காலவட்டம்
எப்போது தொடங்கியதென்று தெரியவில்லை.
ஆனால்ää அப்போது
ஆயிரத்து எழுநூற்று எண்பத்தி எட்டாம் ஆண்டில்ää ஒருநாள்ää
1788.05.01.
...................த்தான். சுவாசிக்கத் திணறினான். இது வன்னி நிலத்தின்ää அடர் வனப்பகுதி. அதி விடியலின் இருட்டு. ஒல்லாந்து நாட்டு டச்சுப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல். வான்ஸ்டைமன் இரண்டாம்; எல்லாள மன்னரின் தமிழ்ப்படை வீரர்களால்ää துரத்தப்பட்டுக் கொண்டிருந்தான். இருளி;ல் மரங்களில் மோதி விழுந்தான். வாயால் நிறையக் காற்று வாங்கி விழுங்கினான். ஓடச் சக்தியற்று விழுந்;தான்.
ஒன்றும் புரியவில்லை. ஞாபகத் தொடர்கள் அறுந்தன. தூரத்தே பீரங்கி முழக்கம் கேட்டது. தாகம் வாட்டியது. உடலில் ஆங்காங்கேää இரத்தம் அப்பி மசமசத்தது. உணரும் இடமெல்லாம் வலித்தது. கண்கள் பற்றி எரிந்தன. இலக்குத் தெரியாமல் விழுந்தான். உயிர்ப்பயத்தால் மறுபடி உந்தி எழுந்தான். முடியாமல் தடுமாறினான். விழுந்தான்.. மண்டியிட்டு ஊர்ந்தான். இலக்கின்றித் தவழ்ந்தான். எதிரிப்படை வீரர்களின் குதிரைகளின் கனைப்புச் சத்தங்கள் பயங்கரமாக அருகில் கேட்டன.
இரண்டாம் எல்லாள மன்னரின் தமிழ்ப்படை வீரர்கள் தேடி வருகிறார்கள். தீபப்பந்தங்கள் நெருங்கி வந்தன. இவனைத்தான் தேடுகின்றார்கள். தமிழ்க்குரல்கள் மிக அருகே கேட்டன. வான்ஸ்டைமன் மூச்சின்றிப் பதுங்கினான். அடர் புதரில் உயிர்ப் பிச்சை தேடிப் புகுந்தான். விஷப் பாம்புகளின் பயத்தை விட உயிர்ப்பயம் வென்றது. அப்படியே புதரில் மறைந்து கிடந்தான்.
புரவிகள் அருகில் வந்து நின்றன. தமிழ்க் குரல்கள் கேட்டன. ஓன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தில் யாரோ உரக்க ஏதோ சொல்வது கேட்டதுää திடீரென புரவிகள் கனைத்துத் திரும்பின. தீபப்பந்தங்களின் ஒளி குறைந்தன. திரும்பிப் போகிறார்கள். கொஞ்சம் உயிர் நம்பிக்கை வந்தது. யாழ். மண்ணின் அசைக்கவே முடியாத முடியாதென நம்பப்பட்ட டச்சுக் கோட்டை திடீரெனத் தாக்குதலுக்குள்ளாகி வீழ்ந்ததும்ää அதன்ää பிரதான கட்டளைத் தளபதி புதரில் கிடப்பதும்…யோசிப்பதும் அவனுக்கே புதுமையாயிருந்தன.
