவன் சேகுதான் கிட்டிவிட்டிருப்பான் ண்டு புள்ளயள் ஏலாதுண்டு செல்லிட்டுதுகள்.
அதுல பாருஹா மச்சி.. ~நோமலா| பொண்டாட்டி வேணா ண்டுதானே ~கோட்டுக்கு|ப் போற.. இதென்னடாண்டா பொண்டாட்டி நெக்கி வேணும் நொக்கு வேணும் ண்டு கோட்டுலயும் சண்ட.. உட்டுலயும் சண்ட.. ரோட்டுலயும் சண்ட.. நாட்டுலயும் சண்ட.. அதென்ன எங்கும்மாட்ட மட்டும் அப்பிடி என்ன ~இஸ்பிசல்.| இரிக்கி.. ண்டு செல புள்ளயள் அடி வழிச்சதுகள் பேசினாலும் எசினாலும் வெளங்காம முழிசினாலும் நெக்கித் தெரியிம்.. இது ஏணுண்டு.. ~தலவர்ர புள்ளயள வெச்சிக் காப்பாத்தத்தான் நாங்க பண்ணப் போறம் ண்டு இந்த மாப்புள்ளமாரு சென்னாலும் அதுல்ல வெசயம்.. வெசயம் வெங்காயக் கூட்டுக்குள்ள லா இரிக்கி...? எங்கும்மாக்குப் புரிசனா தலையாரியா இரிக்கிற ஆக்களுக்குக் கெடைக்கிற மதிப்பு மரியாத செல்லி வெளங்கா.. நெல்லா யாவாரம் பண்ணலாம்.. எந்நரமும் கப்பல்லயும் !ஏரப்பிளனு|லயும் சுத்தலாம்.. வெள்ளக்காரக் கூட்டாளிகள்.. அறபிக்காரக் கூட்டாளிமாரு.. சுத்தி வெர தோக்குகளோட ஆமி பொலிசக் காவல்.. ஆள்பட அம்பு.. ஒதவி பதவி.. செல்லி வேலல்ல... எலங்கச் சனாதிபதியும் தலையாரி வந்தா கொஞ்சம் ~சைட்டு|க் குடுக்கத்தான் வேணும் ண்டாப் பாத்துக்கயேன். அம்பட்டுக் கெவ்ரவம்..புகள்..நடப்பு..எல்லாம்....
செரி. அதுல மச்சி..! கடசீல வாப்பாவோட ஒரத்த ~முஹப்பத்தா| இரிந்த சக்கிம் சாச்சாதான் ம்மாக்குப் பொருத்தமான தலையாரியா இரிப்பாரு..ண்டும் வாப்பாட மூளையில அவருக்கும் கொஞ்சம் ண்டான இரிக்கிம்.. வாப்பா மாரியே நம்மளயும் அன்பா பாத்துக்குவாருண்டு புள்ளயள் கொஞ்சம் சக்கிம் சாச்சாவத்தான் விரும்பிச்சுகள்.. அவர்ர பக்கம் ~சான்சு| அடிச்சிரிச்சி.. மத்த மாப்புள்ளமாருக்கெண்டால்.. செரியான வேக்காடு.. எரிச்சல்.. பொறாம.. எல்லாரும் தெரண்டு வந்து புள்ளயள சந்திச்சி. ~டேய்.. மக்காள்.. ஒங்கும்மாவும் வாப்பாவும் பொறந்த இந்த மட்டக்களப்பு மண்ணுலடா.. அவள ஒரு வெளிய10ரான் பண்ண உடலாமாடா..? பூனா மக்களே.. மூள கெட்ட நாய்களே.. சக்கிம் சாச்சாவ ம்மாக்குத் தலையாரியா ஆக்கினா.. முட்டாய் வாங்க காசி கேக்கிறண்டாலும் ~வஸ்|ஸேறிப் போகனும்.. இனி ம்மா அளிஞ்சா..||-- ப்பிடிப் போட்டு பயமுளுத்தாட்டினாக.. புள்ளயளும் கொஞ்சம் பயந்து போச்சுதுகள்.. அந்நரம்தான் சக்கிம் சாச்சாட பெலம் வெளங்கிச்சு.. எங்க நம்முட கலியானத்த இவனுகள் கெடுத்துடுவானுகளோ ண்டு ~டக்குப்புக்|;கெண்டு அஞ்சாறு வேலசெஞ்சாருஹா மச்சி.. ஆளு...!
