வெள்ளி விரல்.
அதி சிறந்த மலையாள மகாவசிய மாந்திரீகம்.! முஸ்லிம் ~ஜின்’ வாசிலாத்து முறைப்படி செய்து தரப்படும். வீடு வியாபாரம் விருத்தியாக வேண்டுமா.. தீராத நோய்கள்.. மற்றும்ää பேய்ää ஜின்ää சாத்தான்ää பிசாசுää துஷ்டஆவிகள்ää பீடித்த உளநோய் கண்டிருப்போரை உடன் குணப்படுத்த வேண்டுமா.. மற்றும்ää தாமதிக்கும் திருமணம் கடுதில் நிறைவேற.. குழந்தைப் பாக்கியம் கிட்டää. விலைபோகாத காணி விற்பனையாக..ää பரீட்சையில் சித்தி பெற..ää வேண்டாத பகையை வேரோடறுக்க..ää காதலன்ääகாதலி சேர..ää வெளிநாட்டு வேலை வாய்ப்பு பலிதமாக..ää சுவீப் அதிர்ஸ்டம் கிடைக்க..ää மற்றும். உங்கள் வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் எதுவானாலும்ää பரிகாரம் உண்டு. சந்தேகமே வேண்டாம்.
குருகுல முறைப்படிää மலையாளத்தில்ää தேர்ச்சி பெற்றவரும்ää அருள்மிகு இறைநேசச் செல்வர்களின் அருள்பெற்றவரும் மனோதத்துவ வைத்தியரும்ää எண்ஞான வித்தகருமானää அஸ்ஸெய்ஹ_ அல்லாமா அல்ஹாஜ். அபுபக்கர் சித்தாயுள்வேத நிபுனர் (வெள்ளிப்பரிகாரி) அவர்களைச் சந்தியுங்கள். மூன்றே மாதத்தில் முழுப்பலன் கிடைக்கும். வெற்றி உறுதி. நேரில் சந்திப்போர் கல்முனை நகரத்திலிருந்து வடக்குப் புறமாகää கட்டைவெளிப் பள்ளிவாயிலுக்கு எதிரேயுள்ள பஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியால் பத்து மீற்றர் தூரத்தில்ää வரவும்.
வந்திருந்தார்கள். வாசலில் இடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையின் கீழ் உட்கார்ந்திருந்தார்கள். சூழல் முழுவதும்ää ஊதுபத்தி மணம்.. சாம்பிராணி வாசைன.. வாசலெங்கும்ää அடர் பற்றைபற்றையாகää இனம்புரியாத மூலிகைப் புதர்கள்.. ஏழெட்டுப்பேர் முன் விறாந்தையில் உட்கார்ந்திருந்தனர். முறைப்படி காணிக்கை ரூ.20 செலுத்தி இலக்கமும்ää ஊதுபத்திää வெற்றிலை பாக்கு முடிச்;சுகளுடன் வெள்ளிப் பரிகாரியைச் சந்தித்துத் தம் குறைகளை நிவர்த்திக்க முறைப்படி காத்திருந்தனர். எவரும் அநாவசியமாகச் சத்தமாகப் பேசவில்லை. உதவியாளர்ää வந்திருந்தேரை இலக்க வரிசைப்படி ஒவ்வொருத்தராக அனுப்பிக் கொண்டிருந்தார். சலுகாக்கிழவிää தன் பேர்த்தியானää புதுமணப்பெண் நஸீறாவை அழைத்து வந்திருந்தாள்.
உதவியாளர்ää விநோதமான நீண்ட ஜிப்பா சகிதம் இந்திய சர்வாணிகள் பாணியில் காட்சியளித்தார். இடையிடையேää மெல்லிய குரலில்ää வெள்ளிப்பரிகாரி அவர்களின்ää திறமைகளைப் புகழ்ந்து கொண்டும்ää தானே வியந்து கொண்டுமிருந்தார். வெள்ளிப் பரிகாரியிடம்ää ஜின்கள் எப்படிக் கட்டுண்டு அடங்கிக் கிடக்கின்றன என்ற அதிசயச் சம்பவங்களை மெய்சிலிர்க்கும் விதமாக சலுகாக்கிழவிக்கும்ää நஸீறாவுக்கும்ää கதைக்குக் காது கொடுத்த ஏனையோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையிடையேää உள்ளறையிலிருந்துää வெள்ளிப்பரிகாரி உரத்த குரலில் யாரையோ அதட்டும் சத்தம் கேட்டது. சில கெட்ட ஆவிகள் வெள்ளிப் பரிகாரிக்கும் அடங்குவதில்லை எனினும்ää அவற்றை ஜின்களின் உதவி கொண்டுää அவர் விரட்டியடிக்கும் காட்சியை வெள்ளிக் கிழமை தோறும்ää தன்னைத் தவிரää வேறு யாராலும் பார்க்கமுடியாது என்றும்ää இந்த ~ஜின் ஆட்டும்’ நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நடைபெறும் என்றும்ää அன்று நோயாளிகளைப் பார்வையிடமாட்டார் என்றும் உதவியாளர் சொன்னார். பன்னீர்ப் போத்தல் ஒன்றுக்குள் நோயாளியின் சுட்டு விரலை நுழைத்து வெளியே எடுத்தால்ää விரல்ää அப்படியேää பளபளக்கும்ää வெள்ளி உலோகமாக மாறியிருக்குமாம். அப்படி ஆகினால்ää உடம்பில் ~சூனியம்’ இருக்கிறதென்று அர்த்தமாம். அந்த வெள்ளி விரலின் மீது ~ஜின்’ வந்து ஆஜராகுமாம். அதனிடம்ää நோயாளியின் சுயவிபரங்களையும்ää பரிகாரி கேட்டறிந்து கொண்டுää அதற்கேற்ப வைத்தியம் செய்வாராம்.