பலம் பொருந்திய இந்த டச்சுக் கோட்டை இரண்டாம் எல்லாள மன்னரின் வீரர்களிடம் எதிர்பாராதவிதமாக வீழ்ந்ததும்ää மதுவருந்தி பஸ்கா பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தää ஒல்லாந்து வீரர்கள் சிதறி ஓடியதும்ää ஒரு கனவு போலத்தானிருந்தது. ஆனால்ää இது ஜீரணிக்க முடியாத நிஜம். வான்ஸ்டைமனுக்கு மறுபடி மரணபயம் வந்தது. இன்னும் சற்று நேரத்தில்ää விடிந்து விடும். வெளிச்சம் பரவி விடும்.. ஒல்லாந்துப் படைகள் தேடி வந்து காப்பாற்றும் என்று நம்பிக்கையில்லை. இது எந்த இடமென்றும் தெரியவில்லை. இவனை உடனேயே அடையாளம் கண்டு விடுவார்கள். செம்பட்டைத் தலையும்.. சிவப்பு உடம்பும்.. உடன் எச்சரிக்கையாக எழுந்தான். இரைத்தது. தயங்கித் தயங்கிää எச்சரிக்கை உணர்வோடு நடந்தான் வெளிச்சம் வருவதற்குள் எங்காவது போய் விட வேண்டும். உத்தேச திசையில்ää வலிக்க வலிக்க எட்டு வைத்தான். யாரையும் காணவில்லை.
சிலீரென்று நீரோடை குறுக்கிட்டது. குனிந்து குளிர்ந்த நீரை அள்ளிக் குடித்தான். கொஞ்சம் தெம்பு வந்தாற் போலிருந்தது. மேலும் தாமதிக்காது ஓடையைக் கடந்தான். எஞ்சிய பயத்தை விரட்டியபடி கூடிய முயற்சியோடு விரைவாக தத்தி நடந்தான்.
சிறிதுசிறிதாக வெளிச்சம் பரவ ஆரம்பித்தது. வான்ஸ்டைமன் ஊகித்த திசை ஓரளவு சரியாகவே இருந்தது. ஓன்றிரண்டாய் குடிசைகள் தெரிய ஆரம்பித்தன. பதுங்கி நடந்தான். வெகு முன்னெச்சரிக்கையோடு குக்கிராமத்தை நெருங்கினான். தூரத்தே மாரியம்மன் கோயில்ää கோபுரம் மங்கலாகப் புலப்பட்டது. உடனே வான்ஸ்டைமனுக்கு இது நாகர்சேரி என்பது விளங்கி விட்டது. டச்சுக் கோட்டையிலிருந்து சுமார் நான்கைந்து கற்கள் தொலைவில் இது இருக்கிறது. உடனே அவனுக்குத் தான் செல்ல வேண்டிய பாதை தெளிவாகி விட்டது.
விரைவாகத் திரும்ப்p கோயில் பக்கமாக சற்று மெதுவாக ஓட ஆரம்பித்;தான். வலி பிடுங்கியது. பொருட்படுத்த முடியாது. இரண்டாம் எல்லாள மன்னரின் தமிழ்ப்படை வீரர்கள் எந்நேரமும் குறுக்கிடக் கூடிய அபாயம் இருந்தது. பொதுமக்கள் அல்லது ஆஸ்ரம ஊழியர்கள் யார் கண்டாலும்ää காட்டிக் கொடுத்து விடுவார்கள். கூடியவரை பனங்காட்டுப் புதர்களுடாகப் பதுங்கிச் சென்றான். கறுப்பு மண்ணை அள்ளி கைகளிலும் முகத்திலும் தடவிக் கொண்;டான்;. மேலும் நடக்...
- யாரங்கே..?
அதட்டலாக ஒலித்த திடீர்க் குரலால் திடுக்கிட்டான். உடனே கைகளை மேலே தூக்கி விட்டான். மரணப்பீதி உயிரைக் கௌவியது. மெதுவான அநிச்சையாகத் திரும்பினான். குரலுக்குரிய உருவம் மெதுவாக இவனை நோக்கி வந்தது. ஓ…கறுத்த தடியான உருவம்.. மொட்டைத் தலை. திருநீறு ஏடாகூடமாக அப்பிக் கிடந்தது. மார்பில் பூநூல்.. கைகளில் தட்டில் அதிகாலைப் பூக்கள். …மாரியம்மன் கோயில் குரு. நெருங்கி இவனை உற்றுப் பார்த்து.
- எட.. தாங்கள் கேப்டன் வான்ஸ்டைமன் அல்லவா?