ஒடன உடுத்த சாறனோட மூத்த கனிவைத்தியன உட்ட உட்டு எழும்புடா ண்;டு வெரசி உட்டாரு.. மறுகா அடுத்த நாளே காத்தான்குடி வெள்ளப்பொடியனையும் கம்பள மச்சியையும் குத்தி எழுப்பி ஓட்டம் காட்டிட்டாரு.. தொப்பி யாவாரிய இந்த வளவுக்குள்ள ஒண்ட தலக்கறுப்பும் தெரியக்;கூடா ண்டு செல்லிட்டாரு.. உதுமாலேவ லாக்குத்தருக்கு உறுக்கி அடக்கி வெச்சாரு.. இன்னம் மனசிக்கு ~ராஹத்|தில்லாத ஆக்களயும் கலியாணத்த எதுத்த ஆக்களையும் நைஸாக் குத்திப் பெரட்டி எணங்க வெச்சிட்டாரு.. த்தோட ஊடு வெட்டயாயிடுச்சி.. சக்கிம் சாச்சா தனிப்பெரும் ஆளாய்ட்டாரு.. புள்ளயளுக்கும் சந்தோசம்தான்.. சக்கிம் சாச்சாவ வாப்பாட எடத்துல வெச்சிப் பாக்;க ஏலாட்டியும் அவரஉட்டா வேற மாப்பிள்ள ல்ல ண்டு; ஆய்ட்டு..
பொறகென்ன.. சக்கிம் சாச்சா ஒருநாள் வாப்பாவப் போல சோடிச்சிட்டு வெர.. ஊரெல்லாம் கூடி ~பைத்து|ப் பாடி மால போட்டு வெடி கொளுத்தி வரவேப்பு வெச்சி.. பொல்லடியும் ஊர்வலமுமா அமளிதுமளிப்பட்டுது ஊரு.! சக்கிம் சாச்சா ம்மாக்குப் புரிசனாகி.. புள்ளயளுக்கும் தலையாரி ஆய்ட்டாரு. வாப்பா ~மவ்த்|தான பொறகு கொம்மைக்குப் புரிசனில்ல ண்டு பக்கத்து ஊட்டு மாறுசாதிக்காரன் உள்ளக்க சிரிச்சிட்டு இருந்தான். சக்கிம் சாச்சாட கலியானம் நடந்ததும் சுள்ளுண்டு போச்சி அவனுக்கு.
எப்பிடியோ எல்;லாத்தையும் சமாளிச்சி.. சக்கிம் சாச்சா ம்மாக்குத் தலையாரியா ஆய்ட்டாரா..?. கொஞ்;ச நாள் நெல்ல குளுகுளுப்பா இரிந்தாரு சாச்சா..! ண்டாலும் எந்நரமும் கப்பல்லயும் !ஏரப்பிளனு|லயும் சுத்தலாம்.. வெள்ளக்காரக் கூட்டாளிகள்.. அறபிக்காரக் கூட்டாளிமாரு.. சுத்தி வெர தோக்குகளோட ஆமி பொலிசக் காவல்.. ஆள்பட அம்பு.. ஒதவி பதவி.. செல்லி வேலல்ல... எலங்கச் சனாதிபதியும் தலையாரி வந்தா கொஞ்சம் ~சைட்டு|க் குடுக்கத்தான் வேணும் ண்டாப் பாத்துக்கயேன். அம்பட்டுக் கெவ்ரவம்..புகள்..நடப்பு..எல்லாம்....