இப்படித்தான் ஒரு அரசியல்வாதிக்கு ~ஜின் வாசிலாத்து’ முறைப்படி ஒரு வேலை செய்து கொடுத்ததில்ää அவர்ää மூன்றே மாதத்தில் அமைச்சர் ஆகிää தன் நன்றிக் கடனாக அன்பளித்தää ~ஜப்பான் சன்னி டபுள்கப்.| வெளிக் கூடாரத்தில். நிறுத்தி வைக்கப்பட்டிருந்தததைச் சுட்டிக் காட்டினார். பரிகாரி அதைப் பாவிப்பதே இல்லையாம். இறைசேவைää மனித சேவை தவிரää பொருளாதாரத் தேவைகள் பரிகாரிக்கு கிஞ்சித்தேனும் கிடையாதாம்.
சலுகாக்கிழவிக்கு ~ஜின்’களை ஆட்டுவிக்கும் இந்த இடத்திற்கு வந்த நேரத்திலிருந்து பயத்தால்ää மூத்திரம் போகப் பார்த்தாலும்ää வெள்ளிப் பரிகாரியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தது. புதுமணப்பெண்ணான தனது பேர்த்தி நஸீறாவின் இனம்புரியாத வியாதிக்கும்ää விசித்திரமான நடத்தைக்கும் இந்த இடத்தில்தான் சரியான தீர்வு கிடைக்கும் என்று திட்டமாக நம்பினாள்.
உள்ளே போயிருந்தää ஒரு தாயும்ää அவளது காதுகேளாத சிறுவனும்ää வெளிவரமட்டும்ää அடக்க முடியா ஆவலுடன் காத்திருந்தனர். சலுகாக்கிழவி பரபரப்புடன்ää தனது பேர்த்தியின் கதையை வெள்ளிப் பரிகாரியிடம் எப்படிச் சொல்லுவதென்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.
திடீரென்று உள்ளறைக் கதவு திறந்து உள்ளே சென்றிருந்தவர்கள் வெளியே வந்தனர். சலுகாக் கிழவியும்ää நஸீறாவும்ää பரபரப்படன் எழுந்திருந்தனர். உதவியாளரின் சமிக்ஞையை அடுத்துää உள்ளறைக்குள் பயபக்தியடன் நுழைந்தனர். உள்ளே..
விசாலமான ஒரு அறை. சற்றே இருள். கும்மென்ற பல்வகை வாசைன.. ஊதுபத்திப் புகை.. அறைமுழுக்க விநோதமான பொருட்கள்.. கடற்கரும் பவளக் கொடிகள்.. பெரியபெரிய கிரந்தங்கள்.. பச்சைப் பெரிய படுதா.. அதில்ää மலையாள எழுத்துக்களில் வேலைப்பாடுகள்.. மக்காமதினாப் படங்கள்.. குவிந்து கிடக்கும்ää மூலிகை வேர்கள்.. கொடிகள்.. செடிகள்.. பெரிய பாத்திரத்தில்ää கடல் நீர்.. மயில் தோகை.. அடுக்கப்பட்டிருக்கும் காலிப் பன்னீர்ப் போத்தல்கள்.. மேலும் பல எண்ணெய் வகைகள்.. பயமுறுத்தும் பக்திமயமான பின்னணியில்ää அறையின் நடு மையத்தில்ää சம்மணமிட்டுää கண்கள் மூடி ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார் வெள்ளிப் பரிகாரி. அவரது முகம் எவ்விதமான சலனமுமற்றிருந்தது. கருகருவென்ற தலைமுடி சடாமுடியாக வளர்ந்து தோள்கள் தாண்டி தாறுமாறாகத் தொங்கின.. தாடியும் மீசையும்ää அழகுற வாரப்பட்டுச் சீராக அப்பிப் போய் இருந்தன. நீண்ட கூர்மையான மூக்கில் நிச்சயம் வசீகரம் இருந்தது.