தன்னை ஒரு கோயில் குரு சந்தேகமற இனம் கண்டு கொண்டார் என்பதை அவர் தன் பெயரை தீர்க்;கமாக உச்சரித்ததிலிருந்தே உணர்ந்து திகிலடைந்தான். இருவரும் சற்று ஒருவரையொருவர் நெருங்கியதும்ää அசைவற்று நின்றனர். ஏதும் பேசத் தொடங்கு முன்னரேää பெரும் பனைக் காட்டை ஊடுருவிய படி சில புரவிகள் விரைந்து வருவது தூரத்தே தெரிந்தது. ஓ.. எல்லாள மன்னரின் வீரர்கள் வருகிறார்கள்.
- காப்பாற்றுங்கள் குருவே..
வான்ஸ்டைமன் திகிலுடன் கூவினான். மெல்லிய கதறலுடன் குருவின் கால்களில் விழுந்து கட்டிப் பிடித்தான். குரு திகைத்துப் போய் தூரத்தே விரைந்து வரும் புரவி வீரர்களைப்; பார்த்தார். வான்ஸ்டைமன் முனகியபடியே அவரது கறுத்த பாதங்களில் தன் முகத்தைத் தேய்த்தான். விழி நீரால் நனைத்தான். முக்கி அழுதான்.. டச்சு மொழியில் பிதற்றினான்.. தீனமாக உயிர்ப்பிச்சை இரக்கும் இந்தக் குரல்..? இந்தக் குரலை.. எப்போதோ கேட்டிருப்பது போலுணர்ந்தார்.. எப்போது.. ஒரு யுகத்தின் முன்னரா..? குருவின் உடல் திடுக்கிட்டு நடு;ங்கியது. குரு கீழே குனிந்து அவனது விழிகளைப் பார்த்....
அதன் பின்னர்ää
ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தி எட்டாம் ஆண்டில்ää ஒருநாள்ää
1888.05.01.
................தார் அர்ச்சகர். விழிகளில் உயிர்ப்பிச்சைக்கான இரப்பு.. புதுமையாவிருந்தது. இது பிரிட்டிஷாரின்; காலம்.. பழைய ஒல்லாந்துக் காலமல்ல. நவீனத்துவக் காலம்.. இங்கிலாந்து நாட்டின்ää பிரிட்டிஷ் படைக் கட்டளை அதிகாரி கப்டன் மக்மில்லன் ஹென்றி ஒரு சாதாரண கறுப்புக் கோயில் அர்ச்சகரின் கால்களில்..
கப்டன் மக்மில்லன் ஹென்றியின் பரிதாப விழிகள் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சின. விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று பல யுகங்களுக்கு முன்னரும்ää இவ்வாறே ஒரு சம்பவம்ää இதே மாதிரி வேறு ஒரு சூழலில்ää நடைபெற்றதாக நினைவில் சிக்கியது. ஆயினும் ஞாபகத் தொடர் அறுந்து சரியாக நினைக்க முடியவில்லை. நிச்சயமாக இதே கெஞ்சும் பரிதாப விழிகளை பார்த்திருக்கிறார். யுக யுகாந்திரமாகத் தொடரும்ää ~விழியீர்ப்பு விசை|யா இதுää?
சிந்திக்க நேரமில்லை. வன்னி மன்னர் பண்டாரவன்னியனின் கிளர்ச்சிப் படை வீரர்கள்ää ஆங்கிலேயப் படைகளிடமிருந்து கைப்பற்றிய ஜீப் வண்டிகளில்ää வன்னிக் காட்டை ஊடுருவியபடி நெருங்கிக் கொண்டிருந்;தனர். இனி செய்வதற்கொன்றுதானிருந்தது. அர்ச்சகர் துரிதமாகச் செயற்பட்டார். காலடியில் மயங்கிக் கிடந்த கப்டன் மக்மில்லன் ஹென்றியின் மீது தன் நீண்ட காவியை உருவிப் போர்த்தினார். சில புதர்களைச் சாய்த்து மறைத்தார். விரைவாகப் புதரை விட்டும் வெளியே வந்தார். வேறொரு புதரை அண்டிச் சென்று சாதாரணமாகப் பூப்பறிக்க ஆரம்பித்தார்.