செரி. அதுல மச்சி..! கடசீல வாப்பாவோட ஒரத்த ~முஹப்பத்தா| இரிந்த சக்கிம் சாச்சாதான் ம்மாக்குப் பொருத்தமான தலையாரியா இரிப்பாரு..ண்டும் வாப்பாட மூளையில அவருக்கும் கொஞ்சம் ண்டான இரிக்கிம்.. வாப்பா மாரியே நம்மளயும் அன்பா பாத்துக்குவாருண்டு புள்ளயள் கொஞ்சம் சக்கிம் சாச்சாவத்தான் விரும்பிச்சுகள்.. அவர்ர பக்கம் ~சான்சு| அடிச்சிரிச்சி.. மத்த மாப்புள்ளமாருக்கெண்டால்.. செரியான வேக்காடு.. எரிச்சல்.. பொறாம.. எல்லாரும் தெரண்டு வந்து புள்ளயள சந்திச்சி. ~டேய்.. மக்காள்.. ஒங்கும்மாவும் வாப்பாவும் பொறந்த இந்த மட்டக்களப்பு மண்ணுலடா.. அவள ஒரு வெளிய10ரான் பண்ண உடலாமாடா..? பூனா மக்களே.. மூள கெட்ட நாய்களே.. சக்கிம் சாச்சாவ ம்மாக்குத் தலையாரியா ஆக்கினா.. முட்டாய் வாங்க காசி கேக்கிறண்டாலும் ~வஸ்|ஸேறிப் போகனும்.. இனி ம்மா அளிஞ்சா..||-- ப்பிடிப் போட்டு பயமுளுத்தாட்டினாக.. புள்ளயளும் கொஞ்சம் பயந்து போச்சுதுகள்.. அந்நரம்தான் சக்கிம் சாச்சாட பெலம் வெளங்கிச்சு.. எங்க நம்முட கலியானத்த இவனுகள் கெடுத்துடுவானுகளோ ண்டு ~டக்குப்புக்|;கெண்டு அஞ்சாறு வேலசெஞ்சாருஹா மச்சி.. ஆளு...!
ஒடன உடுத்த சாறனோட மூத்த கனிவைத்தியன உட்ட உட்டு எழும்புடா ண்;டு வெரசி உட்டாரு.. மறுகா அடுத்த நாளே காத்தான்குடி வெள்ளப்பொடியனையும் கம்பள மச்சியையும் குத்தி எழுப்பி ஓட்டம் காட்டிட்டாரு.. தொப்பி யாவாரிய இந்த வளவுக்குள்ள ஒண்ட தலக்கறுப்பும் தெரியக்;கூடா ண்டு செல்லிட்டாரு.. உதுமாலேவ லாக்குத்தருக்கு உறுக்கி அடக்கி வெச்சாரு.. இன்னம் மனசிக்கு ~ராஹத்|தில்லாத ஆக்களயும் கலியாணத்த எதுத்த ஆக்களையும் நைஸாக் குத்திப் பெரட்டி எணங்க வெச்சிட்டாரு.. த்தோட ஊடு வெட்டயாயிடுச்சி.. சக்கிம் சாச்சா தனிப்பெரும் ஆளாய்ட்டாரு.. புள்ளயளுக்கும் சந்தோசம்தான்.. சக்கிம் சாச்சாவ வாப்பாட எடத்துல வெச்சிப் பாக்;க ஏலாட்டியும் அவரஉட்டா வேற மாப்பிள்ள ல்ல ண்டு; ஆய்ட்டு..
பொறகென்ன.. சக்கிம் சாச்சா ஒருநாள் வாப்பாவப் போல சோடிச்சிட்டு வெர.. ஊரெல்லாம் கூடி ~பைத்து|ப் பாடி மால போட்டு வெடி கொளுத்தி வரவேப்பு வெச்சி.. பொல்லடியும் ஊர்வலமுமா அமளிதுமளிப்பட்டுது ஊரு.! சக்கிம் சாச்சா ம்மாக்குப் புரிசனாகி.. புள்ளயளுக்கும் தலையாரி ஆய்ட்டாரு. வாப்பா ~மவ்த்|தான பொறகு கொம்மைக்குப் புரிசனில்ல ண்டு பக்கத்து ஊட்டு மாறுசாதிக்காரன் உள்ளக்க சிரிச்சிட்டு இருந்தான். சக்கிம் சாச்சாட கலியானம் நடந்ததும் சுள்ளுண்டு போச்சி அவனுக்கு.