சலுகாக்கிழவியும்ää நஸீறாவும்ää பக்திப் பரவசத்துடன்ää எதிரே கிடந்த பாயின் மீது அமர்ந்தனர். அவரது நிஷ்டயைக் குழப்பாமல் அமைதியாகவிருந்தனர். சற்று நேரத்தில். வெள்ளிப் பரிகாரி கண்களைத் திறந்தார்ää இவர்களைப் பார்த்தார். அவரது தீட்சண்யமிக்க விழிகளின் ஊடுருவலில்ää அதிசயமான ஒரு ஒளி மின்னுவதாகப் புலப்பட்டது. வெள்ளிப் பரிகாரிää இதழ்களைத் திறந்து மெதுவாகப் புன்முறுவலித்;;தார். பின் திடீரென்று கூறினார்.
~வந்ததும் தெரியும். போறதும் தெரியும். புள்ளட உடம்புல கொதிக்கிற கொதி ஆண்பிள்ளையளத் தீய்ச்சுரும். எல்லாம் பெரியவஹ சொல்லித் தந்தது.. சரி..சரி.. ஆருக்குப் பார்க்கனும் நீங்க..?|
இருவரும் திடுக்கிட்டுப் போயினர். தன் பேர்த்தியின் நோயைச் சரியாக விளங்கிக் கொண்ட வெள்ளிப் பரிகாரியை வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்த சல்ஹா கிழவி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மெதுவான குரலில் சொல்லத் தொடங்கினாள்.
~இவள் என்ட பேத்தி. மகள்ள மஹள் பாபா.! பத்தொம்பது வயஸி. கலியாணம் பண்ணி இப்ப ஆறு மாசம். பண்ணின நாள்லயிரிந்து புரிசனோட ஓயாத சண்டை. ஒவ்வொரு நாளும் வாய்ச்சண்டதான். இவளுக்கு என்னவும்ää சூனியம்ää கீனியம் இரிக்கா ல்லாட்டிää இவளுக்கு பெசாசி என்னயும் புடிச்சிருக்கா எண்டு பாத்துச் சொல்லனும் பாபா.’
~பாக்கலாம்.. பாக்கலாம்.. ஏன் புள்ள உனக்குப் புரிசனப் புடிக்கல்லியா..?’ நஸீறாவிடம் நேரடியாகக் கேட்டார் வெள்ளிப் பரிகாரி.
~…………………..’ நஸீறா பேசாமல் தலைகுனிந்து விட்டாள். சலுகா கிழவி கொஞ்சம் ஆத்திரப்பட்டுää
~செல்லேண்டி பண்டீ..! பரிசாரியாரு ஒண்ட நன்மக்கித்தானே கேக்காஹ. வாயத் தொறந்து கேக்கிற கேள்விக்குப் பதில் செல்லுடி. ல்லாட்டிää பரிசாரியாரு ஒண்ட வாயப் பூட்டிருவாரு ஒருநாளும் தொறக்காதபடி..ஓவ்..’
நஸீறாää திடுக்கிட்டுப் போய் வெள்ளிப் பரிகாரியை மருண்ட விழிகளுடன்ää நிமிர்ந்து பார்த்தாள். அவரின் கண்கள் தீட்சண்யத்துடன் நஸீறாவின் விழிகளை ஊடுருவின. அவள் தன் கண்களை விடுவிக்க முடியாமல் மிரண்டாள். திடீரென வெள்ளிப் பரிகாரியின் கண்களில் ஒரு கனிவு உற்பத்தியானது. மறுபடியம் கேட்டார்.
~ஏன் புள்ளே.. உனக்குப் புரிசனப் பிடிக்கல்லையா..?’
நஸீறா தயங்கி மெதுவாகச் சொன்னாள். ~அப்படீ..ண்டு.. ல்ல..’ பேச முடியாமல் வெட்கத்தில் மறுகினாள்.
~அப்ப ஏன் சண்டை பிடிக்காய்..?’ விடாமற் கேட்டார்.
~…………..’ நஸீறா பேசவில்லை. நாணத்துடன் தலை குனிந்தாள். சலுகாக் கிழவி கோபமாகää
~செல்லேண்டி பண்டீ..! வேள் ப்பிடித்தான் பாபா.. புரிசன் நல்ல ஆள் ண்டு செல்றாள். ஆனா ராப்பட்டா விடியிம் வெரைக்கும் சண்டதான். பிரிஞ்சி பிரிஞ்சி படுக்காள். புரிசனோட கிட்டப்படுத்தா வேளுக்கு எரியிதாம். ஏனுண்டு ஒரு எளவும்ää நெக்கி வெளங்குதுமில்ல. பாபா.. அவன் புரிசன்காரன் நெல்ல கொணமான பொடியன். கட்டுச்செட்டான ஆம்புள. வேள்ள வடிவக் கண்டு ‘கக்கிலிகிக்கிலி’ ஒண்டும் வாங்காமத்தான் பண்ணிட்டான். நெல்லா வச்சிருப்பான். வேளும் அவன விரும்பித்தான் சம்மதப்பட்டாள். ஆனா கலியாணம் முடிஞ்ச அண்டைக்கித் தொடங்கிட்டு சண்ட.. அவன் ஒண்டும் பேசறயில்ல. இவள்தான் அவனுக்கு ஏசறதும்ää பிரிஞ்சி படுக்கிறதுமா இரிக்காள் பாபா..’