ஜீப் உரசியபடி வந்து நின்றது. கிளர்ச்சிப் படை அதிகாரி அர்ச்சகரை உற்றுப் பார்;தான். மார்பில் புலித் தலையிட்ட சீருடை அணிந்திருந்தான். இடையில் நீண்ட வாளும்ää தோளில்ää அதிசயமாக உள்ளுர்த் தயாரிப்புத் துப்பாக்கியும் தரித்திருந்தான். அவனது விழிகளின் தீட்சண்யத்த்pல்ää அர்ச்சகரின்ää பார்வை தாழ்ந்தது. விரல் சொடுக்கி அர்ச்சகரை அழைத்தான்.
- அய்யரேää. ஒரு வெள்ளைக்காரன் ந்தப் பக்கம் ஓடி வந்தவனா..?
அதிகாலையிலேயே ஒரு கோயில் அர்ச்சகர் தன் இனத்து வீரர்களிடமேää பொய் பேசுவதா.. ஒரு வெள்ளையனைக் காப்பாற்றி தான் அகப்படுவதா.? ஆனால்ää அந்த விழிகளில் தெரிந்த யுகாந்திரத் தொடர்பு..?
- அய்யரே.. காது கேட்கல்லைப் போல.?
- ஓடி வந்ததைப் பார்க்கவில்லை அப்பனே.! என்றார் சாதுரியமாக..
அவநம்பிக்கையுடன் அர்ச்சகரைப் பார்த்தான் கிளர்ச்சிப் படை அதிகாரி அவனது கண்களில் தெரிந்த யுகாந்திரப் பகையுணர்ச்சியில் வெலவெலத்துப் போனார் அர்ச்சகர். இவனுமா..? மேற்கொண்டு ஏதும் கேட்காத கிளர்ச்சி அதிகாரி
- சரி.. எடு வாகனத்தை..
என்று கட்டளையிட்டதும் ஜீப் தூள் கிளப்பிப் பறந்தது. வாகனம் சென்று மறைந்ததும் அர்ச்சகர் விரைந்து செயற்பட்டார். புதரில் சுருண்டு கிடந்த கப்டன் மக்மில்லன் ஹென்றியை மிகச் சிரமத்துடன்ää தூக்கியும் இழுத்தும் வெளியே கொணர்ந்தார். கப்டனும் தனது இயலாமையுடன் அரைகுறைப் பிரக்ஞையுடன் கூட ஒத்துழைத்தான். மெதுவாக நடத்தி கோயிலை நெருங்கினார். கதவுகளைத் திறந்தார். அவனது விழிகளில் தெரிந்த அந்த அறுந்து போனää யுகாந்திரத் தொடர்பலையை மறுபடி தன் ஞாபகத்தில்ää இணைத்துப் பார்க்க ஆவலுற்றார்.. அறியாமையால் ஆவலுற்றார்.
கோயில் உள் மண்டபத்துள் கப்டனைச் சிரமத்துடன் கொணர்ந்தார். கதவுகளைத் தாழிட்டார். கர்ப்பக்கிருகத்தின் வலதுபக்க வாசலூடே கப்டனைத் தாங்கிச் சென்றார். ஓரளவான வெளிச்சத்தில் அவனை ஒருக்களித்துச் சாய்த்து வைத்தார். அவனது யுத்த ஆடைகளை நீக்கினார். குடத்திலிருந்த குளிர் நீரை வார்த்து முகத்தைத் துடைத்து விட்டார். நெற்றியில் திருநீறு இட்டார். ஸ்லோகம் ஓதி ஊதினார். சற்றே விசிறினார்.. கப்டனின் கண்கள் ஆயாசத்தில் இறுக மூடியிருந்தன. அவனது விழிகள் சொன்ன யுகாந்திரத் தொடர்பை அறிய காத்திருந்தார்.. நிச்சயமாக இவனை இதே போலொரு சூழலில் இதற்கு முன்னரும் எங்கோ எப்போதோ சந்தித்திருக்கிறார்.. எங்கே.. எப்போது..?