எப்பிடியோ எல்;லாத்தையும் சமாளிச்சி.. சக்கிம் சாச்சா ம்மாக்குத் தலையாரியா ஆய்ட்டாரா..?. கொஞ்;ச நாள் நெல்ல குளுகுளுப்பா இரிந்தாரு சாச்சா..! ண்டாலும் அவருக்கு உள்ளாள கொஞ்சம் நிம்மதி ல்ல.. ம்மாவப் பாரமெடுத்த நாளையில இரிந்து கொஞ்சம் கொஞ்சமா கரச்சல்கள் வெரத் தொடங்கிட்டு.. பெரிய சிங்களநோனா சொத்தய நீட்டினதும்.. இவரும் அவிசிரப்பட்டு சிங்கள நோனாட யாவாரத்தக் கவுத்ததும்... மொடப் பொலிசுக்காரன் சாச்சாட சொந்தப் புள்ளயள வெரசிச்சுட்டதும்... மாறுசாதிக்காரன் எடைக்கெட வெரட்றதம்.. ம்மாட அல்லயல் சனம் வெளியூரான் வெளிய10ரான் ண்டு புறுபுறுக்கிறதும்.. மனிசன் மூள கொளம்பி ஒடித் திரிஞ்சாரு.. இதுக்கெல்லாம் நிண்டு புடிக்க அபாயமான வேலயெல்லாம் செஞ்சாரு.. எட்டுப் பொறாமக்களக் கடத்திப் போய் கட்டிப் போட்டாரு.. ஊட்டுக் கொளப்பத்த ரோட்டுக்கு கொண்டந்து தைரியமா போட்டு ஒடைச்சாரு..
சனத்துர வாய அடைக்கிறத்துக்காக ம்மா பொறந்த எடத்துலேயே ஒரே தெரத்தல மூணு மாப்பிள்ளமார வெண்டுஎடுத்தாரு.. சம்மாந்தொறையில அன்பரையும் ..பொத்துவில்ல அசீஸ் காக்காவையும்.. கல்முனையில அரிசித் தம்பியையும் மாப்பிள்ளயா ஆக்கினாரு.. சனங்கள் மகிழ்ந்து போனதுகள்.. ச்சா.. சாச்சாட மூளதாண்டா மூள.. பாத்தியா.. வாப்பாக்கே நம்மட பக்கம் மூணு மாப்பிள ஒரே ~டொக்ல| எடுக்கேலாமப் போச்சி.. சாச்சா எடுத்துட்டார்ராடோய்.. ண்டு சனம் சந்தோசப்பட.. கம்பேறிய சக்கிம் சாச்சா பக்கத்தூட்டு மாறுசாதிக்காரனுக்கும் ஒரு கடிதம் எழுதினாரு.. வாப்பாவப் போலவே என்னயும் முடிவெடுக்கிற ண்டால் மக்காவுக்குப் போய்முடிவெடுத்தாரு.. மக்காவிலரிந்து கொளும்புக்கு.. கொளம்புலரிந்து மக்காவுக்கு.. ல்லாட்டடி வெளிநாட்டக்கு.. எலங்கைக்கு வந்தா கண்டிக்கு.. ல்லாட்டடி கொளும்புக்கு ண்டு.. பறந்து திரிய ஆரம்பிச்சாரு.. மனிசன் ம்மாட பொறந்த உட்டுப் பக்கம் வாரத்த கொறச்சிட்டாரு...