~ஓகோ.. ஏன் புள்ளே அப்பிடி..?’ வெள்ளிப்பரிகாரி புன்முறுவல் செய்தார்.
‘………………’
~செல்லேண்டி பண்டீ..! வேள என்னயோ பெசாசி புடிச்சி ஆட்டுது பாபா.. பகலயள்ள புரிசனோட கதைக்காள் சிரிக்காள்.. சோறு சாமான் குடுக்காள்.. வேலவாட செய்றாள். அவனுக்கு ஒரு கொறையும் ல்லாம எல்லாம் செய்றாள். ஆனாää அவன் தொட்டா மட்டும்ää கத்துறாள்.. துடிக்காள்.. அவன்ட கை பட்டா போதும்ää ஒரே மகுறம்தான்.. சண்டதான். அவன்ட ஒடம்பு பட்டாலே சுடுதுஹா.. தீய்க்குதுஹா.. கிட்டப் படுத்தா அனல் அடிக்குதுஹா எண்டு செல்றாள். அவரு கிட்ட வந்தாலேää இவள்ள உடம்பு நெருப்புத் தீய்க்கிற மாதிரி இருக்குஹா எண்டு கத்துறாள் குளர்ராள் பாபா.. செல்லேண்டி பண்டீ..!’
வெள்ளிப்பரிகாரி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சலுகாக் கிழவி தொடர்ந்தும் சொன்னாள்.
~இதையும் செல்லேண்டி பண்டீ..! வேற பொம்பிளயள்ள கைகால் பட்டா ஒண்டுமில்ல. ஆம்பிளயள்ள கை பட்டா இந்த மாதிரி நெருப்பாச் சுடுது சுடுது ண்டு செல்றாள். அப்பிடி தீய்க்குதாம்.. இத எத்தின நாளக்கிப் பாக்குற ண்டுட்டு புரிசன்காரனும்ää இவள்ள வருத்தத்த மொதல்ல சொகமாக்கித் தாங்க ண்டு செல்லிட்டு போயிட்டான். அவனச் செல்லிக்குத்தமில்ல. புது மாப்பிள்ள என்ன செய்வான்.. ண்டாலும்ää ரெண்டு நாளைக்கு ஒருக்கா வந்து பாத்துட்டுப் போறான். இது என்ன ~கொதறத்து’ பாபா.. வேளப் புடிச்சிரிக்கிற ~முசிபத்து’ பெசாசா.. ல்ல சூனியம் கீனியமா.. எங்கள ந்தக் கய்ட்டத்துல இரிந்து மூட்டு உட்றுங்க பாபா.. காணிக்கையும்ää மாடும் அறுத்துப் பலி தாரன்.’
~……………’
~ஒங்களத்தான் நம்பி தொலதூரத்துல யிரிந்து வந்திரிக்கம் பாபா.. எப்பிடியும் வேள நெல்லாக்கித் தரணும்.. புரிசனோட சந்தோயமா வாள வெய்க்கனும்.. பாபா..| சலுகாக்கிழவி சட்டென அழ ஆரம்பித்தாள். நஸீறா தலை நிமிராதிருந்தாலும் அவளும் அழுவது புரிந்தது.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளிப்பரிகாரி
~சரிம்மா.. இது ஒரு குணம் காட்டுது. என்னண்டு பார்ப்பம்.’
பக்கத்திலிருந்த ஊதுபத்திக் கட்டை எடுத்தார். கொளுத்தி ஒரு குவளைக்குள் நிறுத்தினார். கும்மென்று எழுந்த நறும்புகை அனைத்தையும் தன் மூக்கினருகே கொணர்ந்து ஆழமாகச் சுவாசித்தார். பின் பக்கத்திலிருந்த பன்னீர்ப் போத்தலை எடுத்தார். திறந்து மடமடவென்று பாதியளவு குடித்தார். வாய்க்குள்ளிருந்த கொஞ்ச மீதிப் பன்னீரை யாரும் எதிர்பாராதவிதமாக நஸீறாவின் மீது சட்டென்று பீய்ச்சித் துப்பினார்.