இரண்டு நிமிடங்களில் கப்டன் அசைந்தான். கண்களைத் திறந்தான்.. ஓ..! இதே விழிகள்.. ஆச்சரியத்துடன் அர்ச்சகரைப் பார்த்தான்.. சற்றுத் தெம்படைந்தான். சூழலை உணர்ந்தான். முனகி எழ முயன்றான். சட்டென மறுபடி அர்ச்சகரின் கால்களில் விழுந்தான். பற்றிப் பிடித்தான்.
- கால்களை விடுங்கள்.. எழுந்திருங்கள் கப்டன் மக்மில்லன் ஹென்றி அவர்களே..!
என்ற அர்ச்சகர் சற்றே விலகி நின்றார். அவனது விழிகளைத் தெளிவாக நோக்கினார். ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். ஆனால்ää
- ந..நான்.. இதற்கு முன் தங்களைச் சந்தித்திருக்கிறேனா கோயில் தந்தையே..? திடீரென ஆங்கிலத்தில் கேட்டான் கப்டன்.
- அப்படி இல்லை.. ஆயினும் கப்டனை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது போலிருக்கிறது. அர்ச்சகரும் சுத்;தமான ஆங்கிலத்தில் விடையிறுத்ததும்ää கப்டன் மேலும் அதிர்ந்து போனான்.
- மதிப்பிற்குரியகோயில் தந்தையே.. தமிழ்க்கிளர்ச்சிப்படையினரிடமிருந்து காப்பாற்றி எனக்கு உயிர்ப் பிச்சை தருவீர்களா.. இங்கிருந்து நான் நலமாகத் தப்பிச் செல்ல உதவுவீர்களா..?
- என்னால் எப்படி முடியும் கப்டன்.. நான்.?
- அப்படிச் சொல்லாதீர்கள் தந்தையேää நீங்கள்தான் இப்போது என் கடவுள்.. முன்னர் ஒரு தடவையும் இந்த உதவியை?
- இன்னும் வெளியே சண்டை நடந்து கொண்டிருக்கிறது.. தற்செயலாக அவர்கள் இந்தப் பக்கம் வந்தால்ää இதனைக் கண்டால்.. முதலில் என்னையல்லவா கொன்று விடுவார்கள்.. நானே நிச்சயமில்லாத போது தங்களுக்கு உயிர்ப் பிச்சை தர முடியுமா..கப்டன் மக்மில்லன் ஹென்றி அவர்களே..
கப்டன் மக்மில்லன் ஹென்றிக்கு தம்மிருவரதும் தற்காலிக உயிர் நிலை உறைத்தது. அர்ச்சகர் தானே வலிந்து தேடிக் கொண்ட விதியுடன் செயலற்றிருந்தார். அடுத்;து என்ன செய்வதென்றே தெரிவில்லை. என்ன பேசுவதென்றும் புரியவில்லை. கப்டனின் கண்களை சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்.. ஏதோ ஞாபகத்தில் இடறியது. பூஜைக்கு நேரம் தவறுகிறது. மௌனம் இறைந்து கிடந்தது.
பூஜைக்கு ஒரு சனமும் வராது. வெளியே யுத்தம் நடக்கிறது. இடையிடையே கோயிலின் வெளியே வாகனங்களின் சத்தம் உறுமி உறுமிக் கேட்டது. புரவிக் குளம்பொலிகளும் இடையிடையே கேட்டன.தமிழ்க்குரல்களில் சில தெளிவற்ற கட்டளைகள் தூரத்தே கேட்டன.. ம்;.. பண்டாரவன்னியன் படை வீரர்கள்.. பிரித்தானியர் முகாமிட்டடிருந்த ;நாக்சேர்ச்’ கோட்டை கிளர்ச்சியாளர்களிடம் விழுந்து விட்டமை சந்தேகமறப் புரிந்து விட்டது. இனித் தப்புவதற்கு எவ்வித வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. மாரியம்மனின் துணை தவிர.. அர்ச்சகர் சட்டென எழுந்தார்.
- கப்டன் மக்மில்லன் ஹென்றி ! இனி யோசிப்பதற்கேதுமில்லை. நான் இப்போதுää வெளியே கோயிலைப் பூட்டிக் கொண்டு கிராமத்துள் செல்லப் போகின்றேன். மாலையானதும் திரும்பி வருகிறேன். கொஞ்ச உணவும் கொண்டு வருகின்றேன். அதுவரைக்கும் இந்த மாரியம்மன் தங்கள் உயிரை வைத்திருந்தால் சரி.. நான் வந்ததும்ää கொஞ்சம் இருட்டானதும் தாங்களாகவே இங்கிருந்து வெளியேறி எங்காவது சென்று விடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
கப்டன் மக்மில்லன் ஹென்றி துரிதமாக எழுந்து அர்ச்சகரின் கைகளைப் பிடித்தான். கண்ணீர் குளமாகிக் கொப்பளித்தது.
- மிகவும் சரியான செயல். இந்த மகோன்னத உதவியை நா..ன் முன்னொரு தடவையும் பெற்றிருக்கிறேனோ என்று தோன்றுகிறது.. கோயில் தந்தையே..
ஆனால்ää படபடவெனக் கோயில் வெளிக்கதவு தட்டப்பட்டது. பலவந்தமாக ஆட்டப்பட்டது. இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்கள்.. அடுத்தகணம்ää கப்டன் மக்மில்லன் ஹென்றி ஒரே பாய்ச்சலில்ää மூலஸ்தானத்திற்குள் பாய்ந்து புகுந்து மறைந்தான். தட்டப்பட்ட கதவுகள் பயங்கரமாக ஆடின. கலகலத்தன… அர்ச்சகர் துரிதமாக உட்கதவைப் பூட்டிவிட்டு ஓடி வந்து வெளிக்கதவுகளை நடுங்கும் கரங்களால் திறக்கää
ஆவேசமாகப் புகுந்தனர் பண்டாரவன்னியன் மன்னரின் தமிழ்க் கிளர்ச்சிப்படை வீரர்கள். தலைமைத் தோற்றத்தில் தெரிந்த குழுத் தலைவன்ää ஆச்சரியத்தோடும்ää ஆத்திரத்தோடும்ää அர்ச்சகரை ஊடுருவிப் பார்த்.......
அதன் பின்னர்ää
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டாம் ஆண்டில்ää ஒருநாள்ää
1988.05.01.
....................த்தான். பச்சைக்கறுப்பு வரி இராணுவ உடையுடன் கம்பீரமாகவிருந்தான். கழுத்தில் சயனைட் குப்பி தொங்கியது. தோளில் நவீன ரகத் துப்பாக்கி தொங்கியது. புலித்தலையும் குறுக்காக இரு துப்பாக்கிகளும் பதி;த்த தொப்பி அணிந்திருந்தான். ஐயருக்குச் சந்தேகமேயில்லை. இவன் விடுதலைப் புலிகளின் படையணிப் பொறுப்பாளன். ஐயரை நோக்கி நடந்து வந்தான். அவநம்பிக்கையுடன் ஐயரைப் பார்த்தான். இவனையும் எங்கேயோ எப்போதோ கண்டிருப்பது போலுணர்ந்தார். இதே பகையுணர்ச்சிமிக்க விழிகளை எப்போதோ.. ஒரு யுகத்திற்கு முன்னரா..?
- ஐயரேää நாகச்சேரி இந்தியப் படை முகாமைக் கலைச்சிட்டம். லெப்டினன்ட். பகதூர்நாத் மட்டும் தப்பிச்சிட்டான். வெளியேயெண்டால்ää ஆளைக் காணயில்ல.. கோயிலுக்கயும் ஒருக்காப் பாத்துடுவமென்று வந்தனாங்கள்…
ஐயர் விதிர்விதிர்த்துப் போய் நாக்குழறிää
- இ..இஞ்சதான் வ..வந்தவரே..? எ..ப.. ஒருத்தரும் வரேல்லை. நி..நீங்க பாக்கிறதெண்டால் பாருங்கோ தம்பிமார்..
சிரிக்க முயன்று தோற்றார். குடுமியையும்ää பூநூலையும் தேவையின்றி ஆட்டினார். படையணிப் பொறுப்பாளன் ஒரு விநாடி யோசித்தான். விழிகளைச் சுற்றிலும் சுழல விட்டான். மூலஸ்தானத்தை மட்டும் விஷேஷமாக நோக்கினான். ஐயருக்கு நெஞ்சு காய்ந்து விட்டது. அதை நோக்கி நடந்தான்.
- ஆள் ஒழிய நல்ல இடமொண்டல்லே இது..?
நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். சட்டென ஐயரைத் திரும்பிப் பார்த்தான். அடிவயிறு குத்தீட்டி போல வலித்தது. வியர்த்தது. நடுங்கியது.. சட்டெனத் திரும்பி வந்தான்.
- ஐயரேää என்றான். அவனது பூர்வஜன்ம விழியீர்ப்பு விசையில் கட்டுண்ட ஐயருக்கு ஜன்மப் பகையுணர்வு பீறிட்டது.
- சரி.. போவமென்ன.. ஐயரே மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. நாங்க போட்டு வாறம்..
படையணிப் பொறுப்பாளன் விரைந்து வெளியே நடந்தான். விடுதலைப் புலி வீரர்கள் தொடர்ந்தனர். வெளியே ஜீப் கிளம்பியது. அனைவரும் போனமை உறுதியான பின் ஐயர் மறுபடி கதவுகளைப் பூட்டினார். மூலஸ்தானத்தை நோக்கி ஓடினார்.
- மாரியம்மா.. மாரியம்மா..! என்றார். உள்ளே கருக்கிருட்டில் குனிந்து எட்டிப் பார்த்துää ;லெப்டினன்ட். பகதூர்நாத்’ என்று ரகஸியக் குரலில் கூப்பிட்டார். பச்சடித்த பல்லிபோல உள்ளே ஒட்டிக் கொண்டிருந்த லெப்டினன்ட்.பகதூர்நாத் மெதுவாக ஊர்ந்து வெளியே வந்தான். பயத்தினால்ää விழிகள் வெளுப்பேறியிருந்தன.
வியர்வையில குளித்திருந்தான் உயிர் அபாயத்தில் உயிர் அபயம் தேடிக் கெஞ்சிய அவனது விழிகளை நோக்கிய ஐயர் மறுபடி திடுக்கிட்டார். இன்னொரு யுகத்தின் தொடர் கதையா இதுää யார் இவன்..? ஓல்லாந்து வான்ஸ்டைமன்னா..? இங்கிலாந்து மக்மில்லன் ஹென்றியா..?
- அவர்கள் போய் விட்டார்களா குருஜீ..? ஹிந்தியில் நாக்குழறியபடி கேட்டான் லெப். பகதூர்நாத்.
- போய் மறுபடி வந்தாலும் வரலாம்.. சரளமான ஹிந்தியில் பதிலளித்த ஐயருக்கே தனது மொழி வல்லமை ஆச்சரியமளித்தது. வெகு குழப்பத்துடன் அவனைப் பார்;தார். லெப்டினன்ட். பகதூர்நாத் தடுமாறி எழுந்து மறுபடி ஐயரின் கால்களில் விழுந்தான்.
- குரு ஜீ.. என்று கால்களைக் கட்டிப் பிடித்து உடல் குலுங்கினான். ஏதேதோ சொல்லி அரற்றினான்.
- ஐயோ மாரியம்மா தாயே.. என்ற ஐயர் சற்றே நகர்ந்து ää -எழுந்து நில்லுங்கள் லெப்டினன்ட். பகதூர்நாத்.! இதற்கு மேலும் நான் என்ன செய்யக் கூடும்..?
-ஙா.. என் பெயர் எப்படித் தங்களுக்குத் தெ..?
- ஏதோ அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது..