ஒருநாள் ஆருட்டயும் கேளாம கூட்டாளிமாரோட திடீரென்று பக்கத்தூட்டு மாறுசாதிக்காரண்ட ஊட்டுல கையநனைச்சிட்டாரு.. ~கப்பலாவறு| கொறையில கெடக்க.. பொணருத்தாரணக் காசி தெரயில்ல.. ப்பிடி கொஞ்சம் கொஞ்சம் உள்ளுக்கு பொகைய ஆரம்;பிச்சாலும்... பாவம் சாச்சா! ண்டாலும் நூத்துக்குநூறு வாப்பாவப் போல இரிக்க ஏலாதுதானே ண்டு புள்ளயளும் பொறுத்துப் போனதுகள்.. ஆயிரம் இரிந்தாலும் எங்கட தங்கத் தலையாரி வாப்பாவப் போல வெருமா.. ண்டு உள்ளுக்க புள்ளயளுக்கு ஏக்கம்தான்.. வாப்பாட வெசயம் தனி ~டைப்பு.| அவருக்கு ஊரெல்லாம் ஒறவு..! பெரிய குடும்பம் கோத்திரம்.. மருதமுனையில தங்கச்சிமாரு.. கல்முனைக்குடியில வாப்பா.. சாஞ்சமருதில மாமாரு.. சாச்சாமாரு.. சம்மாந்தொறையில ம்மாட எனசனம்.. நிந்தவூருல மருமக்கள்.. அக்கரப்பத்துல மூத்தப்பாட காக்காமாருகள்.. பொத்தவில்ல மாமிமாரு.. எறக்காமத்துல தாய்வகுத்தாக்கள்.. ஒலுவில்ல தண்ட ~மைய்யத்தை|யே தாரண்டு ஒசியத்து.. ப்பிடி எங்க பாத்தாலும் எனசனம்... ப்பிடி எல்லா ஊரும் அவர்h ஊருதான்..
ஆனா சக்கிம் சாச்சாக்கு கண்டியயும் கொளும்பயும் உட்டா வேற எடம் தெரியாது.. ஆக்களும் ல்ல.. இஞ்சாலப்பக்கம் உள்ள ஆக்கள சக்கிம் சாச்சாக்கு சாடமாடயாத்தான் தெரியிம்.. புள்ளயள்ள அடிவரலாறு தெரியா.. அதால ஆனவட்டைக்க வெள்ளாமச்; செஞ்ச பழைய ஆனகட்டியளும்;.. நீலக்கடலுக்க மீன் புடிச்சித் திரிஞ்ச பெலாலுகளும்;.. சக்கிம் சாச்சாட்டப் போய் அண்டிட்டானுகள்.. பழைய ம்மாட புள்ளயள் கொஞ்சம் கொஞ்சமா ஒதுங்கத் தொடங்கினாக... ம்மாட புள்ளயகள கொஞ்சமா ஒதுக்கிட்டு தன்ர கண்டிப் புள்ளகள முன்னுக்கு கொண்டரத் தொடங்கிட்டாரு.. இந்தப் பக்கம் வாறதையும் நெல்லாக் கொறைச்சிட்டாரு.. தலையாரிக்கி தலைநகருலதான் வேல.. நீங்க நெனச்ச மாதிரியெல்லாம் வெர ஏலா ண்டு செல்லிட்டாரு.. இது கொஞ்சம் கொஞ்சமா பொகைஞ்சி பொகைஞ்சி... பத்தத் தொடங்கட்டு.
அது காணாம கூட்டு யாவாரத்துல மாத்தம் இரிக்கனும் ண்டு அவிசிரப்பட்டு முடிவுகள் எடுக்கத் தொடங்கிற்றாரு..கண்டி ஆக்கள கூட்டு மொதலாளிமாரா ஆக்கினாரு.. கொஞ்சம் கொஞ்சமா ம்மாட புள்ளயள ரெண்டாம் பச்சமாக்கினாரு.. சிங்கள நோனாட பகையைத் தேடிட்டாரு.. அவ சொத்தய நீட்னத்தால ஆதரவு இல்லலாமத் தவிச்சாரு.. கடசீல அணில் மாத்தயாட ஆனையில போய் ஏறிட்டாரு.. அணில் மாத்தயா மேய்க்கிறவனா இருக்குமட்டும் ஆனையில ஏறாதங்கடா மக்காள் ண்டு வாப்பா சென்னத்த நைசா பொறந்தள்ளிட்டாரு.