திடுக்கிட்ட நஸீறா முகத்தில் சுளீரெனப் பாய்ந்த பன்னீரை கையால் துடைத்தபடி ஆத்திரமும்ää பயமுமாக வெள்ளிப் பரிகாரியைப் பார்த்தாள். உடனே வெள்ளிப் பரிகாரி உரத்த குரலில்ää
~ஹேய்.. ஜபர்தார்.. வா..வா..’ என்று சொல்லியபடி நஸீறாவின் கன்னத்தில் பளீரென அடித்தார். ஏதோ புரியாத பாஷையில் மளமளவெனச் சில மந்திர உச்சாடனங்களை ஒப்புவித்தார். சட்டென நஸீறாவின் இடதுகைச் சுட்டு விரலை தொட்டார். தீச்சுட்டாற் போலக் கதறி நஸீறா தன் விரலை விடுவிக்கப் போராடினாள். ஆனால்ää வெள்ளிப்பரிகாரி அந்த விரலை விடாது பற்றிப் பிடித்துக் கொண்டுää பாதியிருந்த பன்னீர்ப் போத்தலுக்குள் அந்த விரலை பலவந்தமாக நுழைத்தார். வெகுவேகமாக ஏதேதோ மந்திரங்கள் உச்சரித்தார்.
தன் விரலை விடுவிக்க நஸீறா போராடினாலும் முடியவில்லை. தீக்குள் விரலை வைத்தாற் போன்று அவள் துடித்தாலும்ää பரிகாரி அது பற்றிக் கவலைப்படாமல்ää தன் உச்சாடனத்திலேயே கவனமாகவிருந்தார். நஸீறாவின் போராட்டம் கொஞ்சம் குறைந்தது.
~இப்பவும் சுடுதா..?’ என்ற வெள்ளிப் பரிகாரி விரலை விடாது மீண்டும் உச்சாடனம் செய்தார். சலுகாக் கிழவி பதைபதைக்கும் நெஞ்சத்துடன் இவற்றைப் பார்த்தக் கொண்டிருந்தாள். சட்டென வெள்ளப் பரிகாரிää நஸீறாவின் அந்த விரலை போத்தலை விட்டும் மெதுவாக வெளியே எடுத்தார்.
~ஆ…..!’
~எ..என்ட ல்லாவே..ய்…?’
பெண்கள் இருவரும் அலறிவிட்டனர். நஸீறாவின் இடதுகைச் சுட்டுவிரல் மட்டும்ää வெள்ளி உலோகத்தில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. அவ்விரலை மடக்கவும் முடியவில்லை. திண்மமான வெள்ளியில் வார்க்கப்பட்டாற் போன்று கடினமாக நீட்டியபடியே இருந்தது. அது பன்னீரில் நனைந்திருந்தது. வெள்ளிப்பரிகாரி சற்றும் பதற்றமின்றி அந்த வெள்ளி விரலை பிடித்தபடியேää மறுகையால்ää மயிலிறகால்ää மெதுவாக வருடியபடி மேலும்ää சில மந்திர உச்சாடணங்கள் முணுமுணுத்தார். கால்மணிநேரம் இப்படியே கழிந்தது. பெண்களிருவரும் அவ்விரலை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தனர். ஆவலும்ää பயமுமாக வெள்ளிப் பரிகாரியைப் பார்த்தனர். அவர் கடகடவென்று சொன்னார்.
~ஓம்.. உண்மைதான்.. சர்வமும் உண்மைதான். நெருப்புத் தண்ணீர் ஊற்றித் தீயணைக்க முடியுமா.. ஜபர்தார்..?’
~……………..’
~சூரியனுக்கு தீமூட்டி பற்ற வைக்க முடியுமா ஜபர்தார்..?’
~………………………’
பெண்கள் இருவரும் யாரிடம் என்ன பேசுகிறார் என்று புரியாமல் அதீத பயத்துடனும்ää ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கää வெள்ளிப்பரிகாரி அந்த வெள்ளிவிரலைக் குறிப்பாகப் பார்த்தபடிää விரைவாக புரியாத ஒரு பாஷையில்ää ஏதோ அதில் தரிபட்டிருந்த அமானுஷ்யமான கட்புலனாகா உருவத்துடன் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பற்பல கேள்விகள்.. அமானுஸ்யமான ஒலியற்ற பதில்கள்.. சற்று நேரம். அழுகை.. பின் சினுங்கல்.. திடீரென அந்த விரலை மறுபடியும்ää பன்னீர்ப் போத்தலுக்குள் பலவந்தமாக நுழைத்தார். இப்போதுää அவ்விரல் சாதாரணமாக முன்பிருந்தது போல் மாறிவிட்டது. நஸீறாவுக்கு உடனே மறுபடியும் அந்த விரல் பழையபடி நெருப்பாகச் சுட்டது. உதறி விடுவித்துக் கொண்டாள். வெள்ளிப்பரிகாரி சற்றுநேரம் யோசனையிலிருந்தார். பின்னர் சற்றே நிமிர்ந்து சலுகாக் கிழவியைப் பார்த்துää
~ம்மா.. உன்ட பேத்திக்கு பெரிசா ஒண்டுமில்ல வருத்தம். ஆனா இவளுக்கு தின்கிற சாமான் ஒண்டுலää பில்லி சூனியம் செஞ்சி உள்ளுக்குக் குடுத்திருக்கு. அது உள்ளுக்க இருக்கிற மட்டுக்கும் இப்படித்தான் ஆண்களின் உடம்பு பட்டால் தீப்பற்;றி எரியும். அதை வெட்டி விட்டால்தான் இது அடங்கும். குளிராகும்.’
~எ..அ..துக்கு என்ன பாபா செய்யனும் நாங்க.. எம்பட்டுச் செலவு ண்டாலும்..’
~செலவப் பத்தி ஒண்டுமில்லம்மா.. சின்னதா ஒரு தேசிக்காய் வெட்டி கழிப்புச் செஞ்சிரலாம். இஞ்ச வச்சே வேலைகளை முடிச்சி சுடலைக்க போய் தாட்டுட்டு வந்தாச் செரியாகும். பெரியவஹட கிருபையால..’
~அதுக்கு நாங்க என்ன செய்னும் பாபா..’
~ம்மா நீ கொஞ்சம் வெளியே போய் இருங்க.. கூப்பிடுரன்..’
சலுகாக் கிழவி அவசரமாக எழுந்து வெளியே வந்து விட்டாள். வெள்ளிப்பரிகாரியின் மீதுää இப்போதுää பூரண நம்பிக்கை வந்து விட்டது. இவ்வளவு காலமும் இவளை ஆட்டி வைத்த பிசாசுச் சூனியம் வெட்டிக் கழிபட்டு தன் பேர்த்திக்குச் சுகம் கிடைக்கப் போவதையெண்ணி மாளாத நிம்மதியடைந்தாள். அவசரமாகää மடியை அவிழ்த்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டேää உள்ளறையை நோக்கினாள். உள்ளே வெள்ளிப்பரிகாரிää நஸீறாவின் முகத்தருகே நன்றாகக் குனிந்து அவளுக்கு மந்திரங்கள் சொல்லி ஊதிக் கொண்டிருந்தார். அவரது கண்கள் நஸீறாவின் விழிகளைக் கவ்விக் கொண்டிருந்தன. நஸீறாவம்ää வெள்ளிப்பரிகாரயையே கண்ணிமையாது கட்டுண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் சலுகாக்கிழவியை உள்ளே அழைத்தார் வெள்ளிப்பரிகாரி. உள்ளே நஸீறா சற்றுப் பயம் தெளிந்தவளாக சலுகாக் கிழவியைப் பார்த்துப் புன்னகைத்தாள். இதனைக் கண்டதும் கிழவி மஹா ஆனந்தப்பட்டு அதிசயித்தாள். வெள்ளிப் பரிகாரி இவளைச் சற்று நேரத்துக்குள் எப்படி மாற்றிவிட்டார்..
~ம்மா.. சரிதான்.. உள்ளுக்க இருக்கிற அசிங்கத்தை வெட்டிக் கழிச்சிரலாம். நீங்க என்ன செய்யனும்டால்ää நான் எழுதித் தார சாhன்களை ஒண்டுவிடாமல் வாங்கி எடுத்துக் கொண்டுää அடுத்த வெள்ளிக்கிழமை ஞ்ச வாங்க. மச்சம் மாமிசம் ஏதும் வீட்டுக்க எடுக்க வேண்டாம். ஊட்டுக்குத் தூரமான பொம்பிளஹளயும் தொட வேணாம். இந்தாங்க சாமான் லிஸ்ட்டு..’
~…………………….’
~செரி பாபா..’
~திப்பிலி நூறுகிராம். சுயம்பு அறுபது பட்டை.. கரும்பூனைப் பிடுக்கு.. கருத்தச் சேவல் ஒண்டு.. கஞ்சிரா வேருக் கட்டுää.. சாம்பிராணி.. ஊதுபத்தி.. தாயத்து.. அச்சிலக்கூடு.. அரைஞான்கயிறு ரெண்டு முழம்.. மறுகாக் கொஞ்சம் கடல்தண்ணி.. அவ்வளவுதான்.. இதுகள வெச்சி ஒரு சின்ன வேல செய்வம்.. அத்தோட சுகமாயிரும் பெரியவஹட கிருபையால.. சரி நீங்க போகலாம்.’
~இதெல்லாம் எங்க பாபா தேடி எடுக்கிற நாங்க..?’
~அப்படியெண்டால்ää வெளியால நிக்கற என்ட உதவியாளருட்ட காசைக் கொடு;த்தா அவரு எல்லாம் வாங்கி வச்சிருப்பாரு.. நீங்க வாற வெள்ளிக்கிழம வரலாம். அதுவரைக்கும் இந்த ஓதின பன்னீரை ஒவ்வொரு இரவிலயும் மூணு முடர் குடிக்கக் குடுங்க..’
~வெட்டிக் கழிச்சா ந்த வருத்தம் சுவராக் குணமாகுமா பாபா..?’
~நிச்சயமாக் குணமாக்கித் தாரன். விசயம் முடிஞ்சாää நீங்க திருப்திப்பட்டால்ää நீங்க வந்த வழியில இருக்கிற கட்டவெளிப் பள்ளிவாசலுக்கு அய்யாயிரம் ரூவா காணிக்கையாக் குடுத்திருங்க.. நான் செய்ர வேலைக்கு கூலி சம்பளம் வாங்கிறயில்ல.. சரி.. போய் அடுத்த கிளம..?’
~கட்டாயம் வாரம் பாபா..’ இவ்வளவு நேரமும் பேசாதிருந்த நஸீறாவே முதற்தடவையாக வாய்திறந்து சொன்னதும் கிழவிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உண்மையில் என்ன மாயம் இது..?
~இப்ப நீங்க போகலாம்.’ வெள்ளிப்பரிகாரி நஸீறாவைப் பார்த்துச் சொன்னார். நஸீறா மிகுந்த வெட்கத்துடன் சலுகாக்கிழவியுடன் எழுந்தாள். அவளது கன்னங்கள்ää ஏதோää உள்ளார்ந்த எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகää நாணத்தால் சிவப்பேறியிருந்தன.
இருவரும் மஹா திருப்தியுடன் வெளியேறினர்.
0
வெள்ளிக் கிழமை. உச்சிப் பொழுது.! வெள்ளிப்பரிகாரி இன்று நோயாளர் எவரையும் பார்ப்பதில்லை. இன்று மடை வைத்து ~ஜின்’ வசியம் செய்து பில்லி சூனியங்களை வெட்டுவது மட்டும்தான் நடக்கும்.
சலுகாக்கிழவியும்ää நஸீறாவும் தயாராக வந்திருந்தனர். இவர்களின் நேர்ச்சைப் பொருட்கள் வாங்கப்பட்டுத் தயாராகவிருந்தன. வெள்ளிப்பரிகாரி குளித்துää சடைமுடி சீவி அழகாகவும்ää கம்பீரமாகவும் வெளியிலேயே உட்கார்ந்திருந்தார். உதவியாளரும்ää விஷேட பச்சைத் தலைப்பாகையுடன் தயார் நிலையில் இருந்தார்.
~ம்மா.. சூனியம் வெட்டிக் கழிக்கப் போறம். உள்ளுக்கு இந்தப் பிள்ள மட்டும்தான் என்னோட இருக்கனும். ஒடம்பு கொஞ்சம் எரியிற மாதிரி இரிக்கும்.. ஆனாப்ää பயப்புடத் தேவையில்ல.. நீங்க இந்த தேநீரைக் குடிச்சிட்டு அப்படி கூடாரத்து நிழல்ல குந்தியிருங்க. ஒரு ரெண்டு மணித்தியாலம் ஆகும் வேலை முடிய..’
~செரி பாபா..’
~ம்மாவும் கூட இருக்கட்டும் பாபா..’ என்றாள் நஸீறா தயங்கியபடியே.
~ம்மாக்கு ல்ல வருத்தம் உனக்குத்தானே.. மத்தது ~ஜின்’ வார நேரம் அவ தாங்க மாட்டா..’
~டியே.. பண்டி.. நான் ஞ்சதானே குந்தியிரிக்கன் நீ மட்டும் உள்ளுக்குப் போவண்டி.. பண்டி..’
சட்டென வெள்ளிப்பரிகாரி எழுந்து தனது பிரத்தியேக அறைக்குள் நழைந்தார். உள்ளிருந்து கமகமவென்று சாம்பிராணி வாசம் பரவியது. சில உச்சாடன ஒலிகள் கேட்க ஆரம்பித்தன. உதவியாளர் மடைப் பொருட்களை அதற்குரிய வேலைகளைச் செய்து உள்ளே கொணர்ந்து வைத்துவிட்டுத் திரும்பி வந்துää நஸீறாவிடம் ஒரு வெள்ளைத் துணியைக் கொடுததார்.
~ந்தாம்மா.. உன்ர பிடவைகளக் களைஞ்சிட்டுää இந்த துணியக் கட்டிக்கிட்டு உள்ள போ!.~ நஸீறா கொஞ்சம் தயங்கினாள். ஆனால்ää உள்ளிருந்து திடீரென வெள்ளிப்பரிகாரியின் குரல் கேட்டது.
~வா புள்ளே..’
~போவண்டி பண்டீ.. போடி..’ சலூகாக் கிழவி உந்தித் தள்ளியதும்ää நஸீறா திரைமறைவுக்குச் சென்று தனது ஆடைகளை நீக்கிää கமகமத்து மணத்த அந்த வெள்ளைத் துணியைக் கட்டிக் கொண்டு உள்ளே தயக்கமாக நுழைந்தாள்.
சலுகாக்கிழவி வெளியே மரத்தடியில் குந்திக்கொண்டு உதவியாளரின் ஜின் விவகாரங்களையும்ää பேயாட்டக் கதைகளையும்ää அதி சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கää உள்ளிருந்துää பற்பல குரல்களில் மந்திர உச்சாடனங்கள் கேட்க ஆரம்பித்தன. அரைமணிநேரம் கழிந்ததும்ää உதவியாளர் உள்ளறைக்குள்ää குளிர்பானமும்ää சில பழங்களும் கொண்டு சென்று கொடுத்து விட்டு வந்தார். சலுகாக் கிழவிக்கும் தேநீர் கொடுக்கப்பட்டது. தேநீரைக் குடித்துவிட்டுää எழுந்த சலுகாக்கிழவிää அடக்கமாட்டாத ஆவலுடன் மெதுவாகச் சென்று உள்ளறைக்குள் கதவிடுக்கால் எட்டிப் பார்த்;தாள். உள்ளே நஸீறா சம்மணமட்டு உட்கார்ந்திருக்க வெள்ளிப்பரிகாரி கண்களை மூடியபடி உச்சாடனம் செய்து கொண்டிருந்தார். மிகத் திருப்தி கொண்ட கிழவிää பரிகாரியின் மூலிகைத்தோட்டத்தில்; சற்று உலவச் சென்றாள். தன் பேர்த்திக்குப் பீடித்த இனம்புரியா நோய் இன்றுடன் பறந்து விட்டது. அவள் இனித் தன் கணவனுடன் நன்றாகச் சேர்ந்து வாழ்வாள்.. பிள்ளை பெறுவாள்.. இதற்குக் காரணமான தன்னை அவர்கள் வாழுமட்டும் வாழ்த்துவார்கள்.. கற்பனைச் சிறகடிப்பில் நேரம் போனதே தெரியவில்லை.
சலுகாக்கிழவி சுமார்ää ஒரு மணிநேரத்தின் பின்னர்ää தோட்டத்தை விட்டும்ää வெளிவந்துää வெள்ளிப்பரிகாரியின் அறையை நோக்கி வந்தாள். உதவியாளரைக் காணவில்லை. உள்ளறைக் கதவு இறுகச் சாத்தப்பட்டிருந்தது. சாம்பிராணிப் புகை மட்டும் வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஆனால்ää நஸீறாவின் குரல்; மட்டும் சற்றே கேட்டாற் போலிருந்தது. கிழவி பதைபதைப்புடன் அறைக் கதவை நெருங்கினாள். இப்போதுää நஸீறாவின் தெளிவான ஆர்வமிக்க குரல்ää
~;ச்சீ..ம்ம்...| என மெதுவாகச் சினுங்குவது போல் கேட்டது. சலுகாக்கிழவி அடக்கமுடியாத ஆர்வமாக பூட்டியிருந்த கதவின் சாவித் துவாரத்தின் வழியே கண்களை வைத்து உற்றுப் பார்த்தாள்.
உள்ளே மங்கலான இருட்டில் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. சற்று நேரத்தில்ää உள்ளறைக் காட்சிகள் கொஞ்சமாகத் தெரிந்தன.. வெள்ளிப்பரிகாரியின் அகலமான கறுத்த முதுகுப் பாகம் தெரிந்தது. வெள்ளிப் பரிகாரி இடுப்பில் கைவைத்தபடி கதவுக்கு முதுகைக் காட்டியவண்ணம் வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்தார். இன்னும் சாய்கோணமாகப் பார்த்த போதுää பளபளவென்ற வெள்ளி உலோகத்தில் செய்யப்பட்டதைப் போன்று தெரிந்தது நஸீறாவின் இடதுகைச் சுட்டுவிரல்..? அல்ல..! கிழவி சர்வாங்கமும் அதிர்ந்து போனாள்.
ஒரு ஆணிண் விரல்நுனி பட்டாலே தீப்பற்றினாற் போன்று தகித்துக் கதறும் உடற்தன்மை கொண்ட நஸீறாää எவ்விதமான ஆட்சேபனையுமின்றி வெள்ளிப்பரிகாரியின் வெற்று மார்பின் மீதுää வெட்கத்துடன்ää சாய்ந்து கொண்டுää தனது வெள்ளி விரலால்ää அவரது முதுகின் மீது ஆர்வத்துடன்ää வருடிக் கொண்டிருந்தாள்.
நஸீறாவுக்கு நோய் முழுவதுமாகக் குணமாகி விட்டது போலும்.0
0000000000000000000000
No comments:
Post a Comment