- குருஜீ.. இருட்டானதும் நானே போய்க் கொள்கிறேன்.. ஆனால்ää குருஜீ.. இதற்கு மட்டும் விடை சொல்லி விட்டு;ப் போங்கள்.. குருஜீ.. தங்களை இதற்கு முன் நான் எப்போதோ எங்கேயோ சந்தித்திருக்கிறேனா..? நான் ஊர் பூனாகட் மாநிலம். வட இந்தியா.. இந்தக் கோயில் கூட ஏதோ கனவில் போல கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது…
- தெரியாது. எனக்கும் அப்படித்தானிருக்கிறது. எல்லாம் மாரியம்மனின் விளையாட்டு..
அவனுக்குள்ளும் ஏதோ ஒரு யுகாந்திர நினைவோட்டம் ஓடுவதை உணர்ந்து கொண்ட ஐயர் வியப்புற்றார். எனினும் காலக்கனவுத் தொடரை ஞாபகிக்கத் தடுமாறினார். அவன் ஐயரை நிமிர்ந்து பார்த்துää
- குருஜீ நானென்ன கைம்மாறு செய்வேன்.. என்னுயிரைக் காப்பாற்றினீர்கள்.. ஒரு தந்தையைப் போல…
- லெப்டினன்ட். பகதூர்நாத்.! இது நிச்சயமில்லை. அவர்களை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். இன்னும் நாம் பத்திரமாக இல்;லை.
- அப்படியானால் ..? என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா குருஜீ..?
- நான் உங்களைக் காப்பாற்றி அனுப்பினேனா அல்லது இருவருமே கொல்லப்பட்டோமா என்பதில்ää எனக்கு வெகு சந்தேகமாக விருக்கிறது.. அது சரியாக ஞாபகத்தில் வருகுதில்லை.. ம்..? தங்களுக்கு ஏதும் நினைவில் தோன்றுகிறதா லெப்டினன்ட் அவர்களே..?
திடுக்கிட்டுப் போன லெப்டினன்ட் பகதுர்நாத்
- எ..என்ன கொ..கொல்லப்பட்டோமா.? நி..நீங்கள் என்ன கூறுகிறீர்கள் குருஜீ அவர்களே..?
அவனால் சரியாக ஊகிக்கவோ ஞாபகத்தில் கொணரவோ முடியவில்லை. ஆனால் அறிய ஆவலுற்றான். இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஐயருக்குள் ஏதோ ஒரு பீதியுணர்ச்சி ஏற்பட்டது. யுகயுகாந்திரமாகத் தொடர்ந்த இந்தச் சம்பவம் இத்தோடும் முற்றுப் பெறாது என்று திட்டமாக மனதில் ஒரு ஞாபக மின்னல் பளிச்சிட்டு மறைந்தது..
- ஐயோ மாரியம்மா தாயே..!
என்றவர் மிக ஆழமாக லெப்டினன்ட். பகதூர்நாத்தின் விழிகளை உற்றுப் பார்த்தார்.. ஆனால்ää அவனது விழிகளில் அந்தப் பழைய ஈர்ப்பு இல்லை. மாறாக பெரும் பீதியில் குத்திட்டு பின்புற யன்னலை நோக்கிக் கொண்டிருந்தது. ஐயரும் அநிச்சையாகத் திரும்பி யன்னலைப் பார்த்த போது..
இரத்தம் உறைந்து போனார். மார்பு படபடவென்று துடித்தது. செய்தலறியாது விறைத்துப் போய்.. சாத்தப்படாத அந்த உயரச் சன்னலின் வழியே ......
‘பிஸ்டல்’ துப்பாக்கியை மிகச் சரியாக குறி பார்த்து நீட்டியபடிää நின்ற விடுதலைப் புலிப் பொறுப்பாளனின் கூரிய இரு குத்தீட்டி விழிகளும் இவர்களிருவரையும் அதே யுகயுகாந்திரப் பகையுணர்ச்சியுடன் பார்த்............
இதன் பின்னர்ää
மீண்டும்
இரண்டாயித்து எண்பத்தி எட்டாம் ஆண்டில் ஒருநாள்ää
2088.05.01 ல் தொடரக் கூடும்..? ஈழநாதம். 1999.
No comments:
Post a Comment