இதஇப்பிடியே உடப்போடா ண்டு ம்மாட மூத்த மகன் அக்கரப்பத்து அதவத்துல்லாவும் மத்தச் செல புள்ளஹளும்.. துணிஞ்சி தம்பிமாரையும் புள்ளயளயும் கூப்பிட்டு ~ந்தப் பாருங்கடா தம்பிமாரேய்.. சாச்சா ப்பிடிப்பிடியெல்லாம் நடக்காரு.. நாமளும் பாத்துட்டு இரிந்தா கேடுதான் வெரும்..| ண்டு செல்லிப் புள்ளகளக் கிட்டி உட்டாஹ. ன்னம் பலபேரும் பலமாதிரியம் பலபக்கமும் கிட்டி விட்டாஹ.. படிப்படியா ஏறாஊர்ல...காத்தாங்குடியில.. கல்முனையில.. பொத்துலில்ல.. சம்மாந்தொறையில.ண்டு சாச்சாக்கு எதுப்பு வெரத் தொடங்கிட்டு... அத அவரு மய்ருண்டும் கணக்கெடுக்கல்ல.. தன்ட புரியப்படியே நடந்தாரு.. . இனியும் பொறுக்கொண்ணா ண்டு ம்மாட மூத்த புரிசன்ட புள்ளயள் எல்லாம் துணிஞ்சி போய் கொளும்புல ஒரு மோனிக்காரிர ஊட்டுல வெச்சி சக்கிம் சாச்சாவ ; சந்திச்சிக் கேட்டாஹ....
~~ஞ்ச.. சாச்சா..! நீங்க ப்ப மின்னயப் போல ல்ல.. வாப்பாட புள்ளயள கழிக்கிறீங்க.. உங்கட கண்டிப் புள்ளயளத்தான் எல்லாத்க்கும் முன்னுக்கு எடுக்கறீங்க.. இது ஏன்.. ம்மா எங்கட ம்மாதானே...? நீங்க தலையாரியா ஆனதே எங்கட ம்மாவாலதானே.. அப்ப எங்கட ம்மாட புள்ளயள பொறந் தள்றீங்களே.. ஏன்..? இது செரியா..நெயாயமா..?||
சக்கிம் சாச்சா இதக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சிட்டு கோவத்தோடச் சென்னாரு... ~~நீங்கதானே சொல்றீங்க நான்தான் சொந்த வாப்பா ல்லியே..ண்டு.. அப்ப நான் சாச்சா.. ! .சாச்சா வேற.. வாப்பா வேற.. வெளங்குதா..?|
அந்தமறுமொழியோட நெயாயம் கேக்கப் போன புள்ளயள் ம்மாவையும் மொத்த யாவாரத்தையும்.. சொத்துக்களையும் பங்கு போட்டுப் பிரிஞ்சிட்டாங்க... அதுக்குப் பொறகு யாவாரம் எல்லாம் பிரிஞ்சி பிரிஞ்சி கந்தலாப் போச்சுஹா மச்சி.. கொரங்குஹள் அப்பம் பிரிச்சாப் போலயும்... கொரங்குட கய்யில பூமால போலயும்.. நெனச்சவனெல்லாம் சின்னச் சின்ன சில்லறக்கடய்களத் தொடங்கி ஆளாளுக்கு ஏத்த மாதிரி ம்மாவ வெச்சி யாவாரம் செய்யத் தொடங்கிட்டாங்க.....அதிலயும் செல ஆக்கள்.. ம்மாவக் கூவி விக்கிறாங்க.. பேமெண்டல போட்டு விக்கிறாங்க.. தள்ளுபடியில விக்கிறாங்க...வெளிநாட்டுல விக்கிறாங்க.. ன்னஞ் செல ஆக்கள் ம்மாவக் கூட்டியும் குடுக்கத் தொடங்கிட்டாங்க.. ண்டாப் பாரங்கா மச்சி...
எண்டல்;லோ... என்ன செய்யச் செல்றாய்ஹா மச்சி நீ...? ப்ப நாங்க கொஞ்சப் பேரு அந்நரம் வாப்பா இரிந்த காலத்த நெனச்சிட்டு சும்மா மூலைக்க கெடக்கம்... அவர நெனச்சி அவரப் பத்திக் கதச்சிட்டே எங்கட காலம் போகுதுஹர்.. ம்ஹ்ஹ்ம்.. குத்து விளக்கினிலே.. குமிழ் நெறைய எண்ணைய10த்தி.. பத்தி எரிஞ்சாலும் என்ட பாட்டொழியப் போறதில்லஹா மச்சி......0 (நன்றி: 2004. மே.-- நியதி)
(வேக்காடு.- அக்கரைப்பற்றுää ~தலைவர் அஸரப் மன்றம்| நடத்திய இலக்கிய போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை..2008.)
-------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment